''காணும் பொங்கலின்நோக்கம்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
''காணும் பொங்கலின் நோக்கம்''
ஆற்றங்கரையில் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் கோலமிட்டு அதன்மீது கிழக்கு முகமாய் வாழை இலை போடுவார்கள்

.முந்தைய நாளில் பொங்க வைத்த பொங்கலில் மஞ்சள் போடி தூவி கொஞ்சம் மஞ்சள் சாதம், குங்குமம் கலந்து கொஞ்சம் சிவப்பு சாதம், பால் கலந்து கொஞ்சம் வெள்ளை சாதம், தயிர் கலந்த கொஞ்சம் தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் என ஐந்து விதமாய் தயாரிப்பார்கள்.

வ்வொன்றிலும் ஐந்து அல்லது எழு (ஒற்றைப்படை எண்ணிக்கையில்) உருண்டைகளை பிடித்து இலையில் வரிசையாக வைப்பார்கள்.

அப்பொழுது ,”காக்காப்பிடி வச்சேன், கணூப்பிடி வச்சேன், காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்”என்று பிரார்த்திப்பார்கள்.

உடன் பிறந்தவர்களை அழைத்து , இந்த ஐந்து விதமான சாதத்துடன் பாயாசம் செய்து விருந்து கொடுப்பார்கள்.


சகோதரர்கள் சகோதரிகளையும், சகோதரிகள் சகோதரர்களையும் அழைத்து ஒன்றாக கூடி கொண்டாடுவதே
காணும் பொங்கலாகும்.

பெற்றோர், வயதில் மூத்தவர்களை நேரில் சந்தித்து ஆசி பெறுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் சென்று கொண்டாடுவது இத்தினத்தின் சிறப்பாகும்.
[h=3]சகோதரர்கள் தன் சகோதரிகளுக்குஇந்த பூஜையின்சிறப்பு

பெண்கள் தங்களின்சகோதரர்கள் தங்களுடன் ஒற்றுமையாகவும், தன் மேல் பாசமாகவும் இருக்க வேண்டும்,

அத்துடன் அவர்களும் சுபிக்ஷமாக குடும்பத்தோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் மாட்டு பொங்கல் தினத்தில் இப்படி கனுபிடி வைத்து கனு பூஜை செய்வார்கள்.[/h]
பொங்கல் அன்று சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு பரிசுகளை தருவார்கள். சகோதரர் தரும் பரிசுக்கு கிராமபுறங்களில் இன்றும் மதிப்பு இருக்கிறது. பிறந்த வீட்டில் சகோதரன் தருகிற பரிசில்தான் புகுந்த வீட்டில் அந்த பெண்ணுக்கு கௌரவம் தருகிறது. அதனால்தான் எந்த நாட்களிலும் உதவி செய்யாத சகோதரனும், பொங்கல் திருநாளில் தன் சகோதரிக்கு பொங்கல் பரிசு தருவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.
“குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பார்கள். எந்த விஷயத்தையும் பெரிதுப்படுத்தாமல் அமைதியாக இருந்து மறப்போம் – மன்னிப்போம் என்ற கொள்கையை கடைபிடித்து, உறவினர்களிடத்தில் கசப்பான அனுபவங்கள் இருந்தால், தித்திப்பான சர்க்கரை பொங்கலை பரிமாறி கொண்டு நல்லுறவை கட்டிகாக்கவேண்டும். அதனால்தான் உழவர் திருநாள் அன்று நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, அவர்களுடன் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கான இடங்களுக்கு சென்று, தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இதற்கு காரணம், பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழாகிவிடும் என்பது போல், வருடம் முழுவதும் உறவினர்களையும் – நண்பர்களையும் சந்திக்காமல் இருந்தால், அவர்களின் நினைவுகள் காலத்தால் மறக்கப்படும். அப்படி அவர்களை மறக்காமல் இருக்கவே இதுபோல பண்டிகை நாட்கள் வருகிறது. இப்படிபட்ட பண்டிகை திருநாட்களில் அவர்களுடன் கொண்டாடி, நம்முடைய மகிழ்ச்சிகளையும் பேசி மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சியான நாள் வருடம் முழுவதும் பசுமையாக நிலைத்திருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்ப, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி, பூஜை செய்து எல்லா யோகங்களையும் பெற்று, சிறப்பு பெறுவோம்.--
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
மிகவும் சுவையான பின்னணி கொண்ட இந்த காணும் பொங்கலின் பொருளையும் அதன் மகாத்மியத்தையும் எடுத்து கூறி அண்ணன் தங்கை உறவின் மேன்மையையும் உயர்த்தி காட்டி விளக்கமாக நல்லதொரு தகவல் தந்ததற்கு மிக்க நன்றி திரு கேசவன்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.