கற்றுக் கொள்வோம்... கால்சியம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கற்றுக் கொள்வோம்... கால்சியம்!

சமீபகாலமாக ஆண், பெண் இருபாலருக்கும் வரும் முக்கிய நோய்களில் முதன்மையான நோய்கள் சிறுநீரகத்தில் கல் மற்றும் தீராத மூட்டு வலி. இரண்டுக்கும் காரணம் கால்சியம்!

'கால்சியம் என்றால் என்ன?'
'கால்சியம் நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியத் தாது உப்பு. நம் பற்களிலும் எலும்புகளிலும், ரத்தத்திலும், தசைகளின் செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது. கருவில் வளரும் குழந்தைக்கு மூன்றாவது மாதத்தில் இருந்தே தாய் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் கிடைக்கத் தொடங்குகிறது.'

'கால்சியத்தால் என்ன பயன்?'
'உடல் எலும்புகளின் கட்டுமானத்துக்கும், உறுதிக்கும், பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது கால்சியம். தசைகள் சுருங்கி விரிவடையவும், ரத்த நாளங்கள் சீராக இயங்கவும், இன்சுலின் உள்ளிட்ட ஹார்மோன் சுரப்பதற்கும், நொதிப்பதற்கும், கால்சியம் மிகவும் உதவுகிறது.

''கால்சியம் பற்றாக்குறை எப்போது ஏற்படும்?''
''30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத் தொடங்கும். இதனால், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல் சோர்வு ஏற்படும்.

உடலில் கால்சியம் சேருவதையும் சிறுநீரகம் மூலமாக வெளியேறுவதையும் உறுதிப்படுத்துவது 'பாராதைராய்டு’ (PARATHYROID) ஹார்மோன். கால்சியம் அளவு குறையும் போது இந்த பாராதைராய்டு சுரப்பியானது எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் சேர்க்கிறது.'

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
'கால்சியம் உணவுகள் எவை?'

'பால் பொருட்கள், கீரை, வெண்டக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை, மீன், கடல் உணவுகள், பாதாம், சூரிய காந்தி, எள் விதைகள், ராகி, கம்பு, சோளம், சிறு தானியம், பட்டாணி, சோயாபீன்ஸ், சுண்டல் ஆகிய உணவுப் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.'

'கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'
''உடம்பைக் குறைக்கிறேன் என்று சிலர் மேற்கொள்ளும் தீவிர உணவுக் கட்டுப்பாட்டால், உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்்கிறது. ரத்தத்தில் கால்சியம் குறைவதால் 'ஹைபோகால்சிமியா’ (HYPOCALCEMIA) என்ற நோய் வரலாம்.

விரல்களில் உணர்வின்மை, தசைப்பிடிப்புகள், வலிப்பு, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஹைபோகால்மியாவியால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும். மேலும் கால்சியம் குறைபாட்டால் இதயப் பாதிப்புகளும் வரக்கூடும். பெரும்பாலான பெண்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதற்கும், முக்கியக் காரணம் கால்சியம் குறைபாடே.'


 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
'கால்சியம் அதிகரிப்பது பற்றி..?'

'ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் சேர்ந்தால், 'ஹைபர்கால்சிமியா’ (hypercalcemia) எனும் நோய் வரும். இந்த நோய் சிறுநீர்் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதற்குக்் காரணமாகிவிடுகிறது. உணவின் மூலம் கால்சியம் அதிக அளவு சேர்வதால், சிறுநீரகக் கற்கள் உருவாவது இல்லை, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, புரதம், சர்க்கரை, பாஸ்பரஸ், மக்னீஷியம், மற்றும் மன அழுத்தம், வைட்டமின்டி குறைபாடு, உடற்பயிற்சி இன்மை இதெல்லாம் தான் கால்சியம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறுவதில் தடை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தான் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க முடியும்.'

சக்தி கொடு!

[TABLE]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
சின்ன உடல்நலக் கோளாறுகூட, ஒட்டுமொத்த உடலையும் சோர்வடையவைத்துவிடும். இன்றைய வாழ்க்கை முறையில், அனைவரையுமே ஏதாவது ஒரு உடல்நலப் பிரச்னை உலுக்கி எடுத்துக் கொண்டேயிருக்கிறது. அதிலும் பெண்களுக்கு, எலும்பு அடர்த்தி குறைவு, உடல் பருமன், மன அழுத்தம், மெனோபாஸ் நிலை, கர்ப்பம் தொடர்பான பிரச்னைகள் என அதிகமாகப் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்டு, கடைசியில் எஞ்சியதை உண்டு வாழும் பழக்கம் இன்றும் சில பெண்களுக்கு உண்டு. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாதது வேதனைக்குரிய விஷயம். இதனால், பல்வேறு ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். பெண்கள் உண்ணும் உணவில் தவறவிடும் ஊட்டச் சத்துக்களையும், அதைத் தவிர்க்கும் வழிகளையும் பட்டியலிடுகிறார் மூத்த டயட்டீஷியன் பி.வி.லட்சுமி.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
கால்சியம்

வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்து. எலும்பு நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பது உள்ளிட்ட சில பணிகளுக்கு கால்சியம் மிகவும் அவசியம். பற்கள் ஆரோக்கியமாக உருவாகவும், தசைகள் மற்றும் இதயம் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ளவும் கால்சியம் அவசியம். நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 மி.கி வரை ஒருவருக்கு கால்சியம் தேவை. ஆனால் 500 முதல் 600 மி.கி கால்சியமே கிடைக்கிறது.

கீரைகள், பால் பொருட்களில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. தினந்தோறும் 300 மிலி பால் மற்றும் தயிர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு உருண்டை, கேழ்வரகு சப்பாத்தி அல்லது தோசை என ஒரு வேளை மட்டும் கேழ்வரகால் தயாரான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கப் அளவுக்கு பச்சைக் காய்கறிகள், கீரை சேர்த்துக்கொள்ளலாம். அகத்தி, முளைக்கீரை, பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை போன்றவற்றில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் சத்துக் குறைபாட்டை முழுமையாய் தவிர்க்கலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
பொட்டாஷியம்

எலெக்ட்ரோலைட்களில் முக்கியமானது பொட்டாஷியம். தசை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கவும் பொட்டாசியம் பெரிதும் உதவுகிறது. போதுமான அளவு பொட்டாஷியம் கிடைக்கவில்லை எனில், சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகள் தோன்றும். இதைத் தவிர்க்க பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், சோடியம் அளவைக் குறைக்க வேண்டும். இந்த இரண்டு தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பது மிகவும் அவசியம். ஒன்று அதிகமானாலும் பிரச்னைதான். நாள் ஒன்றுக்கு 4,700 மி.கி. அளவுக்கு பொட்டாஷியம் தேவை. ஆனால் இதில் பாதி அளவுக்குத்தான் நமக்கு கிடைக்கிறது.


பொட்டாஷியம் தாவர உணவுகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. தினமும் உணவில் போதுமான அளவு காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களில் சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, சீதா பழம், மாம்பழம், செர்ரி, தர்பூசணி, வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிளாஸ் இளநீரில் ஒரு நாளைக்குத் தேவையானதில் 15 சதவிகித பொட்டாஷியம் உள்ளது. காய்கறிகளில், முருங்கைக்காய், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, கொத்துமல்லி, சேப்பங்கிழங்கு, உருளை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
மக்னீசியம்

நம் உடலில் நடக்கும் நூற்றுக்கணக்கான ரசாயன செயல்பாடுகளுக்கு மக்னீசியம் அவசியம் தேவை. உடலில் உள்ள செல்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கவும், கர்ப்ப காலத்தில் காலில் நரம்பு புடைத்தல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கவும், சோர்வைப் போக்கவும் மக்னீசியம் தேவை. ஒரு நாளைக்கு 350 மி.கி. அளவுக்கு மக்னீசியம் தேவை. ஆனால் இதில் 260 மி.கி. என்ற அளவுக்கே கிடைக்கிறது.

நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் மக்னீசியம் நிறைவாக உள்ளது. மக்னீசியம் குறைபாட்டைத் தவிர்க்க புரூகோலி, பச்சை காய்கறிகள், வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் மக்னீசியம் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும். பாதாம், முந்திரி, வால்நட் போன்ற விதைகள் மற்றும் பருப்பு வகைகளிலும் மக்னீசியம் உள்ளது. தவிர காபி, சாக்லெட் போன்றவற்றிலும் உள்ளது. இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மக்னீசியம் பற்றாக்குறையைத் தடுக்கலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
வைட்டமின் ஏ

பார்வை தொடர்பான வைட்டமின் இது. நோய் எதிர்ப்பு மண்டலம், வளர்ச்சி, குழந்தைப்பேறு, எலும்பு வளர்ச்சி, ரத்த செல் உருவாக்கம், தோல், ஈறு உள்ளிட்ட திசுக்கள் ஆரோக்கியம் எனப் பல்வேறு பணிகளைச் செய்கிறது. பெண்களுக்கு வைட்டமின் ஏ ஊட்டச் சத்தானது பருக்கள், உலர் கண், நீர்க் கட்டிகள், குறைப்பிரசவம், கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 700 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ தேவை. ஆனால் 550 மைக்ரோ கிராம் என்ற அளவில்தான் வைட்டமின் ஏ கிடைக்கிறது.

மஞ்சள் நிறக் காய்கறி பழங்களில் கரோட்டின்கள் நிறைவாக உள்ளது. இந்த கரோட்டின்கள் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும். தவிர பச்சைக் காய்கறிகளில் கீரைகள், கொத்துமல்லி, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கிக் கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஏ உள்ளது. பழங்களில் மாம்பழம், பப்பாளி, தக்காளியிலும் கரோட்டின் உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் வெண்ணெய், நெய், பால், தயிர், முட்டை மஞ்சள் கரு, கால்நடைகளின் கல்லீரல் மற்றும் மீன் எண்ணெயிலும் இந்த வைட்டமின் நிறைவாக உள்ளது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
வைட்டமின் ஈ

ஆக்சிடேஷன் எனப்படும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனானது உடலுக்கு எதிரான பொருளாக மாறும் தன்மையைத் தடுக்கும் ஆற்றல், இந்த வைட்டமினுக்கு உண்டு. அதனால் இதை மிகச் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் என்று சொல்வார்கள். சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும், புறஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து சருமத்துக்கு நிறம் கூட்டி பாதுகாப்பு அளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், வயதானவர்களுக்கு அல்சீமர் எனப்படும் மறதிநோய் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றலும் வைட்டமின் ஈ-க்கு உண்டு. ஒரு நாளைக்கு 15 மி.கி. வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. ஆனால் ஒருவரால் 55 சதவிகிதம் அளவுக்குத்தான் பெற முடிகிறது.

வைட்டமின் ஈ உணவு சமைத்தலின்போதும், உணவு பதப்படுத்தும்போதும் எளிதில் மறையக்கூடியது. விதைகள், சூரியகாந்தி விதை, எண்ணெய், கீரை, பாதாம், வால்நட் மற்றும் பப்பாளி, கிவி போன்ற பழங்களில் வைட்டமின் ஈ உள்ளது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.