கவலை தரும் கழுத்துவலி - Neck Pain

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கவலை தரும் கழுத்துவலி

நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப்படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள், மூளையிலிருந்து கிடைக்கும் கட்டளைகளை செயல்படுத்த உதவும் நரம்புகள், தசைகள், தசைநார்கள் ஆகியன செயல்படவும், நுரையீரலுக்கும் மூக்கிற்கும் இடையே சுவாசத்தை கடத்தும் மூச்சுப்பாதை ஆகியன இணைந்த கழுத்துப்பகுதியில் நமது அன்றாட பணியினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.

கழுத்துப்பகுதியில் ஸ்டெர்னோகிளிடோமாஸ்டாய்டு, ட்ரபிசியஸ் போன்ற முக்கியமான தசைகள் இருக்கின்றன. மயோகுளோபின் என்னும் புரதம் ஆக்சிஜனை தசைப்பகுதிகளில் பரிமாற்றம் செய்து, மயோசின், ஆக்டின் என்ற புரதங்களை தசைநார்களாக இணைத்து, நரம்புகளின் தூண்டுதலால் ஏ.டி.பி. என்னும் ஆற்றலை உற்பத்தி செய்து, சுருங்கச் செய்கின்றன. இவை அசிடைல்கோலைன் என்னும் வேதிப்பொருளுடன் இணைந்து, கழுத்தை அசைக்க, திருப்ப, குனிய, நிமிர உதவுகின்றன. இதனால் கழுத்து தசைப்பகுதிகள் சுருங்கி, விரிந்து அசைவை எளிதாக்குகின்றன.


நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, குனிந்து பணிபுரிவதும், வாகனப் பிரயாணம் செய்வதாலும், கடுஞ்சுமையை தலையில் தூக்கி வைப்பதாலும், தசைப்பகுதிகளில் மயோகுளோபின் செயல்பாடு குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, தசைகள் போதுமான அளவு சுருங்கி, விரியாமல் திணற ஆரம்பிக்கின்றன.

கழுத்து தசைகளின் இறுக்கம் மற்றும் பலஹீனத்தால் முதுகு மற்றும் மார்பு பகுதிகளிலுள்ள ட்ரபிசியஸ், லாட்டிஸ்மஸ்டார்சி, பெக்டோரோலிஸ் மேஜர், கொரக்கோபிராக்கியாலிஸ் போன்ற தசைகளும், தாடைப்பகுதியும் இறுக்கமடைந்து, தாடையின் கீழ்பகுதி, காதின் பின்புறம், தலை, உச்சந்தலை, பிடறி, கழுத்தின் பின்புறம், தோள்பட்டையின் மேற்பகுதிகள், மேல் மார்பு, விலா எலும்பின் இடைப்பகுதிகள், முதுகின் மையப்பகுதி மற்றும் ஆங்காங்கே சிறு, சிறு தசைப்பகுதிகளில் இறுக்கமும், குத்தல் போன்ற வலியும் ஏற்பட்டு, அன்றாட பணிகளை கவனத்துடன் செய்ய இயலாமல் கவலைகளை ஏற்படுத்துகின்றன.

கழுத்துவலி உள்ளவர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. மார்பு மற்றும் இடதுகையில் வலியை உணரும்பொழுதெல்லாம் காது மற்றும் தலையில் வலி அதிகமாகி, தேவையற்ற எரிச்சல், கோபம் உண்டாகிறது. அத்துடன் மாறி, மாறி வலிஏற்படுவதால் மன நோயாளிகள் போல் ஒருவித நிம்மதியிழந்து காணப்படுவர். கழுத்து வலியினால் ரோபோ போல் வித்தியாசமாக நடைபயில ஆரம்பிப்பார். தசைவலி தீவிரமடைவதால் கழுத்திலிருந்து செல்லும் தண்டுவட நரம்புகளும் பாதிக்கப்பட்டு, தண்டுவட எலும்புகள் பிதுங்கி, நரம்புகள் அழுத்தப்பட்டு கை, கால்களில் மதமதப்பு ஆகியன உண்டாகிறது.

கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்துக்கான சிறப்பு தசை பயிற்சிகளை செய்வதுடன், தொழில் சார்ந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கடுமையான தசை வலியை நீக்கி, தசை மற்றும் நரம்புகளுக்கு பலத்தை தரும் அற்புத மூலிகை மனோ ரஞ்சிதம்.ஆர்ட்டபாட்ரிஸ் ஹெக்சாபெட்டலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனோனேசியே குடும்பத்தைச் சார்ந்த தோட்டங்களில் வளரும் மனோரஞ்சித செடிகளின் வேர் மற்றும் பூக்களிலுள்ள கிளைக்கோசைடுகள் தசை இறுக்கத்தை குறைத்து, ரத்தக்குழாய்களை விரியச்செய்து, நரம்புகளை வலுப்படுத்தி, வலியை குறைக்கின்றன. மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 1 முதல் 2 கிராம் தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட தண்டுவடவலி நீங்கும். பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வலியுள்ள இடங்களை இளஞ்சூட்டில் கழுவிவர வலி நன்கு குறையும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை, 98421 67567.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.