"காதலே கைக் கொடு" - Kaadhalae Kai Kodu By jash @ saradheya

Status
Not open for further replies.

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#1
ஹாய் பிரண்ட்ஸ்


என்ன சொல்ல? ஏது சொல்ல? எப்படி சொல்றது... எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரில பிரிண்ட்ஸ்.


என் பிரண்ட்ஸ்ட்ட சொன்னா சிரிக்கிறாங்க... ஏழு கதை எழுதுன உனக்கே இப்படியா?ன்னு. ஆனாலும், நேற்று தான் எழுத ஆரம்பிச்ச மாதிரி இருக்கு பிரண்ட்ஸ். அதே படபடப்பு, அதே சலசலப்பு... சோ அதே பிரெஷ்னஸோட இந்த என் எட்டாவது கதையை தர ஆயத்தமாகிட்டே இருக்கேன் பிரிண்ட்ஸ்.


கண்டிப்பா உங்கள் அனைவரின் ஆசிகளோடும், ஆதரவோடும் இக்கதையை ஆரம்பிக்க உள்ளேன் பிரண்ட்ஸ். சோ மறக்காம வந்து உங்கள் கருத்துக்களையும், லைக்கையும் அள்ளி தெளியுங்கள் பிரண்ட்ஸ். சோ தட் நான் கொஞ்சம் பிரிஸ்க்கா யுடிஸ் கொடுப்பேன் தோழிஸ்.


ஓகே ஓகே கதைய சொல்றதுக்கான நேரம் இப்போ... எப்போவும் போல் ஒரு லவ் ஸ்டோரி தான். ஆனா, இது சமூதாயத்தில் நடக்கும் ஒரு நாட்டு நடப்பைப் பற்றியது. அண்ட் இந்த நடப்பைக் கொஞ்சம் கதைக்கு அதுவும் நீங்க எதிர்பார்க்குற காதல் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் வடிவம் மாற்றி கொடுக்க இருக்கிறேன் பிரண்ட்ஸ்.


கதையின் தலைப்பு "காதலே கைக் கொடு"


"காதலின் வாசம் அறியாத நான்
காதலின் வசம் விழுந்தப்
பின் தான் தெரிந்தது
எந்தன் காதலின் சுவாசம் நீ என்று"
- ரிஷி

மிக விரைவில் கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன் தோழமைகளே.
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#2

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#3
haiiiiiiii frndsssss


neenga avaludan ethirpartha kaadhlae kai kodu vin mudal talir... itho...

romba naal gap appuram eludurathala... enakkul oru sinna tadumatram crcta thaan eluduroma? illa nala vanthirukka? varlaiya? mostly enakae therinchidum eppadi eluduren... ana nengalum konjam sonna naan matrathuku... atha vachu enna naanae improvement pannipen frnds....

so romba eagera ungaloda oru oru comments illa frnds oru oru wordsayum ethirparkuren...

and seekiram padichitu comments podungo frnds... nanum sekiramae varen next ud yoda....

so frnds... drop ur valuable comments here on the below link

kadhalae kai kodu comments
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#4
பகுதி 1


மும்பை நகரத்தில், பணக்காரர்கள் வசிக்கும் வீதியில், தனியாய், பூந்தோரணங்களோடும், வர்ண விளக்குகளாலும் ஜெகஜோதியாய் மிளிர்ந்தது அந்த வீடு... இல்லை மாளிகை என்றே சொல்லலாம். அவ்வளவு அதி அற்புதமாய், அந்த நீல நிற மாளிகைக்கு ஏற்றார் போல், மங்களகரமாய் மஞ்சள் வர்ண பூக்களாலும், இதமான மனநிலையை உருவாக்க நறுமணம் கமழும் சிவப்பு வர்ண ரோஜாக்களாலும் அலங்கரிக்கப் பட்டு, புது மணப்பெண் போல் அழகுற நின்று இருந்தது.


வீடே இவ்வளவு அலங்காரமாய் இருந்தால், வீட்டின் உள்ளே இருப்பவர்களை பற்றி கேட்கவா வேண்டும்? அதுவும் பணக்கார்கள் வேறு, அதிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்கள் வரிசையில் இப்பொழுது தான் நுழைந்து இருப்பவர்களும் கூட... எனவே சர்வ நிச்சயமாய் பகட்டாய் தான் இருப்பார்கள்.


அது உண்மை தான் என்பது போல், மாடியில் ஒரு அறையின் உள்ளே, "இந்த ஷெர்வானி நல்லா இருக்கா இல்ல சூட் போடவா டா?" என ஆள் உயர கண்ணாடி முன் நின்று, தன்னை அப்படியும், இப்படியும் திருப்பி சரி பார்த்து கொண்டிருந்தான். அப்படியே தன்னுடன் இருந்த நண்பனிடமும், அபிப்பிராயம் கேட்டு கொண்டிருந்தான் ரிஷி.


அப்போது சரியாய், திரு. ராமேஸ்வரன் உள்ளே நுழைந்து, "ரிஷி... இட்ஸ் நாட் பேஃர். சூட் போட்டுக்கோ டா. லுக்கா இருக்கும். பிறகு ரிசப்ஷனுக்கு வேணா ஷெர்வானி போட்டுக்கலாம்" என்றார்.


"ஓ டாட்! இன்னிக்குமா "இட்ஸ் நாட் பேஃர்" ஜஸ்ட் ஸ்டாப் இட். கேட்டு கேட்டு காது நொண்டு போச்சு" என அவரின் அருந்தவப் புதல்வன் ரிஷி சலிக்க, "ஹா ஹா... என்ன டா பண்றது? அப்படியே பழகிடுச்சு. ஓகே மை பாய். சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு வா. வீ ஆர் வைட்டிங் பார் யு. முக்கியமா மது வெயிட் பண்றா. கம் சூன்" என கூறி விட்டு சென்றார்.


"மது" என்ற பெயரைக் கேட்டதும், அவனுள்ளே ஒரு இதமான உணர்வும், முகத்தில் ஒரு மிதமான புன்னகையும் ஒரு சேர மலர்ந்தது.


"டேய்... டேய்... போதும் டா டூயட் பாடுனது. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நேரிலேயே பார்க்கப் போறியே. அப்புறம் என்ன?" என அவன் நண்பன் சுகேஷ் கேலி செய்ய, அதற்கும் ஒரு மலர்ந்த புன்னகையை வீசி, தன் ஒப்பனையை தொடர்ந்தான்.


அங்கு கீழே, ராமேஷ்வரனின் மனைவி வரலக்ஷ்மி, கழுத்திலும், காதிலும் வைர நகைகள் மின்ன, பட்டு சேலை தகதகக்க, வந்தவர்களை, வைர வளை அணிந்த தன் இரு கரங்களால் நமஸ்கரித்து, தமிழ் பண்பாட்டை மறவாமல் வரவேற்று, உபசரித்தார்.


இது ஒன்றே போதும், செல்வ செழிப்போடு இருந்தாலும், தமிழ் பாரம்பரியத்தையும் எளிமையையும் கட்டிக் காப்பவர், அந்த வீட்டில் வரலக்ஷ்மி ஒருவரே என்பது விளங்கும். இதற்கிடையே, தன் மாமியார் மாமனாரையும் கவனிக்க அவர் மறப்பதில்லை. ஆனால், இந்த ஒரு விஷயமே, திரு. ராமேஷ்வரனையும் சரி, திருநிறை செல்வன் ரிஷியையும் சரி, முகம் சுளிக்க வைக்க போதுமான ஒன்று.


அதைப் போலவே, வாயிலருகே நின்ற வரலக்ஷ்மியை நெருங்கிய ராமேஷ்வரன், "ஏன் இப்படி அசிங்கப்படுதுகிறாய் லக்ஷ்மி. உனக்கு எத்தனை முறை சொன்னாலும், புத்தியில் ஏறாதா?" என கடித்த பற்களுக்கு இடையே, வாயைக் கூட அவ்வளவாய் அசைக்காமல், எதிரே வந்து கொண்டிருப்பவர்களுக்கு புன்னகையை பூத்தப்படியே, மனைவியிடம் உறுமினார்.


"இல்லங்க... நம்ம வீட்டு... பங்க்ஷனுக்கு... நாம உபசரிக்காம..." என அவர் முடிப்பதற்குள்ளே, "அதுக்கு தான் வேலைக்காரங்க எல்லாம் இருக்காங்கள. நவ் ஜஸ்ட் கம் அண்ட் ஜாயின் வித் மீ ஆஸ் மிசஸ் ரமேஷ்." என அவர் பொரிந்து விட்டு செல்ல, அவரின் ஆங்கில மொழி, லக்ஷ்மிக்கு புரியாவிட்டாலும், அவரின் உடல் மொழியும், முக பாவனையும், அவர் கூறியதை இவருக்கு புரிய வைக்க, ரமேஷின் பின்னேயே பயணித்தார் லக்ஷ்மி.


தற்சமயம் ரமேஷ் மட்டும் இருந்ததால், இதோடு முடிந்தது. இதுவே ரிஷியும் அருகே இருந்திருந்தால்... என லக்ஷ்மி எண்ணிப் பார்க்கத் தொடங்கினார். ரமேஷ் வந்து "வேலைக்காரர்கள் செய்ய வேண்டியத எல்லாம், நீ ஏன் இழுத்து போட்டு செய்யுற?" என கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "இத தான் சொல்வாங்க, எதையோ குளிப்பாட்டி, நடு வீட்டுல வச்சாலும், அது..." என ரிஷியே பதில் தந்திருப்பான் தான். ஆனால், அதை அவன் முடிப்பதற்குள், "ரிஷி... ஜஸ்ட் ஷட் அப் அண்ட் டோன்ட் இண்டர்பியர் பிட்வீன் அஸ்" என தன் கணவன் தடுத்தும் இருப்பார் என மெல்லிய சோகம் இழையோட நினைத்து பார்த்தார்.


ஆனாலும், அவர் மனம், "நான் நாய் தான். ஆனால் நன்றியுள்ள நாய் தான் என்பது எப்போது இவனுக்கு புரியுமோ? கடவுளே!" என கண்ணை மூடி, பெருமூச்சு விட்டார் லக்ஷ்மி.


"ஹாய்ய்ஈ மிசஸ் லக்ஷ்மி. ஹவ் ஆர் யு? வாவ் யு ஆர் லுக்கிங் சோ பியூட்டிஃபுல்" என ரமேஷின் நண்பரின் மனைவி, அவரை புகழ, மேலும் அப்பெண்மணியின் கணவன் "பெயருக்கு ஏற்ற மாதிரியே, மங்களகரமா லக்ஷ்மி கடாட்சியத்தோட இருக்கீங்க" என மஞ்சள் பூசி, பெரிய குங்குமப் பொட்டு வைத்து, பார்க்க அந்தக் காலத்து பண்டரி பாய் போல் இருந்தவரை இவர்கள் பாராட்ட, அவரோ சங்கோஜத்தோடு "அப்படில்லாம் இல்ல சுனிதா" என புன்னகைத்தார்.


"உண்மையிலேயே லக்ஷ்மி. உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் ரமேஷ்க்கு லக்கே அடிச்சிருக்குன்னு சொன்னங்க. இப்ப உங்களப் பார்த்ததுக்கப்புறம் தான் அது உண்மைன்னு புரியுது." என சுனிதா என்ற அப்பெண்மணி மேலும் புகழ்ந்தார்.


"அது மட்டுமா? ஒரு நல்ல மதர்ரா ரிஷியையும் பார்த்துக்கிட்டு, ரமேஷையும் கவனிச்சுக்கிட்டு, அவங்க பாரன்ட்சையும் நல்லா கவனிசுக்குறாங்க. ரமேஷ் யு ஆர் சோ லக்கி மேன். சுனிதா நீயெல்லாம் கத்துக்கோ இத" என பேச்சிலேயே மனைவியை ஒரு இடி இடித்து விட்டு, ரமேஷையும் புகழ்ந்து விட்டே நகர்ந்தார் அந்த நண்பர்.


அப்போது கூட்டத்தில், "என்னப்பா இது. பொண்ணு கூட ரெடியாகி வந்து அரைமணிநேரம் ஆச்சு. இன்னும் மாப்பிள்ளைய காணோம்" என ஒரு குரல் வர, அதற்கு கூட்டமும் கலகலத்து, ஆள் ஆளுக்கு ஒரு கேலியான பதிலைச் சொல்லி சிரித்து கொண்டிருக்க, அப்போது மாடியில் இருந்து ரிஷி இறங்கி கொண்டிருந்தான்.


ஆறடிக்கு, சற்றே குறைவான உயரம், நல்ல கோதுமையின் நிறம், சிரித்தாலோ கோபப்பட்டாலோ சிவக்கும் கன்னங்கள், கூர் பார்வை, நிமிர்ந்த நடை என அழகிய தமிழ் மகனாய், கம்பீரமாய் கோட் சூட்டில் இறங்கி கொண்டிருந்தவன் மீது வைத்த விழியை அகற்றாமல் பார்த்து கொண்டிருந்தாள் மதுமிதா எனும் அவன் தேவதை.


படிகளில் இறங்கி முடித்தவனின் பார்வை அந்த அறை முழுவதும் அளந்தது. பின் திருப்தியுடன், தன் தந்தையை நாடிச் சென்றது. அவன் கண்களைத் தொடர்ந்து, கால்களும் அவன் தந்தையை நாடிச் செல்ல, அப்போது தான், அவர் அருகே இருந்த லக்ஷ்மியும் அவன் கண்களுக்கு புலப்பட, ஒரு அலட்சியப் பார்வையையும், முக பாவத்தையும் அவரிடம் காட்ட, அதற்குள், "ரிஷி... மை பாய்" என பெருமிதத்தோடு ரமேஷ் அவனை கட்டியணைத்து, ஆர தழுவினார்.


அதன் பின்னே, அலட்சிய பாவத்தை விடுத்து முகத்தை இயல்பாய் மாற்றியவன் கண்ணில், அங்கு தந்தைக்கு பின்னே நின்றிருந்த மதுமிதா கண்ணில் பட்டாள். அவள் தான், பார்த்த விழி பார்த்தப்படி பூத்திருந்தாளே, இப்போதும் அப்படியே இருந்தவளை, ரிஷி தான் கண்ணடித்து, அவளைக் கலைத்து பூவுலகிற்கு மீட்டு இருந்தான்.


அதோடு மட்டும் அல்லாமல், அவளை தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடினான். இள ரோஜா நிறத்தில், முத்துக்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட லேஹங்காவில், விண்ணுலக தேவதையாய் இருந்தவளின் உடல் முழுதும் முத்து நகைகளின் அணிவகுப்பு, அவளைக் கடற்கன்னியாகவே காட்டிற்று. அதில் திருப்தியுற்றவனாய், மற்றவர்களை கவனிக்க அவன் தந்தையிடம் இருந்து விலகி திரும்ப, அவன் தந்தையும் விலகினார்.


பின் அனைவரின் கவனத்தையும், தன் பக்கம் திருப்ப, "ஹாய் பிரிண்ட்ஸ்..." என அழைத்து, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். முடிவாய் "திஸ் அக்கேஷன் இஸ் ஸ்பெஷல்லி அரேஞ்சுடு டூ வெல்கம் திஸ் ஜியார்ஜியஸ் ஏஞ்சல் டூ அவர் பாமிலி ஆச மை ஸ்வீட் டாட்டர் இன் லா" என விஷயத்தை கூறி, மதுமிதா பக்கம் கைக் காட்டி, அவளை வாவென தலையசைத்து அழைத்தார்.


அவளும் மெல்லமாய் மென்மையாய் நடந்து செல்ல, ஒரு ரோஜாக் கூட்டமே அசைந்து வருவது போல் உணர்ந்தான் ரிஷி. பின் வந்திருந்தவர்களுக்கு வழக்கமான அறிமுக படலத்தை தொகுத்து முடித்த ரமேஷ், நிச்சயதார்த்த விழாவை துவக்கி வைத்தார். ஆம், தன் மருமகளுக்கென பிரத்யேகமாய், தன் மகனின் மனம் கவர்ந்த வடிவத்தில் அமைந்த அந்த வைர மோதிரத்தை, தன் மகனிடம் எடுத்து கொடுத்தார்.


ரிஷியும் அதை பெற்றுக் கொண்டு, தன் வருங்கால மனைவியின் அழகு முகத்தைப் பார்த்தப்படியே, அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான்.


பின் மென்மையாய், அவளின் வலக்கரத்தை, தன் வலக்கரத்தால் பற்றி, அதை விட மென்மையாய், அவளின் பூ விரலுக்கு, மோதிரத்தை அணிவித்து, அவள் கைகளைத் தன் இதழ்களின் அருகே கொண்டு சென்று, அதில் முத்தம் வைக்க எண்ணி குனிந்தவனை, அவ்வீட்டின் அழைப்பு மணி சரியாய் ஒலித்து, அவனை தொந்தரவு செய்ய, "சே! எந்த முட்டாள் இப்படி செய்கிறான்?" என ஒரு நொடி அவன் கடுப்பானான்.


ஆனால், அந்த விதி தான் தன்னை தேடி வருகிறது என அவன் எண்ணவில்லை. மணியோசையில் கலைந்தாலும், மீண்டும் தன் பணியை தொடரப் போனவனின் உத்தேசத்தை உணர்ந்து, வெட்கம் மேலிட, சட்டென தன் கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டாள் மது.


அதனைத் தொடர்ந்து இருவரின் நண்பர்கள் பட்டாளமும் சந்தோஷ மிகுதியில் ஆரவாரம் செய்து, ஊக்குவிக்க, இப்போது மது அவன் கைகளில் மோதிரத்தை அணிவிக்க தயாரானாள். ஆனால் சரியாய், அப்போது "மிஸ்டர் ரிஷி, சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்" என ஒரு காவல் துறை அதிகாரி, கூட்டத்தினுள்ளே நுழைந்து வந்து அவனை அழைத்தார்.


அவனுக்கு முன், ரமேஷ் அவரிடம் வந்து, "எஸ் இன்ஸ்பெக்டர். உங்களுக்கு என்ன வேணும்?" என வினவ, ஆனாலும் ரிஷியும் தன் கண்களை அவர்களின் மீது செலுத்தி, தன் பார்வையைக் கூர்மையாக்கினான்.


"சாரி சார், உங்கள இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணக் கூடாது தான். ஆனா எனக்கு வேறு வழி தெரியல, உங்க சன் மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு"


"வாட்? கம்ப்ளைன்ட்டா?" என அவர் புருவம் சுருக்கி கேள்வி கேட்பதற்குள், ரிஷி அங்கு வந்து சேர்ந்தான்.


"எஸ் சார். உங்க சன்னுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னும், இப்ப அவர் இரண்டாம் திருமணம் செய்யப் போவதாகவும் புகார் அளித்து, இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கொடுத்திருக்காங்க. அதான் வேறு வழி இல்லாம..." என அவர் முடிக்கும் முன்னே, ரமேஷ் கோபமாய் உருமாறி, கத்த ஆயத்தமானார்.


அதைத் தங்கள் தொலைக்காட்சிகளில் முதல் செய்தியாக, திடீர் செய்தியாக பரபரப்பை உண்டு பண்ணும் இந்த சுவையான சம்பவத்தை படம் பிடிக்க, பத்திரிக்கையாளர்கள் ஆர்வத்தோடு தயாரானார்கள்.


அதனால், ரிஷி முன் வந்து, தன் தந்தையை ஒரு கையால் ஆட்சேபித்து நிறுத்தி, காவலதிகாரியிடம் வந்தான். "யார் என்ன சொன்னாலும், அதைப் புகார் மனுவாக ஏற்று கொண்டு, இப்படி தான் வந்து விடுவீர்களா சார்" என நிதானமாய் கேட்டான்.


அவரோ சற்று தயங்கி, பவ்யமாய், "இல்ல சார், புகார் அளித்தவரிடம், அதற்கான எல்லா சான்றும் இருந்ததால் தான், இங்கு வந்தோம்" என விளக்கமளித்தார்.


"எங்கே புகார் அளித்தவளை, கூப்பிடுங்கள். பார்ப்போம்" என அப்போதும் திணறாமல் பேசினான் ரிஷி. ஆனால் அந்த அதிகாரி தான் திணறிப் போனார். ஆனாலும் "அவள் இல்லை சார் அவன். அவர் வெளியே நிற்கிறார்." என கூற, புருவ சுளிப்போடு வாசலை ஏறிட்டான்.


ஆனால், அதற்குள் ஆங்காங்கே சலசலப்பு ஏற்பட, ரமேஷ் பத்திரிக்கையாளர்களை தன் பக்கம் திரட்டி, "இது என் தொழில் எதிரிகளின் சதி. வேண்டுமென்றே போடப்பட்ட ஒரு பொய் புகார். இதை நான் சும்மா விட மாட்டேன்" என கூற, இன்னொரு பக்கமோ, மதுமதியின் பெற்றோர்கள் முகம் சுருக்கி, கோபத்தில்... அவமானத்தில் முகம் சிவக்க நின்றிருந்தனர். அவர்களின் இரத்த அழுத்தம் ஏற தொடங்குவதற்குள், வரலக்ஷ்மி அவர்களிடம் சென்று அவர்களை சமாதானப்படுத்தத் தொடங்கினார்.


தன் பிள்ளைப் பத்திர மாற்று தங்கம். நீங்கள் கவலைப் பட வேண்டாம் என ஏதேதோ கூறி, ரிஷிக்கு நற்சான்றிதல் வழங்கினார்.


ஆனால், அவனோ தன் வாழ்வில் விளையாட வந்த அந்த வில்லனை சந்திக்க சென்றான். அவன் வீட்டு வாயிலின் அருகே இருந்த தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில், இவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவனை நெருங்கினான் ரிஷி.


"ஹலோ மிஸ்டர், யாரிடம் எவ்வளவு பணம் பெற்றாய் இந்த விஷயத்தை செய்ய?" என கேள்விக் கேட்டவனை திரும்பி பார்த்தான், அந்த புதியவன். அவனின் வெண்ணிற உடுப்பே அவன் ஒரு வழக்கறிஞர் என சொல்லாமல் சொல்லியது.


அதனால் தான் ரிஷி மரியாதையாய் அழைத்தானோ? அந்த வழக்கறிஞரோ, தன் வெண்ணிற பற்களைக் கட்டி, லேசாய் புன்னகைத்து, "நானா? பணத்தை விட பெரிதாக ஒன்றைப் பெற்றேன். அதனால் தான் உன் மீது வழக்கு பதிவு செய்தேன்" என அசராமல் கூறியவனைக் கண்டு சற்று அசந்து தான் போனான் ரிஷி.


ஏனெனில் அவன் முன், அவன் நண்பர்களை தவிர, யாருமே அவனை ஒருமையில் அழைத்ததில்லை. ஏன் இந்தக் காவலதிகாரியே, இவ்வளவு உயர் பணியில் இருப்பவரே அவனை பன்மையில் தானே அழைத்தார். அதனால் தான் வந்த தடுமாற்றம் அவனுள், ஆயினும், அவன் அதைக் கட்டிக் கொள்ளாமல் அவனை... அந்த புதியவனிடம் "க்ளாட் டூ மீட் யு... மிஸ்டர்..." என அவனுக்கு கை நீட்டி, புருவம் சுருக்கி, கண்களையும் சுருக்கி, லேசான மென்னகையோடு தலை சாய்க்க, "தேவா... தேவராஜ்" என கூறி, தேவாவும் அவனுக்கு கைக் கொடுத்தான்.
கைக் கொடுக்குமா காதல்??????

 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#5
hai frnds....

here goes next tender ud of kaathalae kai kodu

kaadhalae kai kodu 2

intha link la rendu udyum serthu kodutthirukken frnds....
padichittu vanthu unga commentsa sollunga frnds...

thanks much frnds... en kadaikkaka neenga wait panneenga therinchukum podu happy... vanthu wish pani wait pannomnu sonna frndsku ellarukumae thanks itha thavira enna gratitude panrathu therila frnds.... ana kandippa ungalukkakave naan nalla nalla kadaikal "specially designed for u" nu oru quote solvanga athu pola naan en kadaikalai sirappaa tharen frnds....

so do pls drop ur valuable comments frnds....

kaadhalae kai kodu comments
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#6
hai frnds...

next udyoda ungala sandikka vanthutten....

inimae regulara uds vanthidum frnds.... 2 days orukka...


so markkama vanthirunga... and intha epila neenga konjam expect panuvenga entha epi ya cntnu panna porennu.... ok frnds... nenga yosichute open pani padinga dears....

last time konjam poor familya mdu la kamichathala konjam madurai slang pottu eludiyiruppen... so padichu therinchukonga frnds enga oor paashaiya... and intha ud read panitu... sitthuva yaar thitrangalo avangala vanthu titanum... becos sidduva enakum pidikum frnds......;)

naan yaaro ivan songuku matumaeeee periya pan... athuvum siddukkaaka... so only sidduva kondu vanthen....:p kovichukaadeenga makkalae...
so markkaamal read pannittu vanthu solunga frnds... ud eppadi irunthuchunnu... neenga cmnts pottu boost pana pana udsa varum frnds...

so no money, no ATM, no credit cards... only ur valuable varthaikalaal enaku recharge panni vidungal intha thalathirku vanthu...

 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#7
hai frnds...

first of all happy yukathi frnds...

intha ud nethae thara vendiyathu... but inniku tharathukku sorry frnds...

ana intha ud eludum pothae ennala konjam... sila pakuthikal eludha mudila... but ithu elam stryku thevainnu eludirukken... nenga padichu parthaa theriyumnu ninaikkiren frnds....

and again oruuuuu big sorry... neenga hero vanthiruvaan expect panni padipeenga... naanum evalavo try panni hero entry kodukka try pannen... but hero entry vara eludunena... ithu one ud illa twin udya maaridum athaan... tharala... kandippa next udla hero entry vachidalam frnds... no worry...

so samatha padichutu vanthu unga boostingana cmnts solunga frnds... surea next ud vanthidum seekiram...do read n share ur valuable cmnts here frnds...
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#8
hai frnds...

here am posting next ud of kaadhlae kai kodu...

inniku shut down frnds... athaan late... and konjam last pages spell mistakes iruntha adjust pannikonga frnds... check panna time ila. naan saami paarkka poradala... avasarama putting... athuvum neenga wait pannuveenganu thaan naan coming n putting with loads of amma thittus... ana ithuku ellam naama asaruvoma?;) ok bye...:cool: வந்து ரிப்ளை பண்ணுறேன் பிரண்ட்ஸ்... கமண்ட்ஸ் போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த udயில் போனஸ் வழங்கப்பட்டு இருக்கு... :p


so pulla ivlo kastappattu ud podudaenu... konjam karunai irunthaa vanthu cmnts podungo frnds...... ok ok time achu...
 

Attachments

Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#9
hai frnds.........

அடுத்த பகுதி, அதுவும் நீங்கள் எதிர்பார்க்கும் பகுதியோடு வந்துட்டேன்... இத படிச்சதுக்கப்புறமாவது தெளிஞ்சீங்களான்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்... நோ... நோ... நோ வெப்பன்ஸ்... மீ ஸ்மால் பேபி... இதுக்கு அப்புறம் அடுத்த பகுதி இன்னும் சுவாரசியமா இருக்கும்... மறக்காம டிக்கெட் புக் பண்ணிடுங்க மை டியர்ஸ்... அப்புறம் டிக்கெட் கிடைக்கலன்னு இந்தக் குட்டி புள்ளைய வந்து கலாய்க்கக் கூடாது...:p;)

pls do read n drop ur comments frnds...


 

Attachments

Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#10
hai frnds.......

ஜகம் போற்றும் திருவிழாவாம், சித்திரை பெருவிழா... மதுரையிலே ஒரு விழா... இப்படின்னு டெய்லி அந்த வண்டில போற தாத்தா பேசிட்டே போவார்... தென் முக்கியமா இத சொல்லியே ஆகணும்... அவர் சொல்ற பிரபலமான கோட்ஸ், இந்த வார்த்தைகள அவர் சொல்ற அணுக்குல(விதம்)... லேடீஸ் எல்லாம் அவருக்கு பேன் ஆகிட்டாங்கன்னா பார்த்துக்கோங்க...

ஓகே ஓகே சொல்றேன் அந்த கோட்ஸ்ஸ "கண் பறிக்கும் நகைகள் கள்வரின் கைப் பறிக்கலாகாது" அண்ட் "பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். காதில் போட்டிருக்கும் தொங்கட்டான்... ஜிமிக்கி... வளையம்... இரட்டைவடச் சங்கிலி... ஆரம்... வளையல்..." இப்படின்னு எல்லா வகையான ஐடம்சையும் மிஸ் பண்ணாம சொல்லிடுவார்.

ஓ! இத படிச்சு குழம்பி போய்டீங்களா... (உனக்கு என்னவோ ஆச்சு... உன் கதையும் இப்படி தான் இருக்கு... இப்போ பேச்சும் இப்படி தான் இருக்குன்னு நீங்க சொல்றது கேக்குது:p) இது எங்க ஊர் திருவிழால நடந்த பசுமையான நிகழ்ச்சி... அத உங்ககிட்ட ஷேர் பண்ணேன் பிரண்ட்ஸ்... சோ இதுல இருந்தே தெரிஞ்சிருக்கும்... நீங்க நான் என்ன சொல்ல வரேன்னு... எஸ்... அதான் அதே தான்...

"என்ன நீ திருவிழா பார்க்க போயிட்டு, கதைக்கு டிமிக்கி கொடுத்துட்டன்னு" நீங்க என்ன புகழ்றது கேட்குது பிரண்ட்ஸ்... என்ன பண்ண பிரண்ட்ஸ்... எங்க ஊர் திருவிழா பார்க்க போகமா இருக்க முடியுமா? நம்ம மீனுவே நம்மள பார்க்க நகர்வலம் வரும் போது, அவங்கள ரீசிவ் பண்றது தானே முறை. இன்னியோட எல்லா விழாவும் முடிஞ்சிடுத்து... ஆனா எங்க வீட்ல இப்ப குலதெய்வம் கும்பிட ஊருக்கு போறோம் பிரண்ட்ஸ்... ஆனாலும், மை டியர்ஸ் நீங்க எல்லாம் வெயிட் பண்ணுவேளுட்டு நான் வந்துட்டேன்...

இதோ நெக்ஸ்ட் ud பிரண்ட்ஸ்...பிரண்ட்ஸ்... உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிருங்கள்... சென்ற பகுதிக்கு கருத்து போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பிரண்ட்ஸ்... நான் ஊருக்கு போயிட்டு வந்து மறக்காம பதில் போடறேன் பிரண்ட்ஸ்... நோ கோவிசுப்பயிங்... மீ கமிங்... சூன்...

 

Attachments

Last edited:
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.