காதல்...

Joined
May 20, 2018
Messages
32
Likes
33
#1
எண்ணிலடங்கா அகராதிகள் தேடினாலும் இவ்வார்த்தையின் அர்த்தம் கோர்ப்பது கடினம்!!!...

ஊடலும்,கூடலும் மட்டுமே இதன் அம்சம் என எளிதில் சுருக்க இயலாது!!!...ஆழமான அன்பிற்கு மட்டுமே முதலிடம் இங்கு!!!...

உண்மை அன்பு மட்டுமே இங்கு தெளிந்திருக்கும் நீரோடையாய்...அன்பின் ஆழம் குறைந்தால் நீர்த்தும் போகும்!!!...

பரிசுத்த அன்பு மட்டுமே வாயிற்கதவுகளாய் இங்கு...!!!

மௌனம் கலைந்து போகும் மாயவித்தை இங்கு மட்டுமே சாத்தியம்!!!...

மனதின் கவலைகள் நீர்த்து போய் , விழிகள் கசிந்துருக....

ஒரு இதயத்தில் மற்றொரு இதயம் சிம்மாசனமிட்டு ஒய்யாரமாய் அமரும் இடம் தான் அது...!!!

ஆம் காதல்...!!!காதல் மட்டுமே...அத்துணைக்கும் அப்பாற்பட்ட அன்பின் மூத்த மொழியும் அதுவே காதல்...!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.