காதலிக்கும் போது...

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
காதலிக்கும் போது..

ஆண்களாக இருந்தாலும்
பெண்களாக இருந்தாலும் காதலிக்கும் போது இருப்பது போல திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை.
நிறைய மாறிவிடுகிறார்கள்.

காதலிக்கும் போது...

நிறைகள் மட்டுமே தெரிகிறது
பாராட்ட மட்டுமே தெரிகிறது.
திட்டினாலும் சிரிக்கத் தோன்றுகிறது
பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது
நிகழ்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
கசப்பான உணவும் இனிக்கிறது

திருமணத்துக்குப் பின்னர்...

குறைகள் மட்டுமே தெரிகிறது
பாராட்ட நேரம் ஒதுக்கமுடியவில்லை
சிரித்தாலும் திட்டத் தோன்றுகிறது.
ஆளைவிட்டா போதும் என்றிருக்கிறது
எதிர்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
இனிப்பான உணவும் கசக்கிறது.

சிந்திக்கத்தக்க நகைச்சுவை:
காதலிக்கும் போது..

அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலாகப் படியுங்கள்..

எப்படியிருக்கிறது!!!!
இன்று நேற்றா இப்படியொரு மாற்றம் வந்தது.?

காதல் தோன்றிய போதே இந்த மாற்றங்களும் தோன்றிவிட்டன.

என்னைக் கேட்டால் உண்மையான காதலின் அளவு என்ன ? உயர்வு என்ன என்பதை

இளமையில் அளவிடக்கூடாது.

திருமணத்துக்குப் பின்னர்.
குழந்தை பெற்ற பின்னர்
வயதான பின்னர் தான் அளவிட வேண்டும் என்பேன்.

முனைவர் இரா.குணசீலன்

Regards,
Sumathi Srini
 
lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
Nice one sumathi... it's very funny... but after marriageum love enjoy pannara couples irukkanga.. sumathi...
 
lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#5
Nice.. sumathi... nanum unga koottukarithan.. kadavulukku dinamum nanum nandri solgiren....
 
Joined
May 9, 2011
Messages
3
Likes
4
Location
Nanganallur
#6
நாம் அனைவரும் ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிடுகிறோம். பொதுவாக உணர்ச்சி வசப்படும் போது மூளை மழுங்கிவிடுகிறது. காதல் என்பது ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சி வசப்படிருக்கும் சமயத்தில் எப்படிப்பட்ட புத்திசாலியும் முட்டாளாகிறான். காதல் மட்டும் இல்லை; நீங்கள் பார்த்தீர்களானால் மிக அதிக சந்தோஷமான தருணங்களில் ஒருவன் சுற்றுசூழல்களைப்பற்றி கவலையேபடாமல் அழுகிறான்.(உதாரணம் விம்பிள்டன் அல்லது உலக கிரிகெட் போட்டி இவற்றில் சாதனை நிகழ்த்தியவர்கள்) அதே போல மிக அதீத துக்கம் வரும்போது மேற்குரிப்பிட்டதர்க்கு நேர்மாறான நிலை அடைகிறான். ஒருவித விரக்தி. எதுவும் நம் கையில் இல்லை என்ற உண்மை நிலை புரிந்த நிலையும் கூட.

தவிர எனக்கு ஒரு விஷயம் இன்னமும் புரியாத புதிராக உள்ளது. எவருக்கேனும் புரிந்தால் விளக்குங்கள். எந்த ஒருவரையும் புரிந்து கொள்ள குறைந்தது ஒருவருடமாவது ஆகும். ஏன், நம் குடும்பத்தில் நம் கூடப் பிறந்தவர்களையே நாம் எந்த அளவு புரிந்து வைத்துள்ளோம் என்பது கூட நிச்சயமாக புரியாத போது, பழகி சில நாட்களிலேயே சினிமாவில் வருவது போல, அப்படியே எதோ இவர்கள் மட்டுமே ஒருவரைஒருவர் நன்கு புரிந்துகொண்டவர் போலவும், made for each other போலவும் அலட்டுவதை பார்த்தல் சிரிப்புதான் வருகிறது. நட்பு வேறு; காதல் வேறு; சற்று மூளையை உபயோகித்தால் இந்த பிரச்சனையே வராமல் தப்பிக்க
 
sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#7

sariyaa soneenga....
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.