கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம் - Different types of marriages

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
இது ஆனந்த விகடன் இதழின் 1949-ஆம் வருட தீபாவளி மலரில் படித்தது.


எண்வகை மணங்கள்

நாலு நாளைக் கலியாணமாக இருந்தது ஒரு நாளைக் கல்யாணமாக ஆகி, அதுவும் ஒரு வேளைக் கலியாணமாக மாறி இப்போது உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் நிலைக்கு நம் நாட்டுத் திருமணங்கள் வந்திருக்கின்றன. இதற்கு நமது முற்போக்கு கருத்துகள் ஒரு காரணமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரமும் சுபிட்சமும் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த விவாஹம் என்னும் சடங்கு இப்போதிருக்கும் முறையே மாறி இன்னும் பல உருவங்களில் வரலாமாயினும் மனிதன் உள்ள வரையில் விவாஹமும் இருக்கத்தான் போகிறது. ஆகவே, நமது வாழ்க்கையில் அத்யாவசியங்களில் ஒன்றாகிய இந்தத் திருமண முறை எப்படி எப்படி இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அறனிலை யொப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
யிராக்கதம் பேய்னிலை யென்று கூறிய
மறையோர் மன்ற லெட்டிவை

மேலே கண்ட பழம் பாடல் எண்வகை மணங்களைக் குறிக்கிறது. மன்றல் எட்டு என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலும் நம் நாட்டில் திருமணங்கள் எட்டு வகைகளில் நடைபெற்று வந்ததாக அறிகிறோம். இந்த மணங்கள் முறையே, பிராம்மம், பிராஜாபத்யம், ஆருஷம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராக்ஷசம், பைசாசம் என்பவையாகும். இம்முறையாக மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்திய எட்டு புராண புருஷர்களைப் பின்வரும் சித்திரங்கள் விவரிக்கின்றன.பிராம்மம் [மீனாட்சி கல்யாணம்]:முறைப்படி தகுந்த வரனைத் தேர்ந்தெடுத்துத் தன் மகளைக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதே பிராம்மம் ஆகும். ஜகன்மாதாவே தன் மகளாக அவதரித்திருக்கிறாள், திக்விஜயம் செய்து ஜயக்கொடி நாட்டியிருக்கிறாள், அத்தகைய மகளுக்குத் தகுந்த நாயகன் ஈஸ்வரனே என்பதை உணர்ந்து, சுந்தர பாண்டியனாக வந்த சொக்கநாதருக்கு மீனாட்சியை மணம் புரிவித்து மகிழ்கின்றான் மலயத்வஜ பாண்டியன்.


தெய்வம் [ரிஸ்யச்ருங்கர் – சாந்தை]: உயர்ந்த பொருளை உயர்ந்தோருக்கு அளித்தல் என்னும் முறைப்படி உயிரினும் இனிய தன் மகள் சாந்தையைத் தன்னால் யாகத்திற்கு குருவாக வரிக்கப்பட்ட ரிஸ்யச்ருங்கருக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரோம பாத மஹாராஜன்.
[HR][/HR].ஆருஷம் [பழங்காலம்]: பெண்மையின் உதவி இல்லாமல், ஆண்மகனால் தனித்து வாழ முடியாது என்பதை உணர்கிறான். பெண்ணைப் பெற்றவர்களிடம் சென்று “என்னுடைய கடமைகளைச் சரிவர செய்வதற்கு உங்கள் பெண்ணை எனக்குக் கொடுங்கள். அதற்குப் பதிலாக இரு பசுக்களைத் தருகிறேன்” என்று கூறிப் பண்டமாற்று முறையில் விவாஹம் செய்து கொள்கிறான்.

பிராஜாபத்யம் [சீதை – ராமன்]: இல்லற தர்மம் மிகவும் சிறந்தது. உலகில் எல்லா தர்மங்களுக்கும் அதுவே ஆதாரமாக விளங்குவது. அறத்தையுணர்ந்து அதன் வழி நடப்பாள் சீதை. அவளை மணம்புரிந்துகொண்டு இருவரும் உலகில் தர்மஸ்தாபனம் செய்வீர்களாக!” என்று தன் மகளின் கைப்பற்றி ராமனிடம் ஒப்புவிக்கிறார் ஜனகமஹாராஜன்.
ஆசுரம் [சந்தனு – மத்ஸ்யகந்தி]: மஹாராஜா சந்தனு ஒரு செம்படவப் பெண்மீது காதல் கொள்கிறான். இதுதான் சமயமென்று பெண்ணின் பெற்றோர்கள், “உமது செல்வத்தில் என்னுடைய மகள் வழிக்கு உரிமை கிடைக்க வேண்டும்” என்று கேட்கிறார்கள். சொத்து நிச்சயம் கிடைக்கும் என்று ஊர்ஜிதமான பிறகுதான் பெண்ணைக் கொடுக்கிறார்கள். இது பணத்தை முன்னிட்டு நடந்த மணம்.
காந்தர்வம் [துஷ்யந்தன் – சகுந்தலை]: அவன் அரசன். அவள் ஆசிரமவாஸி. ஒருவரை ஒருவர் முன்பின் அறியார்கள், கண்டதும் காதல் கொண்டு காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். காதலின் பாதை கரடு முரடானது என்பதை இருவரும் அறிந்தும் கொண்டார்கள். ஆனால், அந்த மனமொருமித்த காதலர்களின் மைந்தனின் பெயரால் தான் இன்றும் நமது நாடு “பாரத தேசம்” என்று அழைக்கப்படுகிறது.

ராக்ஷசம் [ருக்மிணி கல்யாணம்]: ருக்மிணியை அவள் விருப்பத்திற்கு மாறாக, மணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர்கள். ருக்மிணி கிருஷ்ணனுக்குத் தூது அனுப்புகிறாள். குறித்த காலத்தில் வந்து பலாத்கார முறையில் தன் ரதத்தில் சிறையெடுத்துச் சென்று மணம் புரிந்து கொள்கிறான் கண்ணன்.

பைசாசம்: தான் ஆசைப்பட்ட பென்ணை அவள் விருப்பத்தையும் கேட்காமல் நள்ளிரவில் பேய்போல் வீட்டிற்குள் புகுந்து, அவள் தூங்குகின்ற சமயத்தில் தூக்கிச் செல்கிறான் ஒரு அரக்கன்.

ரிஜிஸ்டர் [தற்காலம்]: மேலே சொன்ன தொந்தரவுகளெல்லாம் இல்லாமல், மனமொப்பிய இருவர், வயது, தோற்றம், முகூர்த்தம், நாள் கிழமை எதையும் லட்சியம் செய்யாமல், தங்கள் மணத்தை தாங்களே சென்று பதிவு செய்து கொள்ளும் முறை.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,566
Location
Chennai
#2
Naanum 8 types of marriages pathi already padichirukean jay

But explanation teriyathu clear ah, kannan life la ella events heroism and adventure thaan teriyutha once again
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#4
vowwwww....

nice to know!!!!! detailed aa theriyaathu enaku.. thanks!!!

between பைசாசம் la maaplai giant ponnuku pathilaa maamiyaarai thookittaaro? ;) ;) ;) ponnu old aa theriyaraanga!!!:heh:


:behindsofa:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Naanum 8 types of marriages pathi already padichirukean jay

But explanation teriyathu clear ah, kannan life la ella events heroism and adventure thaan teriyutha once again
Ha,ha ...sis avaru romantic herovaachey.....pasanga ippo panra azhumbukkellaam pillaiyaar suzhiye avar pottadhu dhaaney......:whistle::whistle:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Hey Semma Super Exp J.. :) Super Like!!
Thank u sis.....:) Kaatukudimiyoda irundhalum appavey vigadanaar kalakkuraar....:cheer:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
vowwwww....

nice to know!!!!! detailed aa theriyaathu enaku.. thanks!!!

between பைசாசம் la maaplai giant ponnuku pathilaa maamiyaarai thookittaaro? ;) ;) ;) ponnu old aa theriyaraanga!!!:heh:


:behindsofa:
my pleasure sis......:)

ha,ha ......neenga solradhu correct dhaan. But 1949 la vandha issue......cinema heroines kooda appadiththaan......
irundhaalum padam varaindha gopulu sir kitta dhaan ketkanum......:):)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.