கற்றாழையை கையில் எடுங்க- Aloe-vera helps in Hair care

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நமது தலையின் தோல் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற்கும் தொல்லை தரும் தொற்றுண்ணியை தான் பொடுகு என்கிறோம். பொடுகுகளால் நமது தலையில் எரிச்சல் மற்றும் அதீத வறட்சித்தன்மை ஏற்பட்டு விடும். கற்றாழையில் உள்ள பெக்டின் என்ற வேதிப்பொருளுக்கு புதிய திசுக்கள் மற்றும் செல்களைத் தூண்டவும், உருவாக்கவும் கூடிய குணங்கள் உள்ளன. முடி ஆரோக்கியமாக இருப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நன்றாக ஊடுருவிச் செல்வதற்கு இந்த பெக்டின் உதவுகிறது. இறந்த சரும செல்கள் மற்றும் சரும பகுதிகளை உடனுக்குடன் நீக்கிட இது உதவுவதால், பொடுகுத் தொல்லையிலிருந்து சாதாரணமாக விடுபட முடியும். புதிய, ஆரோக்கியமான திசுக்களால் ஆரோக்கியமான தலைமுடியை பெற்றிட முடியும். கற்றாழையை கொண்டிருக்கும் மிதமான ஷாம்பு போட்டு, உங்களுடைய தலைமுடியை அலசி விட்டு, சரியான முறையில் குளிர்ந்த நீரில் முடியை அலசவும். எனினும், கற்றாழையை கொண்டிருக்கும் அந்த ஷாம்பு அல்லது கண்டிஷனரில், வேறு ஏதாவது சோடியம் லாரில் சல்பேட் போன்ற நச்சுப் பொருட்கள் இல்லாமலிருப்பதை பார்த்துக் கொள்ளவும். பொடுகுகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட உதவும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.கற்றாழை ஜெல் அல்லது சாற்றை உங்களுடைய தலையின் தோலில் நேரடியாகத் தடவி, மென்மையாக மசாஜ் செய்து விடவும். குளிப்பதற்கு முன்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த ஜெல் உங்களுடைய தலையில் இருக்க வேண்டும். இந்த வழிமுறைiயில் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 முறையாக, 15 நாட்களுக்கு செய்து வந்தால், பொடுகுகள் காணவே காணோம்!!

சொரசொரப்பான, எரிச்சல் மிகுந்த சருமங்களுக்கு இந்த குளிர்ச்சியான கற்றாழை ஜெல் மிகவும் உகந்ததாகும்.சிறிதளவு வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் வெந்தயத்தை வெளியிலெடுத்து அரைக்கவும். அரைக்கப்பட்ட வெந்தயத்துடன், கற்றாழை சாற்றை சேர்த்து உங்களுடைய ஸ்கால்ப்பில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையற்ற எண்ணைய் மற்றும் பூஞ்சைகளின் பிடியிலிருந்து விடுபட முடியும். இந்த வழிமுறையில் உடனடியாக பலன் கிடைக்காதெனினும், சில நாட்களுக்குப் பின்னர் பலன் வெளியெ தெரியும்.

கற்றாழை ஜெல்லுடன், யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து பசையாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பசையை உங்களுடைய ஸ்கால்ப்பில் தடவி விட்டு, மசாஜ் செய்யவும். இந்த பசையை உங்களுடைய தலையில் சுமார் 1 மணிநேரத்திற்கு வைத்திருந்து விட்டு, சாதாரண தண்ணீரில் முடியை அலசவும். இந்த இயற்கையான மூலிகைகளில் கலந்துள்ள குணப்படுத்தும் காரணிகள், உங்களுடைய தலைமுடியையும், ஸ்கால்ப்பையும் சுத்தம் செய்கின்றன. இந்த வழிமுறையை கடைப்பிடிப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தத் தேவையில்லை

.புதிதாக எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு தன்னிச்சையாகவே பொடுகுகளிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குணமுடையதாகும். எனவே, பொடுகு விஷயத்தில் மிகவும் பலனுள்ளதாக எலுமிச்சை சாறு உள்ளது. பாதியளவு எலுமிச்சையை அறுத்து, அதன் சாற்றை காற்றாழை ஜெல்லுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஸ்கால்ப்பில் தடவி விட்டு, 1 மணிநேரம் பொறுத்திருங்கள். அதன் பிறகு தலைமுடியை அலசி விட்டு, மென்மையான ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.ஷாம்பு போடுவதற்கு முன்னதாக, கற்றாழை சாற்றை தடவிக் கொள்வது பொடுகுகளை தலைமுடியிலிருந்து அழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழையில் உள்ள இயற்கையான பொருட்கள் இறந்த செல்களை நீக்கவும் திறமையாக நீக்கவும், தலைமுடியை போதுமான அளவு ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும், சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கவும் மற்றும் மீண்டும் பொடுகுகள் வராமல் தடுக்கவும் கற்றாழை உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கற்றாழையை நன்றாக தலையில் தடவி விட்டு, 10 நிமிட நேரத்திற்கு காத்திருப்பது மட்டுமே. இதற்குப் பின்னர், ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அரை கோப்பை கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டு, அதனுடன் 2 தேக்கரண்டி விளக்கெண்ணெயையும், 2 தேக்கரண்டி வெந்தயத் பொடியையும் மற்றும் துளசி பொடியையும் கலந்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலக்கிக் கொண்டு, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பை முழுமையாக மூடும் வகையில் போட்டுக் கொள்ளவும். ஷவர்-கேப் போட்டுக் கொண்டு, படுக்கையில் உறங்கச் செல்லவும். காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீரும், சிறதளவு ஷாம்புவும் போட்டு நன்றாக கழுவி இந்த கலவையை நீக்கி விடவும். இந்த ஊட்டசத்து மற்றும் சிகிச்சையளிக்கும் குணமுடைய கலவை ஒரே நாளில் உங்களுடைய ஸ்கால்ப் மற்றும் தலைமுடியை சுத்தம் செய்திடும். முடியை கண்டிஷனிங் செய்வதிலும், பொடுகுகளை விரட்டுவதிலும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் இந்த மாஸ்க் மிகவும் பயனள்ளதாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த மாஸ்க் வழிமுறையை பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
 

Attachments

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Very useful info Jeya.
Enakku irukkira theeratha pirachanai en mudithan.
Podugu illai endraalum, varatchi matrum mudi kottuthal eppothum undu.
Intha muraiyai try panni parkiren.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Very useful info Jeya.
Enakku irukkira theeratha pirachanai en mudithan.
Podugu illai endraalum, varatchi matrum mudi kottuthal eppothum undu.
Intha muraiyai try panni parkiren.
Sure aa pannunga sis.....it suits for all hair types.....personel aa naney use pannittu irukken. So neenga dhairiyama try pannalam.......:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.