கர்ப்ப காலத்தில் கலோரி உணவு அதிகம் தேவை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்ப காலத்தில் கலோரி உணவு அதிகம் தேவை


பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற பெண்களைவிட கொஞ்சம் அதிக கலோரி உணவு கண்டிப்பாக தேவைதான். அதற்காக டபுள் சாப்பாடு எல்லாம் தேவையில்லை. கர்ப்பமுற்ற ஒரு பெண்ணுக்கு வழக்கதைவிட கூடுதலாக 300 கலோரி தேவைப்படுகிறது. அதனை தினமும் எடுத்துக்கொண்டால் அவருடைய உடல் எடை கூடாமல், குறையால் அப்படியே இருக்கும். கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு முதல் 3 மாதத்துக்கு தினசரி 1800 கலோரியும், இரண்டாவது 3 மாதத்துக்கு (அதாவது 4,5,6-வது மாதத்தின்போது) 2200 கலோரியும் 7,8,9-வது மாதங்களில் 2400 கலோரியும் உணவு மூலமாக தினசரி தேவைப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் சரிவிகித சத்துணவுதான் (Balanced nutritional diet) சாப்பிட வேண்டும். மாதம் முழுக்க இட்லி அல்லது தோசை அல்லது சாதம் என்று ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிட்டு கொண்டிருக்க கூடாது. சரிவிகித சத்துணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவது என்பது சாராரண விஷயமல்ல. வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடுவது, சரியான, சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடுவது இவைகள் தான் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க உதவும். அளவான, சரிவிகித சத்துணவை சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப காலத்தில் அதிக எடை போடுவதைத் தவிர்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தற்காலிக சர்க்கரை வியாதியை தடுக்கலாம். சிசேரியன் ஆபரேஷனையும் தவிர்க்கலாம். தாய்க்கு ரத்தசோகை ஏற்படுவதையும், குறைப்பிரவத்தையும் தடுக்கலாம். எடை குறைவாக குழந்தை பிறப்பதையும் தடுக்கலாம். ஆரோக்கியமான பெண் 10 கிலோவிலிருந்து 15 கிலோ வரை எடை கூடலாம். அதற்கு மேல் எடை கூடுவது அசௌவுகரியத்தை தரும். இதேபோல், அதிக எடையுள்ள கர்ப்பிணிபெண் சுமார் 4 1/2 கிலோவிலிருந்து 9 எடை கூடலாம். மிகக் குறைவான எடையுள்ள பெண்கள் 15 கிலோவிலிருந்து 18 கிலோ வரை உடை கூடலாம்.

கர்ப்பமுற்ற பெண் கூடுதலாக தினசரி தேவைப்படும் 300 கலோரி உணவை எந்த வழியில் எடுத்துக்கொள்வது என்ற சந்தேகம் சிலருக்கு வரும். நீங்கள் இனிப்பாகவோ அல்லது நொறுக்கு தீனியாகவோ, எடுத்துகொண்டால் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்காது. கருவிலிருக்கும் குழந்தை தனக்கு தேவைப்படும் வைட்டமின் சத்துக்களையும் தாதுச்சத்துக்பொருட்களையும் தாயின் உடம்பிலிருந்து தான் எடுத்துக்கொள்ளும். எனவே கர்ப்பிணிப் பெண் நன்றாக சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

நொறுக்கு தீனிகள் அவசர உணவுகளுக்கு பதிலாக, 1, அதிக புரோட்டின் உள்ள உணவு 2, குறைவான கொழுப்புள்ள உணவு 3, குறைவான சர்க்கரை உள்ள உணவு இவைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறு கிராம் உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்ட சாக்லெட்டில் 569 கலோரி சக்தி இருக்கிறது. அல்வாவைவிட சாக்லெட்டில் கலோரி சக்தி அதிகமாக இருக்கிறது என்றாலும் கொழுப்பு சத்தும், சர்க்கரை சத்தும சாக்லெட்டில் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் அடிக்கடிஅதிகமாக சாக்லெட் சாப்பிடாதீர்கள் என்கிறோம்.

ஒரு சப்பாத்தியில் 80 கலோரியும், ஒரு இட்லியில் 39 கலோரியும், ஒரு பரோட்டாவில் 300 கலோரியும், ஒரு பெரிய கப் ஓட்ஸ் கஞ்சியில் 300 கலோரியும், ஒரு கப் தயிரில் 90 கலோரியும் சக்தி இருக்கிறது. இது போல ஒரு கப் சாம்பாரில் சுமார் 90 கலோரியும், ஒரு பெரிய கப் பருப்பு கூட்டில் 107 கலோரியும், ஒரு சாதா தோசையில் 95 கலோரியும் ஒரு பெரிய லட்டுவில் 208 கலோரியும் இருக்கிறன்றது.

உங்களது உடம்புக்கு தினமும் தேவைப்படும் கலோரி சக்தி எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம். 100 கிராம் முந்திரிப்பருப்பில் 553 கலோரியும், வேகவைத்த வேர்க்கடலையில் 203 கலோரியும், வறுத்த வேர்க்கடலையில் 854 கலோரியும், வறுத்த பாதாம்பருப்பில் 578 கலோரியும், வறுத்த வாதுமைபருப்பில் (walnut) 654 கலோரியும் சக்தி உள்ளது. எனவே நாம் எந்தேந்த உணவுகளில் எவ்வளவு கலோரி சக்தி இருக்கிறது என்பதை ஓரளவு தெரிந்து கொண்டு, நமது அன்றாட உடல் உழைப்புக்கு ஏற்றாற்போல் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.