கல்லாதது உடலளவு!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கல்லாதது உடலளவு!


பேய்,ரத்தக் காட்டேரி, பூதம், பிசாசு இவற்றில் நல்லது எது?

டாக்டர் வி.ஹரிஹரன்

பாச்ச உருண்டை இல்லாத வீடுகளே இல்லை எனலாம். பூச்சிகளிடமிருந்து துணிகளை காப்பதற்கு இதைப் பயன்படுத்துகிறோம். இது கரைந்து, அதன் ஆவியை இழுப்பதின் மூலம் எலிகளுக்கு கேன்சர் அல்லது ரத்தசோகை வரும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கின்றனர். செடார் மரப்பட்டைகளை (தேவதாரு) இதற்கு பதிலாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். பாச்ச உருண்டை பூச்சிகளுக்கு மட்டுமில்லை, நமக்கும் வேட்டு வைக்கிறது. அதேபோல், பிளைவுட் இல்லாத வீடுகளும் இல்லை. மூன்று விதமான பிளைவுட் இருக்கின்றன. இதில் மிக மெல்லிய ஷீட்டுகள், ஃபார்மால்டிஹைடை உமிழ்கிறதாம். கெட்டியான ஷீட்டுகளிலும் இவை இருக்கின்றன. மரத்தூளை ஒட்டுவதற்கு கோந்தாக இது பயன்படுகிறது.

இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் வீட்டிற்குள் அதிகமான அளவு இந்த கெமிக்கல்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனாலும் கேன்சர் வரலாம். செலவு அதிகமானாலும் முடிந்தவரை மரமோ அல்லது உலோகத்தால் ஆன பொருட்களையே வாங்கவும் அல்லது Low emitting பிளைவுட்டா எனப் பார்த்து வாங்கவும். ஒரு நல்ல சேதி என்னவென்றால், பர்னிச்சர் பழசானால், இந்த உமிழ்தல் குறையுமாம்.தரையில் விரிக்கப்படும் கார்பெட் மற்றும் ஷீட்டுகளில், விரித்தவுடன், முதல் சில நாட்களுக்கு கெமிக்கல்கள் ஆவியாகி மேலே வருமாம். கார்பெட் வாங்கியவுடன், கடையிலேயே சில நாள் அதை விரித்து வைக்கச் சொல்லிவிட்டு பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் போது லெட் (ஈயம்) இல்லாத பெயின்டா எனப் பார்த்து வாங்க வேண்டும். பெயின்ட் சுவரில் இருக்கும் போது பிரச்னையில்லை. அந்தப் பெயின்டை சுரண்டி புதிதாக அடிக்கும் போதுதான் ஈயம் வெளியே வரும். அதனால் பெயின்ட் அடிக்கும் போது இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு வராதீர்கள். தரையை சுத்தப்படுத்தும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.

வீட்டை வாசனையாக வைக்க உதவும் ஏர் ஃபிரஷ்னர்கள், டாய்லெட்டை கழுவும் கெமிக்கல்களை நுகர்வதன் மூலம், கேன்சர் வரலாம். டாய்லெட் கழுவும் போது எக்ஸாஸ்ட் பேனை போடுவதன் மூலம் கொஞ்சம் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். பாத்ரூம் கழுவிய பின் நன்றாக கதவை கொஞ்ச நேரத்திற்கு பூட்டி வைக்கவும். பிளாஸ்டிக் பாட்டில்கள் இல்லாமல் உலகமே இல்லை. BPA எனப்படும் கெமிக்கல் இதிலிருந்து வெளியேறி, பாட்டிலில் இருக்கும் நீரில் கலப்பதால், அதைக் குடிக்கும் நமக்கு ஹார்மோன் பிரச்னைகள் வருமாம். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கெமிக்கல் உடலில் அதிக அளவு உள்ளதாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கன்டெயினர்களின் அடியில் முக்கோணமிடப்பட்டு நம்பர் போட்டிருக்கும். 1 என எழுதியிருந்தால் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய வேண்டும், 2, 4, 5-கெடுதல் கிடையாது, 3, 7-வாங்கவே கூடாது என பலர் கூறினாலும், கண்ணாடி அளவிற்கு எதுவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. BPA free, BPS free என எதுவாயிருந்தாலும் ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என யாருக்கும் தெரியாது. கடையில் கம்ப்யூட்டர் பில் போடும் பேப்பரில் கூட இந்த கெமிக்கல் இருக்கிறதாம். பில்லை இனிமேல் பையில் போட சொல்லுங்கள்.

கம்ப்யூட்டர், டி.வி., சர்க்யூட் போர்டுகளில் தீப்பிடிக்காமல் இருக்க ஒரு கோட்டிங் இருக்கும். அதிலிருந்து ஆவியாகி வெளிவரும் கெமிக்கல், எலிகளில் ஆண்மைக்குறைவு, ஞாபகமறதி, தைராய்டு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறதாம். இதை விட சூப்பர் மேட்டர் இருக்கிறது. ஷாம்பு, சென்ட், டியோஸ்ப்ரே, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரேக்களில் தாலேட் எனும் கெமிக்கல் இருக்கலாம். இவை மிருகங்களில் வளர்ச்சி மற்றும் செக்ஸ் கோளாறுகளை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறார்கள். இவை வாங்கும் போது ‘Pthalate free’ என இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டுமாம். குழந்தைகள் வாயில் வைத்து சூப்பும் நிப்பிள், கிலுகிலுப்பை, வாயில் வைத்து கடிக்கும் டீத்தர்கள் போன்றவற்றில் இந்த வாசகம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியது அதி முக்கியம். ஷேவிங் கிரீம்கள் இன்னும் மோசமாம். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணை தேய்த்து ஷேவ் செய்ய சொல்கிறார்கள் (ஹிஹி). ஆஃப்டர் ஷேவுக்கு பதிலாக ஜில்லென இருக்கும் தண்ணீரே போதுமாம். லிப்ஸ்டிக்குகள், மேக்கப் பொருட்கள் வாங்கவே கூடாது. அவை கெடுதல் மட்டுமில்லாமல் பல கணவர்களின் பிரஷர் கூடுவதற்கும் காரணமாகிறது.

சிக்கன், மட்டன், மீனும் இதிலிருந்து தப்பவில்லை. நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக சூப்பர் மார்க்கெட்டில் லேபில் பார்த்து பொருள் வாங்கினாலும், எங்கும் பிளாஸ்டிக் மயமாக இருக்கும் உலகில் நீர், நிலம் மாசுபட்டு இருக்கிறது. அதில் விளையும் செடிகளை உண்ணும் பிராணிகளின் உடலில் டயாக்சின் எனும் கெமிக்கல் அதிகம் இருக்கிறதாம். அவற்றை உண்ணும் நமக்கு ஹார்மோன் கோளாறு மற்றும் கேன்சர் வரலாம். நான்-ஸ்டிக் தவா, தோசைக்கல் வாங்கவே கூடாத பொருட்களாகும். இதற்கு தீர்வாக கடையில் இருக்கும் நேச்சுரல்’ பொருட்கள் வாங்கலாமா? நோ. இப்போது நாம் யூஸ் செய்யும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ச்சி செய்து எவை கெடுதல், எவை நல்லது என்று ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நேச்சுரல் புராடக்டுகளை பற்றி இன்னும் ஆராய தொடங்கவே இல்லை. அவற்றையும் பிராசஸ் செய்து, பாக்கெட்டில் அடைத்துதானே விற்கிறார்கள்? இதில் பல பொருட்கள், எந்த ரெகுலேஷனும் பின்பற்றாத குடிசைத்தொழில்களிலிருந்து வருவதாகும். அதனால் நாம் 25 வருடங்களுக்கு முன் இருந்த லைஃப் ஸ்டைலுக்கு போவது சிறந்தது. 50, 100 அல்லது கற்காலத்திற்கு என்றால் இன்னும் பெட்டர்.

நாம் தினமும் என்ன செய்கிறோம், யோசியுங்கள். காலையில் எழுந்து, கெமிக்கலால் சுத்தம் செய்யப்பட்ட பாத்ரூமில் பல்தேய்த்து, சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து, ஹாலில் பிளைவுட் நாற்காலியில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டே நான்ஸ்டிக் தோசையும், மீன் குருமாவும் சாப்பிட்டு, பிளாஸ்டிக் கேனில் வரும் நீரை பாட்டிலில் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுப்பாக்கி அதைக் குடித்து, காரில் பென்சீன் உமிழ ஆபீசுக்கு போய், லேப்டாப் முன்னால் உட்கார்ந்து வேலை பார்க்கிறோம். பாத்ரூம் போய் விட்டு கிளைக்கால் ஈதர் (ரத்த சோகை வரும்) உள்ள ஹேண்ட் வாஷில் கை அலம்பி சாப்பிட உட்கார்கிறோம். பூச்சி மருந்து போட்டு வளர வைத்த காய்கறி மற்றும் அரிசியை சாப்பிடுகிறோம். முப்பது வருடங்களுக்குப் பின்னால் கேன்சர் வருகிறது. “டாக்டர், எங்க பரம்பரையிலேயே கேன்சர் கிடையாது. சிகரெட் கூட பிடிக்கிறதில்லை. எனக்கு ஏன் இப்படி?” எனப் புலம்பியவாறு போய்ச் சேருகிறோம். லாபம் மட்டுமே குறிக்கோள் என பொருளை தயாரிக்கிறான் ஒருவன். வசதி, பகட்டுதான் முக்கியம் என அதை வாங்கி அழிகிறோம் நாம். மனசாட்சியை விற்றவர்கள் கம்பெனிகள் மட்டும் இல்லை, கண்டும் காணாமல் இருக்கும் அரசும் தான். ஒரு வேளை பிரான்ஸ் போன்ற நாடுகளின் கிராமங்களுக்கு நாம் குடிபெயர்ந்தால் இயற்கைக்கு அருகில் வாழலாமோ என்னவோ?

நாம் போனாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகளின் நிலைமையை யோசியுங்கள். இந்த நச்சு உலகில் நஞ்சான உணவை உண்ணும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாவம் செய்தது? எது கெடுதல் என நாமே தெரியாமல் தவிக்கிறோம். அம்மாவின் ரத்தத்தில் இருந்து எது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது என யாருக்கும் தெரியாது. அதனால் என்ன பாதிப்பு வரும் என்பதும் தெரியாது. அட்லீஸ்ட் இன்னும் 20 வருடங்களுக்காவது (எவை நல்லது, கெடுதல் எனத் தெரியும் வரை) கர்ப்பிணிப் பெண்களுக்கு விஷமில்லாத சுற்றுப்புறத்தையும், உணவையும், நீரையும் தர வேண்டியது பிறக்கப் போகும் குழந்தையை பிறக்கும் முன்வரையாவது மாசில்லாமல் காக்கும்.

சிக்கன், மட்டன், மீனும் இதிலிருந்து தப்பவில்லை. நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக சூப்பர் மார்க்கெட்டில் லேபில் பார்த்து பொருள் வாங்கினாலும், எங்கும் பிளாஸ்டிக் மயமாக இருக்கும் உலகில் நீர், நிலம் மாசுபட்டு இருக்கிறது.

ஷாம்பு, சென்ட், டியோஸ்ப்ரே, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரேக்களில் தாலேட் எனும் கெமிக்கல் இருக்கலாம். இவை மிருகங்களில் வளர்ச்சி மற்றும் செக்ஸ் கோளாறுகளை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறார்கள்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.