கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள*&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ளலாமா?


மீன் உணவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள
லாம். ஏனெனில் மீன்களில்ஒமேகா-3 கொழுப்பு அமி லங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதி கமாக உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங் களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற் கும் பல நன்மைகளை அளிக்கும்.

ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற் படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற் கொள்ளவேண்டும். சில கடல்வாழ்மீன்களில் பாதரசத் தின் தடயங்கள் இருக்கும். இது வயிற்றில் வளரும் சிசுவி ன் வளர்ச்சிக்கு பல ஆபத்துக் களை உண்டு பண் ணலாம்.

மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியேதான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால், சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சி யை இது வெகு வாக பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, மீன்கள் உட்கொ ள்ளும் அளவை குறைத்துக் கொ ள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒருமுறை என மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள்உண்ணும் மீன்பச்சையா க இல்லாமல் நன்றாக சமைக்க ப்பட்டிருக்கவேண்டும். சரியாக சமைக்கப் படாத மீனால், கர்ப்பி ணி பெண்களுக்கு ஒட்டு ண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அத னால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.

வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்க ளை தவிர்த்து விடுவது நல் லது. மாறாக உள்ளூர் குள த்தில் கிடைக்கும் கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ண லாம்.

டப்பாவில் அடைக்க ப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்த்து விடுவது நல்லது.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ள*&a

[h=2]மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன்[/h]கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப்பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய் வில் தெரியவ ந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந் தைக்கு மூளை தொடர் பான நோய் கள் வராம லும் தவிர்க்கலாம் என் றும் தெரிய வந்துள் ளது.

லண்டன் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக் கழக மும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது.

அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ”omega-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ”omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.