கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்

#1
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்க சில டிப்ஸ்
By: Maha Lakshmi S

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். வயிற்றில் குழந்தை வளர்வதால், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.

அதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் சற்று அதிகமாகவே உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இரத்த சோகை வந்தால், அதனால் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வராமல் இருக்க ஒருசில
டிப்ஸ்...

டிப்ஸ் #1

கர்ப்ப காலத்தில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றறில் ஏதேனும் ஒன்றை ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், போதுமான அளவில் இரும்புச்சத்து கிடைக்கும்.

டிப்ஸ் #2

வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் பசலைக்கீரையை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து கிடைத்து இரத்த சோகை வருவது தடுக்கப்படும்.

டிப்ஸ் #3

கர்ப்பிணிகள் அசைவ பிரியராக இருந்தால், ஆட்டு ஈரலை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வராமல் இருக்கும்.

டிப்ஸ் #4


உலர் பழங்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதோடு, இதர சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸ் நேரத்தில் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

டிப்ஸ் #5


கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான கோதுமை பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உட்கொண்டால், உடலால் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்ச உதவும்.

டிப்ஸ் #6


கர்ப்பிணிகள் வைட்டமின் சி அல்லது சிட்ரஸ் பழங்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், இரத்த சோகை வராமல இருப்பதோடு, இருக்கும் இரத்த சோகையும் விரைவில் குணமாகும்.

டிப்ஸ் #7


சமீபத்திய ஆய்வு ஒன்றில் எள் மற்றும் பார்ஸ்லி இலைகள் இரத்த சோகை குணமாக உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
#2
Re: கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக&#3

:) :thumbsup :thumbsup
 

dhivyasathi

Well-Known Member
#4
Re: கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக&#3

Hi. Very very useful sharing. Thanks a lot. Enaku epo hb level down agite iruku. Am trying to increase. This post Wil helps me lot. Thanks
 
#5
Re: கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக&am

Hi. Very very useful sharing. Thanks a lot. Enaku epo hb level down agite iruku. Am trying to increase. This post Wil helps me lot. Thanks
Always you are welcome Satya :) ​Take care.
 
#6
Re: கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக&#3

very useful info.Hb enkum low than frd.
thanks ka:)