கர்ப்ப வாய் புற்று நோய்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
கர்ப்பவாய் புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முக்கியமானதாகக் கருதப்படுவது..

தாம்பத்ய உறவு! ஆம்! ஆண்களுக்கு பிறப்புறுப்பில் சுரக்கும் ஸ்மகானா (smegana) என்ற திரவம், உறுப்பின் மேல் தோலில் போய்த்தங்கும். தினமும் குளிக்கும்போது அவர்கள் அதை சுத்தம் செய்யவில்லை எனில், அங்கு தொடர்ந்து அழுக்கு சேர்ந்து, ஹெச்.பி. வைரஸ் (human papilloma virus) என்னும் வைரஸ் கிருமிகள் வளர ஆரம்பிக்கும். அப்படி வளரும் ஹெச்.பி. வைரஸ்களில், கேன்சரை வரவழைக்கக்கூடிய ஹெச்.பி. 16,17,83 வகை வைரஸ்களும்வளரவாய்ப்புகள் உள்ளன. அப்படி வளர்ந்தால் அது தாம்பத்ய உறவின்போது பெண்ணுக்கும் பரவும். நாளடைவில் அந்த வைரஸ்கள் கர்ப்பவாயில் கேன்சரை உண்டாக்க வாய்ப்புள்ளது. அதற்காக தாம்பத்யமே ஆபத்து என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஆணுறை உபயோகிப்பதன் மூலமும், உறவு முடிந்ததும் பெண்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதன் மூலமும் இந்த ஹெச்.பி. வைரஸால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்

அடுத்ததாக, கர்ப்பவாயில் ஏற்படக்கூடிய புண்ணும் கவனிக்காமல் விட்டால் கேன்சராக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

கர்ப்பவாய் கேன்சரை கண்டுபிடிப்பது

ஒழுங்கான மாதவிடாய் ஏற்பட்டாலும், அதில் கூடவே வெள்ளைப்படுதல் ஏற்படுவது.
'இன்டர் மென்ஸ்சுரல் ப்ளீடிங்' (inter menstural bleeding) எனப்படும் மாத விடாய் சமயம் அல்லாதபோதும் ஏற்படுகிற ரத்தப் போக்கு.
'போஸ்ட் காய்டல்' (post coital) எனப்படும் தாம்பத்ய உறவு முடிந்ததும் ஏற்படும் ரத்தப் போக்கு (முதல் முறை உறவு கொள்ளும்போது ரத்தப் போக்கு ஏற்படுவது இயல்பே. பல நாள் தாம்பத்யத்துக்குப் பிறகு இப்படி ஏற்படுவதுதான் சந்தேகத்துக்குரியது).
அடிவயிற்றில் எப்போதும் ஒரு கனமான வேதனை இருப்பது போன்ற உணர்வு.
அடிக்கடி சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது.
கை, கால் குடைவது போன்ற உணர்வு.
மலம் கழித்துவிட்டு வந்த பின்பும் மீண்டும் மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு.
மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென் பட்டாலும் உடனடியாக 'பேப் ஸ்மியர்' (pap smear) என்ற பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்ப வாயில் இருந்து உதிரக்கூடிய செல்களை எடுத்து பரிசோதிப்பதுதான் 'பேப் ஸ்மியர்' பரிசோதனை. கர்ப்பவாய்ப் புற்றுநோயை கண்டறிவதற்கான முதல்கட்ட பரிசோதனை இது.


இதில் கேன்சருக்கான சந்தேகம் தென்பட்டால், உடனடியாக கர்ப்பப்பையில் இருந்துகுறிப்பிட்ட அளவு சதை எடுத்து 'கோல்போஸ்கோபி' (colposcopy)என்கிற கருவியின் மூலமாக பரிசாதனை செய்து பார்க்க வேண்டும்.


இதன் மூலம் கர்ப்பவாய்ப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சையின் மூலம் நோய் பாதித்திருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விடுவோம். அதன் பிறகு கேன்சர் பரவினால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும்.

கர்ப்பவாய் கேன்சரைப் பொறுத்தவரை அங்கிருக்கும் நமது உடலின் செல்கள் கேன்சர் செல்களாக மாற 11 முதல் 13 வருடங்கள் ஆகும்

கர்ப்பவாயில் கேன்சர் செல்கள் தோன்றி விட்டால் பிறகு ஐந்தே வருடங்களில் அது அபரிமிதமாக வளர்ந்து ஆபத்தான நிலையை எட்டி விடும். அந்த வளர்ச்சியை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்..


முதல் நிலை: கேன்சர் செல்கள் கர்ப்பவாயில் மட்டும் தோன்றி, இரண்டரை வருடங்களுக்கு அங்கேயே வளர்ச்சியடையும்.


இரண்டாம் நிலை: அடுத்த ஒன்றரை வருடங்களில் கேன்சர் செல்கள் கர்ப்பவாயில் இருந்து குழந்தை பிறக்கும் வழியை நோக்கியோ அல்லது கர்ப்பவாயைத் தாங்கும் தசை நார்கள் (ligaments) வரையிலோ பரவியிருக்கும்.மூன்றாம் நிலை: அடுத்த பத்து மாத இடைவெளியில் சிறுநீர்ப்பை, மலக்குடல் தவிர, அடிவயிற்றின் மற்ற எல்லா உள் உறுப்புகளிலும் கேன்சர் பரவ ஆரம்பித்திருக்கும்.


நான்காம் நிலை: சிறுநீர்ப்பை, மலக்குடல் ஆகியவற்றையும் தாக்கிவிட்ட கேன்சர், அடிவயிறு தாண்டி வயிற்றின் மேற்பகுதி வரை எட்டியிருக்கும். கல்லீரல், நுரையீரல் போன்றவை கூட பாதிக்கப்பட்டிருக்கும் ஆபத்தான நிலைதான் இது
.

ஆனால், இந்த நான்கு நிலைகளில் எந்த நிலையில் கேன்சர் கண்டிபிடிக்கப்பட்டாலும், அதை குணப்படுத்திவிட முடியும்


முதல் நிலை: இந்த நிலையில் கர்ப்பவாயில் வளர்ச்சி அடையும் கேன்சர் செல்களை 'வெர்தீம்ஸ்' (Wertheim’s) என்ற அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். உடலில், 'வி' வடிவ துளை ஒன்று போட்டு, கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விடுவதே இந்த அறுவை சிகிச்சையின் தன்மை. அறுவை சிகிச்சையை விடவும் சக்தி வாய்ந்த 'ரேடியோதெரபி' எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சையை அளிக்கலாம். இதில் வெளிக்கதிர்வீச்சு, உள்கதிர்வீச்சு என்று இரண்டு வகைகள் உள்ளன. கேன்சர் முதல் நிலையில் இருக்கும்போது வெளிக்கதிர்வீச்சு முறையே போதுமானது.


வெளிக்கதிர்வீச்சு முறையில் உடலுக்கு வெளியிலிருந்தே கதிர்வீச்சு கர்ப்பவாயை நோக்கி செலுத்தப்பட்டு, புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.


இரண்டாம் நிலை: கர்ப்பவாயிலிருந்து குழந்தை பிறக்கும் வழிவரை கேன்சர் பரவியிருக்கும் இந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலாது. எனவே, நோயின் தீவிரத்தைப் பொறுத்து வெளிக்கதிர்வீச்சு அல்லது உள்கதிர்வீச்சு மூலமாக சிகிச்சை அளிக்கப்படும்.


உள்கதிர்வீச்சு முறையில், பிறப்புறுப்பு வழியாக கர்ப்பவாயை நோக்கி மெல்லிய குழாய்களைப் பொருத்தி, அவற்றின் வழியே குறிப்பிட்ட இடங்களுக்கு கதிர்வீச்சு செலுத்தப்பட்டு, அங்குள்ள கேன்சர் செல்கள் அழிக்கப்படும்.


மூன்றாம் நிலை: அடிவயிற்றின் உள் உறுப்புகளிலும் கேன்சர் பரவியிருக்கும் இந்நிலையில் 'கீமோதெரபி' மூலம் சிகிச்சை அளிக்கப்படும். கை நரம்புகளில் கேன்சர் செல்களை அழிக்க கூடிய மருந்துகளை செலுத்துவதே 'கீமோதெரபி'. இந்த சிகிச்சையின்போதே பாதிக்கப்பட்ட இடங்களில் உள் கதிர்வீச்சும் கொடுக்க, கேன்சர் செல்கள் வேகமாக அழிக்கப்படும்.


நான்காம் நிலை: மேலே குறிப்பிட்ட அதே சிகிச்சைதான் இந்த நிலைக்கும். ஆனால், நோயின் வீரியம் அதிகம் இருப்பதால், மருந்துகளின் அளவு அதிகரிக்கும். அடுத்தடுத்த 'சிட்டிங்'குகளுக்கான கால இடைவெளி குறையும்


மருத்துவர்கள் தரும் அறிக்கைகளின்படி, 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட 5% வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஆனால், 40-50 வயதுப் பெண்களுக்கு இந்நோய் வர 25% வாய்ப்பு இருக்கிறது. இதே ஆபத்து 50-70 வயதுப் பெண்களுக்கு 70% ஆக இருக்கிறது.
அன்புடன் ,
விஜி
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
கர்ப்பப்பை வாய் புற்று நோய்

நகர பெண்களுக்குஅதிகம் பரவும்கர்ப்பப்பை வாய் புற்றுநோய் - அடையாறு புற்று நோய் மையத் தலைவர் டாக்டர் சாந்தா: மார்பகப் புற்றுநோய் போல், கர்ப்பப்பை வாய் புற்று நோயால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய், பெரு நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு அதிகம் உள்ளது. நாட்டில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சென்னையில் அதிகமாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்று நோய் பற்றி, நிறைய தவறான எண்ணங்கள் உள்ளன."போப்பலோமா' என்ற வைரஸ் இதற்கு காரணம். இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதை கண்டறிவது கடினம்.

கிடைக்கும் தடுப்பு மருந்துக்கே ஒரு முறைக்கு ஆறாயிரம் ரூபாய் செலவாகும். தனியார் மருத்துவமனையில், இன்னும் அதிக விலைக்கு மருந்தை விற்கின்றனர்.மார்பகப் புற்றுநோய், மரபணு சம்பந்தப்பட்டது. குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், மற்றவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
முக்கியமாக, தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. தற்போதுள்ள, சமூகச் சூழலில், திருமணமாகாதவர்களுக்கும் வராது என்று சொல்ல முடியாது. சுகாதாரமற்ற தன்மை, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற வேறு சில கரணங்களும் உண்டு.சமூக, பொருளாதார நிலையில், பின்தங்கிய பெண்களுக்கு அதிக கர்ப்பப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.தடுப்பு மருந்து, முற்றிலும் பாதுகாப்பானது என்று கூற முடியாது. குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து, மூன்று முறை தடுப்பு மருந்து போட வேண்டும். மானிய விலையில்
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
Re: கர்ப்பப்பை வாய் புற்று நோய்

Thanks for the useful information Sumathi... But fulla post pannaliye...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.