கலோரி குறைவான சில உணவுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கலோரி குறைவான சில உணவுகள்




ஏழைகளின் எளிய உணவாக அவரைக்காய், மொச்சை போன்றவை போற்றப்படுகின்றன.

அதே நேரத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், தனிச்சிறப்பு வாய்ந்த புரதச் சத்து, வாரத்திற்கு இரண்டு வேளைகள் சாப்பிட்டால் கூடப் போதுமானது. குறைவான கலோரி என்பதால் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பச்சைப் பட்டாணி, பீன்ஸ், காராமணி போன்றவற்றை மற்ற நாட்களில் பயன்படுத்தலாம். நீலம் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மூளைக்கும், தசைக்கும் பெரிய அளவில் நன்மை செய்கிறது.

எனவே, கத்தரிக்காயை ருசியாக சமைத்து அடிக்கடி உணவில் சேர்க்கவும். சத்துஉணவு நிரம்பியது இக்காய் ஆழ்ந்த தூக்கத்திற்கும் கத்தரிக்காய் உதவும்.

கலோரி குறைவான சில உணவுகள் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறக்கவும், எலும்பு மண்டலம் உறுதியாக இருக்கவும் ப்ராக்கோலி உதவுகிறது. காய்கறிகளுள் மிக உயர்தர இரும்புச் சத்து இதில் தான் இருக்கிறது.

கலோரி குறைவான சில உணவுகள் கைத்குத்தல் அரிசியை விட இருமடங்கு புரதச்சத்து உள்ள உணவு, ஓட்ஸ் ஆகும். நார்ச்சத்தும் கெட்டியான மாவுச் சத்தும் உள்ள உடனடியாகக் கிடைக்கும் சிறந்த உணவு ஓட்ஸ்.

சப்பாத்தி, சாதம் தயாரிக்கும்போது ஓட்ஸையும் கலந்து தயாரித்தால் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். கலோரி குறைவான சில உணவுகள் வாரம் ஒரு நாள் பரங்கிக்காய் உண்டால் தினமும் உங்கள் இளமைத் துடிப்பை எந்த ஒரு சக்தியாலும் கொள்ளையடிக்க முடியாது. நம்முடைய உடலுக்கு அதிக அளவு கரோட்டீனாய்டு தேவை.

எனவே, கரோட்டீனாய்டு சத்து உடலில் அதிகமாக இருந்தால் உங்கள் உடல் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு கரோட்டீனாய்டு சத்து அதிகமுள்ள முதல் உணவு பரங்கிக்காய்தான். எல்லாவிதமான காய்கறிகளுடனும் பரங்கிக்காயைச் சேர்த்து சமைக்கலாம்.

கூடவே ஏதேனும் பருப்பு வகை ஒன்றும் சேரவேண்டும். பரங்கி விதைகளும் சாப்பிடலாம். மேற்கண்ட கலோரி குறைவான உணவுகள் அனைத்தும் உடல் எடை அதிகரிக்காமலும் கண்டிப்புடன் பார்த்துக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.