கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,631
Location
chennai
#1
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

ப்பாளி பழத்தில் அப்படி என்னதான் இருக்கு? பப்பாளி சாப்பிடத் தூண்டும் சுவையான பழம். ஒரு துண்டு சாப்பிட்ட பின் இன்னொன்றுக்கு மனம் தாவும். இவ்வளவு தித்திப்பான பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, பீட்டா கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளன.

செரிமான மண்டலம் எளிதாக இயங்க உதவுகிறது. பிரிட்டிஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று பப்பாளியின் காயை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளது. இதைத்தான் நம் மூதாதையர்களும் சொல்லி வந்தார்கள். சரி உண்மையில் பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா? அல்லது வேண்டாமா? கேள்வியோடு கர்ப்பவியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் கல்பனாவிடம் பேசினோம்.

‘‘பப்பாளி நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சத்துமிக்கப் பழம். கிராமங்களில் எந்த விலையும் கொடுக்காமல் பப்பாளி மரத்தில் இருந்து பறித்து சாப்பிடும்
வாய்ப்பு
அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது அவர்களுக்கான வரம்.


இதில் உள்ள ஏ.பி. வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற ரிச்சான சத்துகள் கர்ப்பிணிப்
பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இயல்பிலேயே இந்தப் பழம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

அதுவும் கூட விலங்குகளிடம் செய்யப்பட்ட பரிசோதனையின் அடிப்படையிலேயே சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் மத்தியில் பப்பாளியை காயாக சாப்பிடலாமா என்பது குறித்து இன்னமும் ஆய்வு செய்யப்படவில்லை. நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர்.

இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.

ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது. ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாமே,’’ என்கிறார் டாக்டர் கல்பனா.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.