கற்பத்தில் தவிர்க்க கூடாத சில அறிகுறிகள&

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
ஏதோ சரில்லை: கற்ப காலத்தில் உங்களுக்கு உங்கள் உடம்பில் நிகழும் மாற்றங்கள் எதோ சரி இல்லை என்று தோன்றினால், அதை தவிற்காமல் உங்கள் உள்ளுணர்வின் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் உடனே மருத்துவரை அணுகவும். ஒரு வேலை ஏதாவது சிக்கல்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடலாம்.. இல்லையென்றால் எல்லாம் நல்ல படியாக தான் சென்று கொண்டு இருக்கிறது என்று நிம்மதியாவது உங்களிடம் இருக்கும்.


உங்கள் நடு பகுதியில் வலி - தீவிரமான, கூர்மையான வலி (கூடவே குமட்டல் உணர்வு இருந்தாலோ,இல்லை என்றாலும் கூட) உங்கள் மேல் மற்றும் நடு வயிற்று பகுதியில் இருந்தால், அதற்கு பல காரணங்கள் இருகின்றது. சரியாக சீரணம் ஆகாமல் இருக்கலாம், வயிற்றில் பூச்சி இருக்கலாம், அல்லது pre - eclampsia வுடைய சாற்றுகூராகவும் இருக்கலாம். அதனால் அதற்கு உடனடி மருத்துவ உதவி அவசியம்.


காய்ச்சல் - உங்களுக்கு வேற எந்த சளி மற்றும் ஃப்ளு வின் அறிகுறி இல்லாமல் 100 டிகிரி க்கும் அதிகமாக காய்ச்சல் இருந்தால் நீங்கள் உங்கள் டாக்டரிடம் செல்லுங்கள். உங்கள் காய்ச்சல் 102 டிகிரிக்கும் அதிகமாக இருந்தலால்,காலம் தாமதிக்காது உடனே உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள். ஏன் என்றால், இன்பிக்ஸியன் ஆக இருக்கலாம். உங்கள் மருத்துவர் அண்டிபையடிக்ஸ் தந்து உங்கள் காய்ச்சலை குறைக்க கூடும்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#2
Re: கற்பத்தில் தவிர்க்க கூடாத சில அறிகுறிக&#29

பார்வையில் மாற்றம் - நீங்கள் சாதரணமாக பார்க்கும் பொழுது இரட்டை காட்சிகளாக தெரிந்தாலோ, பார்வை மங்கி தெரிந்தாலோ,புள்ளிகள் மின்னி மறைந்தாலோ, இரண்டு மணி நேரத்திருக்கும் மேலாக உங்கள் பார்வையில் ஒளி மறையாமால் இருந்தாலோ, நீங்கள் உடனே டாக்டரை அணுகவும். ஏன் என்றால் இது pre - eclampsia வுடைய அறிகுறிகள்.


கை,முகம்,கால்,கண் வீக்கம்/தீவிரமான தலைவலி - உங்கள் கர்பகாலத்தில் கை,கால், முகம் அல்லது கண் வீக்கம் நடக்ககூடியவையே. அனால் திடீரென்றோ ,தீவிரமாகவோ இந்த வீகதுடன், தலைவலி மற்றும் பார்வை மற்றம் ஏற்பட்டால் அது pre - eclampsia வுடைய அறிகுறிகள். மருத்துவ ஆலோசனை மிகவும் அவசியம்.


திடீர் உடல் எடை கூடுதல்- கர்பகாலத்தில் உடல் எடை கூடுதல் அவசியம். ஆனால திடீர் என்று உடல் எடை அளவிற்கு அதிகமாக அதாவது, ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோ கூடுதல் pre - eclampsia
வின் அறிகுறி.


இரத்த போக்கு- கற்பம் தரிக்கும் பொழுது சிறிய இரத்த கசிவு நிகழ்வது தான், ஆனாலும் உங்கள் கற்ப காலத்தில் நீங்க( spotting /bleeding ) சிறிய இரத்த கசிவு ஏற்பட்டாலும் உடனே டாக்டரை அணுகவும். ஏன் என்றால் அதற்கு கற்ப சிதைவு, வெற்றிடசூழ் (ectopic pregancy ) அல்லது placenta previa காரணமாக இருக்கலாம்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#3
Re: கற்பத்தில் தவிர்க்க கூடாத சில அறிகுறிக&#29

அதிக தாகம்- உங்களது சிறுநீர் கழிப்பு குறைந்து,திடீர் என்று உங்களுக்கு அதிக தாகம் ஏற்பட்டால் அதற்கு டிஹாய்ட்ரேசன் அல்லது கற்ப சர்க்கரை நோய் காரணமாக இருக்கலாம். இதனை உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரியபடுத்த வேண்டும்.இது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் கேடு விழைவிக்கும்.


தீவிர வாந்தி - கற்பகாலத்தின் ஆரம்ப பகுதியில் வாந்தி எடுப்பது சாதாரணமே என்றாலும் இதை உங்கள் டாக்டரிடம் சொல்லி ஆலோசனை கேட்க வேண்டும்.
கற்பகாலத்தின் கடைசி மாதங்களில் வாந்தி தீவிர மாக இருந்தாலோ, வாந்தியுடன் தலைவலி அல்லது உடல் சூடு அதிகமாக யுர்ந்தாலோ உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.


தலை சுற்றல் /மயக்கம் - நீங்கள் அந் நாளுக்கு சரியாக சாப்பிடவில்லை என்றால் தலை சுற்றல் மற்றும் மயக்கம் வர வாய்ப்புள்ளது. அதுமட்டும் இன்றி உங்கள் இரத்த கொதிப்பு கம்மியாக இருந்தாலும் இதற்க்கு வாய்ப்புள்ளது, அதனால் உங்கள் டாகடரை அணுகி எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது என்று உறுதி செய்தல் அவசியம்.


அரிப்பு - கற்ப காலத்தில் கடைசி மாதங்களில் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுதல் மஞ்சள் காமாலை வந்தோ வராமலோ, அடர் சிறுநீர், வெளிறிய மங்கலான nirathil மலம் இவை அனைத்தும் ஹெபிடிடிஸ் அல்லது ஈரல் ப்ரிச்சனையின் அறிகுறி. அதனால் அதை தவிர்க்க வேண்டாம்.
சில அரிப்பு உங்கள் தோல் உங்கள் வளரும் குழந்தைக்காக விரிவு கொடுக்கும் பொழுது ஏற்படும். அது சாதாரண நிகழ்வே..எதற்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#4
Re: கற்பத்தில் தவிர்க்க கூடாத சில அறிகுறிக&#29

வயிற்றில் குழந்தையின் அசைவு குறைதல் -
இருபத்தி இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் அசைவை கணக்கிட வேண்டும். சுமார் இருபத்தி நான்கு மணி நேரதிருக்கும் மேல் குழந்தையின் அசைவு இல்லாமலோ அல்லது வழக்கத்தை விட குறைந்து இருந்தாலோ குழந்தை உள்ளே எதோ அழுத்தத்தில் இருக்கிறது என்பது அறிகுறி. எனவே சிறிதும் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகவும்.

கீழே விழுதல்/வயிற்றில் குத்து வாங்குதல் - எல்ல நேரங்களிலும் கீழே விழுதலும், வயிற்றில் குத்து வாங்குதலும் அபாயம் இல்லை என்றாலும், சில நேரங்களில் மிகவும் ஆபத்தானவை. கீழே விழுந்து உங்கள் முதுகு தண்டில் அடி பட்டால் பல நேரம் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. அது உங்கள் கற்ப பையில், அமிநியாடிக் நீரில் நன்றாக இருக்கும். அனால் உங்களுக்கு பின் விளைவுகள் ஏற்படலாம். உங்களுக்கு இடுப்பு வலி, நீர் கசிவு, இரத்த போக்கு இவை எதாவது நீங்கள் விழிந்த பின் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுகுங்கள். அறிகுறிகளை தவிர்காதிர்கள்.


நீர் கசிவு- முப்பத்தி ஏழாவது வாரத்திற்கு முன்பாக (pre mature )உங்கள் பிறப்புறுப்பின் வழியாக நீர் கசிந்தால், உங்கள் ப்ரிசவ காலத்திற்கு முன்பாகவே உங்கள் நீர்க்குடம் உடையும் தருவாயில் இருக்கிறது, குறை ப்ரிசவதிர்க்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம். உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், உங்க மருத்துவர் இன்பிக்ஸியன் ஆகாமல் சிகிச்சை அளிப்பார். 37 வாரங்களுக்கு(புல் டெர்ம்) பிறகு ஏற்பட்டால், நீங்கள் பிரசவிக்க நேரம் வந்து விட்டது என்றும் அர்த்தம். அதனால் உடனே நீர் குடம் உடைத்தால் மருத்துவமனை செல்லவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.