கர்ப்பிணிப் பெண்கள் செல்லக் கூடாத 11 நாடு&#296

selvipandiyan

Registered User
Blogger
#1
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் (Centers for Disease Control (CDC)) தெற்கு ஆசியாவில் கர்ப்பிணிப் பெண்கள் செல்லக் கூடாத 11 இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 11 இடங்களிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆசியாவின் புரூனி, பர்மா, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், டிமோர் வியட்நாம் என மொத்தம் 11 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிகா வைரஸ் காய்ச்சலானது கொசுவால் தொற்றிக் கொள்ளக் கூடியது ஆகும். அதே சமயம், உடலுறவு கொள்வதன் மூலமாகவும் இந்த வைரஸ் பாதிப்பானது ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றினால் பிரசவத்தின் போது தாய்க்கு மூளையில் பாதிப்பானது ஏற்படலாம்.
மேலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு உடலளவில் பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் உலக அளவில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
 

gkarti

Super Moderator
Staff member
#3
Re: கர்ப்பிணிப் பெண்கள் செல்லக் கூடாத 11 நாடு&

Grrr.. Yarum irukkum Idathil Irunthaal, ellam Sowkiyame.. :p
 

Important Announcements!