காதலர் தினம் - சில சுவாரஸ்யமான தகவல்கள்

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
காதலர் தினம்

ரோம பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்தில் திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு தடை இருந்தது. 'திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு வீரம் குறைந்து விடும்' என்பது அரசரின் எண்ணம்.

திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்தவர்களுக்கு அரச கட்டளையை மீறித் திருமணங்கள் நடத்தினார் வேலன்டைன். விஷயம் கிளாடியஸ் மன்னனுக்கு தெரிய வந்தபோது வேலன்டைனை பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14 . கி.பி. 270 .
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டிபோட்டு வாங்குவது ஆண்கள் தான். ௭௩ சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது.

(சமர்த்து பசங்க....)
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
காதலர் தினப் பூக்களைப் பொறுத்த வரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா கொடுத்தால் "காதல்" எனும் ஒரே 'மீனிங்' தான் உலகெங்கும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
உலக அளவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#5
1415 ல் ஒர்லான்ஸ் பகுதியின் மன்னன் சார்லஸ், லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத் தனிமையில் தனது மனைவிக்கு ஒரு கவிதை எழுதி வேலன்டைன் தினத்தன்று அனுப்பினார்.

அது தான் நமக்கு தெரிந்த மிகப் பழமையான வேலன்டைன் காதல் கவிதை.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#6
ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வலமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது.

பிப்ரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி. 490௦ களில் போப் கெலேசியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தை குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்க செய்யவும் போப் தீர்மானித்தார்.

எனவே, பிப்ரவரி 14 ம் நாளை 'புனித வேலன்டைன் நாள்' என அறிவித்தார்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#7
1800௦௦ ல் முதன் முதலாக வேலன்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தாவர் ரிச்சர்ட் காட்பரிதான்.

அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வேலன்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3 .6 கோடி!
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#8
2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்த மூன்று வார்த்தை 'ஐ லவ் யூ' என்று தலைப்பிட்டு வந்த ஒரு மெயில்.

(காதல் வைரசோ?)
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#9
காதல் கவிதைகள்

உன் பார்வைச் சாரலில்
நனைந்தது நான்...
சளி பிடித்தது
என்னவோ
என் எழுதுகோலுக்கு!

பாடநூல் மார்பில் அணைத்தபடி
முன் நடந்தாய்...
பின் தொடர்ந்தேன் நான்
ஒருமுறை கூட
திரும்பி பார்க்கவில்லை நீ
படுதோல்வி அடைந்தேன்
அதுவொரு பொருட்டல்ல
அடுத்த நாள்
பின் தொடர
அதற்கடுத்த நாளும்
பின்தொடர
பின்தொடர
பின்தொடர
போயின நாட்கள்...
ஒருநாள்
இலேசாக திரும்பி பார்த்தாய்
அதன்பிறகு...
சூடாகத் தேநீர் அருந்தியபடி
பேசிக் கொண்டனர்
டீக்கடை பெஞ்சில் நம்மைப்பற்றி!

என் இதயம் இன்று
கவிதைப் புத்தகமாகிப்
போனது
உன் நினைவுகளை
சேமிப்பதால்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.