கல்யாண பழமொழிகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
[h=1]கல்யாண பழமொழிகள்[/h]

திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
- அமெரிக்கா



மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
- அரேபியா



மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா



கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.- செக்கோஸ்லோவேகியா
திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.- டென்மார்க்



திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.
- வேல்ஸ்



அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள். - ஜெர்மனி



பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!- ஐரோப்பா



திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது - ஸ்காட்லாந்து
மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.- ஹாலந்து



கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம் - தமிழ் நாடு



இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்! - இலங்கை



- வி.அறிவரசு
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.