கவிதைப் பயணம்....

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??

தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!

உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...

அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் உங்களை எனக்கு தந்தமைக்கு
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#4
அலைகள் தீண்ட
காத்திருக்கும் கரைகள் போல
வண்டுகள் தீண்ட
காத்திருக்கும் மலர்கள் போல
மேகங்கள் தீண்ட
காத்திருக்கும் நிலவு போல
உன் கண்கள் தீண்டும் வரை
காத்திருக்கும் என் காதல் .....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#5
யாருக்காய் திறந்து வைத்திருக்கிறாய்
காதலெனும் மன வாசலை ?
போருக்கு போன உன்னவன
நேருக்கு நேர் வரும்வரையோ ?
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#6
காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது

my dear friends..........................

அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....

பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

........இதுவே உண்மையான் "நட்பு"......

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உய்ருள்ள வரை
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#7
முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முழங்கி தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#9
காதலித்து பார்....கை எழுத்து அழகாகும் என்றார்கள்....
ஆனது என்னமோ உண்மை தான்....ஆனால்
என் தலை எழுத்தும் அல்லவா மாறி விட்டது...

ஆசை........

எனக்கும் ஆசை தான் காதலிக்க....
அது என்னவோ காதலுக்கு வரவில்லை....
என் மீது ஆசை.....!!!
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#10
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.