காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#1
உயிருக்குயிரா காதல் பண்ணுங்க... அது டீச்சரா இருக்கட்டும்.. இல்லை ஸ்டூடண்ட்டா கூட இருக்கட்டும்... மேல்சாதியா இருக்கட்டும்.. கீழ் சாதியா கூட இருக்கட்டும்.. லவ் பண்றது உங்க உரிமை... உங்க வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கறது உங்க கடமை... ஆனா நீங்களா பொறந்து நீங்களவே வளர்ந்து இந்த நிலைமைக்கு ஆளாகல....
ஆயிரம் பொறுப்பில்லாத பெத்தவங்களுக்கு மத்தியில வாங்குற சம்பளத்துக்கு மேல கடனஒடன வாங்கி... கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே எல்லா ஆசைக்கும் முட்டுக்கட்டை போட்டு... வாயக்கட்டி வயித்தகட்டி சேமிச்சு... ஸகூலு பீசு.. பஸ்காசு.. ஆட்டோ காசு.. யூனிபார்ம் காசு... ட்யூசன் பீசு... டூ்ர் காசு.. டெய்லி பேட்டா.. அதுயிதுன்னு அத்தனைக்கும் தங்களோட செலவை விடடுக் கொடுத்து...
உசுரக் கொடுத்து வளர்த்து... நீங்க நல்லாயிருக்கணும்ங்கிறதுக்காகவே தங்களோட இளமைக் காலத்துலயிருந்து நடுத்தர வயசுக் காலம் வரைக்கும் தங்களோட அனைத்து சுக துக்கத்தையும் தொலைச்சு வாழ்ற உங்க பெத்தவங்களோட சம்மத்தை உங்க காதலுக்காக வாங்க பாருங்க...
அவங்க தரலைன்னா போராடுங்க... அப்படியும் தரலைன்னா கடுமையா போராடுங்க... சோறு கூட திங்காம உண்ணா விரதம் இருந்து கூட அவங்களோட அனுமதியை பெறப்பாருங்க... உங்களோட போராட்டத்தின் தீவிரத்திலேயே உங்களைப் பெத்தவங்களுக்கு உங்களோட காதலின் தீவிரம் தெரியும்...
அதைவச்சே... நீங்க நல்ல வாழ்க்கைத் துணையைத்தான் தேடீருக்கீங்களான்னு புரிய வரும்... ஒங்கள ஒன்னா சேக்க உங்க லவ்வரோட பெத்தவங்க கிட்ட அவங்களே கால்ல விழுந்த சேத்து வய்ப்பாங்க...
அப்படியும் முடியாத ஒரு காதலா... தூக்கி எறியுங்க உங்க புண்ணாக்கு காதலை... காதல்ங்கிறது ஒரு உணர்வு... அந்த உணர்வு ஒருத்தர் மேல வர்றது இன்னொருத்தர் மேலயும் வரும்ங்கிறது தான் உளவியல் ரீதியான அறிவியல் ரீதியான உண்மை....
இத்தனை போராட்டத்திற்கு பிறகும் உங்க காதல் கைகூடலைன்னா... அதுவும் நல்லதுக்குன்னே புரிஞ்சிகிட்டு விலகிருங்க....
காதல் வேணும்னா இரு இதயங்களின் இணைப்பா இருக்கலாம்.. ஆனா கல்யாணம் அப்படி கிடையாது.. இரு குடும்பங்களின் இணைப்பு.. இரண்டு குடும்பங்களுக்குமே ஒரு விதமான பார்வைஇருக்கு... அதை தூக்கி எறிஞ்சிட்டு எந்த ஒரு காதலும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.

இத்தனை நாள் நமக்காக மெனக்கெட்டு நம்மளை பெத்து வளர்த்தவங்களோட மனசை தவிக்கவிட்டுட்டு... இன்னொருத்தருக்காக நாம ஓடிப்போயி கல்யாணம் பண்ணினா... அது ஆத்மரீதியா வௌங்கவும் வௌங்காது... உருப்படவும் உருப்படாது...
உடுமலைப்பேட்டை காதலும்... ஓடிப்போன டீச்சர் மாணவன் காதலும் தான் இதற்கு சாட்சி....
காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை... இரண்டையும் ஒரு கோட்டுல சேர்க்க காதலர்களுக்கு அளவுக்கதிகமான மெனக்கெடல் இருக்கணும்....
தாலி கட்டிட்டா... தனியா படுத்துட்டா மட்டும் அது கல்யாணம்ஆயிராது...
டாட்...
@மோகனா
இப்போதான் இந்த பதிவை நான் படித்தேன் நண்பர்களே, இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் சரியாகவே எனக்கு தோன்றுகிறது........நீங்க என்ன நினைக்கிறீர்கள்???
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,483
Likes
148,292
Location
Madurai
#3
சரி தான் Aunty.. பொற்றோர்கள் வாழ்த்தோடுதான் காதல் கல்யாணம் நடக்கணும்ன்னு தான் எல்லாரும் நினைப்பாங்க.. ஆனால் பாதி பேர்க்கு அவர்களின் சூழ்நிலை வெளிய வந்து பண்ணுகிற அமையுது.. அதை அந்த நேரத்தில் தப்புன்னு வெளிய இருந்து பார்க்கறவன் சொல்ல முடியாதே!

இதனை நானும் ஆதரிக்கிறேன்.. But ஒரு சில இடங்களில் வறட்டுப்பிடிவாதமும் உண்டு Aunty.. அதையும் தாண்டி வெற்றின்னா வேறென்ன இருக்கு ;) எல்லாம் நம்ம கைல தான் இருக்கு.. :)

உங்களோட போராட்டத்தின் தீவிரத்திலேயே உங்களைப் பெத்தவங்களுக்கு உங்களோட காதலின் தீவிரம் தெரியும்...அதைவச்சே... நீங்க நல்ல வாழ்க்கைத் துணையைத்தான் தேடீருக்கீங்களான்னு புரிய வரும்... ஒங்கள ஒன்னா சேக்க உங்க லவ்வரோட பெத்தவங்க கிட்ட அவங்களே கால்ல விழுந்த சேத்து வய்ப்பாங்க...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
போன தலைமுறையை விட இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தாங்கள் பெற்றுள்ளது ஒரே மகன்/மகள் என்பதை முன்னிறுத்தி, தங்களுக்கு பூரண சம்மதம் இல்லாவிட்டாலும், அவர்களின் உறவை முறித்துக் கொள்வதை விட அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யவே விழைகிறார்கள்.

அப்படியும் முடியாத ஒரு காதலா... தூக்கி எறியுங்க உங்க புண்ணாக்கு காதலை... காதல்ங்கிறது ஒரு உணர்வு... அந்த உணர்வு ஒருத்தர் மேல வர்றது இன்னொருத்தர் மேலயும் வரும்ங்கிறது தான் உளவியல் ரீதியான அறிவியல் ரீதியான உண்மை....
இத்தனை போராட்டத்திற்கு பிறகும் உங்க காதல் கைகூடலைன்னா... அதுவும் நல்லதுக்குன்னே புரிஞ்சிகிட்டு விலகிருங்க....

இப்படி காதலுக்கு மரியாதை செய்பவர்கள் வெகு அரிது செல்வி அக்கா.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#5
இன்றைய கால கட்டத்தில் ஓரளவு காதல் மணங்களை பெற்றவர்கள் ஆதரிக்கிராங்கன்னுதான் சொல்லணும்.அப்படி இருக்கும்போது போராடறது தப்பில்லையே, முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணுங்க...உயிர் போகும் நிலை வரும்போது இந்த காதல் தேவைதான்னான்னு தோணுது...பெற்றவர்க்கு பிள்ளையும் இல்லாம காதலித்தவளுக்கு கணவனும் இல்லாம...எதற்கு இந்த நிலை???
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#6
போன தலைமுறையை விட இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தாங்கள் பெற்றுள்ளது ஒரே மகன்/மகள் என்பதை முன்னிறுத்தி, தங்களுக்கு பூரண சம்மதம் இல்லாவிட்டாலும், அவர்களின் உறவை முறித்துக் கொள்வதை விட அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யவே விழைகிறார்கள்.இப்படி காதலுக்கு மரியாதை செய்பவர்கள் வெகு அரிது செல்வி அக்கா.
வேறு வழி இல்லாதபோது விலகிடறது எவ்வளவோ பரவாயிலைன்னு தோணுது சுமதி..எத்தனை உயிர் இழப்பு களை நாம் கடந்து வந்துட்டோம்..வருத்தமா இருக்கு..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
நிச்சயம் சரியான கருத்து தான் அக்கா .

பெண்ணோ, பையனோ , யார் காதலித்தாலும் , அவங்க பெற்றோருக்கு , தான் ஏன் அந்தத் துணையைத் தேர்ந்தெடுத்தேன்னு பொறுமையா புரிய வைக்கணும் . இதுக்கு எவ்வளவு காலம் எடுத்துக்கிட்டாலும் பரவால்ல .

இதுக்கு முக்கியமா , மெச்சூரிட்டி வேணும் . இது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் 23 வயசுக்கு மேலேதான் வர வாய்ப்புண்டு .

அந்த ஆணுக்கு தகுந்த வேலை இருக்கா , எல்லா எதிர்ப்பை மீறி தன்னை வச்சுக் காப்பாத்த முடியுமா ..இதெல்லாம் நல்லா ஆராய்ஞ்சு தான் கல்யாணம் என்ற பந்தத்தில் இணைய வேண்டும் .

அதே சமயம் , வறட்டு கவுரவம் , ஜாதி வெறி பிடிச்ச குடும்பப் பின்னணியில் உள்ளவங்க , எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க அப்படின்னு நினைக்கிற ஆணும் பெண்ணும் காதலில் விழாமல் இருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும் .

பெற்றோரும் கண்டிப்பா அந்தப் பெண்ணையோ பையனையோ பற்றி நல்லா தீர விசாரிச்சு , நல்ல பொருத்தமானவங்களா இருந்தா முதலில் தயக்கம் இருந்தாலும் , தங்கள் குழந்தைகளின் சந்தோஷமே பிரதானம்னு கண்டிப்பா ஒத்துக்கிட்டு அவங்களை சேர்த்து வைக்கணும் .

ஒருவேளை இந்தப் பெற்றோர் அந்தப் பெண்ணையோ அல்லது ஆணையோ பற்றி தீர விசாரிச்சு , ஏதேனும் கெட்ட குணம் இருந்தா அதைச் சொல்லி புரியவச்சு விலக்கலாம். இல்லை ...படிப்பு , வேலை, நிறம், அழகு , அங்கஹீனம் ...இதுல குறைவான qualification உள்ள ஆணை அவர்கள் பெண் மணக்க விரும்பினால் , மணவாழ்வில் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை , இருவரும் ஒத்துப் போய் வாழ்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் இதெல்லாத்தையும் நல்லா புரியவச்சு, விரும்பினா சேர்க்கவும் இல்லை விலக்கவும் முன் வரணும் .

பெற்றோர் - பிள்ளைகள் ரெண்டு பேருமே,கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு , யாருக்கும் மனக் கஷ்டம் வராம பார்த்துக்கிட்டா பரஸ்பரம் சந்தோஷமே நிலவும் .

இப்பல்லாம் நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம்ன்னு அவங்க விரும்பின துணையையே ஏற்படுத்தி தராங்க . இதெல்லாம் வரவேற்க வேண்டிய விஷயங்களே .
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,210
Likes
73,629
Location
Chennai
#9
சரியா சொன்னிங்க ஜெயந்தி........என்னை கேட்டால் கொலை செய்யும் அளவுக்கு தீவிரமா இருக்கவங்க பிள்ளைகள் காதலிக்காம இருக்காதே நல்லது...அநியாயமா உயிர் போயிடுத்தே.........படிக்குபோது படிப்பையும் விட்டு ...இப்படி காதலில் விழுந்து வாழ்க்கையை என்னன்னு வாழ முன்னே இறந்து ..இது தேவையா...வெளியில் இருந்து ஆயிரம் பேர் காதலுக்கு ஆதரவா பேசலாம்...தனக்குன்னு வரும்போதுதானே புரியும்...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.