காதல்

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
உங்கள் பார்வையில் - காதல்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் காதல் என்ற ஒன்றை நிச்சியமாக கடந்தே வந்து இருப்பீர்கள்.
காதலை பற்றிய தங்களது கருத்துக்களை பதிவு செய்திடுங்கள்.

What you are thinking about Love?
 
Last edited:

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
காதல் பற்றிய எனது பார்வைகள்.

காதல் மனிதனின் உயிர்ப்புள்ள உணர்வு ..உணர்வின் வினோதம்.
உந்துதல் பெற்றால் உலகமே காணமல் போய்விடும்.
எதிர் பால் இனத்தவரை கவர்ந்து ஒத்த கருத்துக்களோடு இயந்து வாழ முற்படுவது காதல்.
புதிரும்,புனிதமும் கொண்டு இப்புவியில் மனிதனோடு சரசமாடும் உணர்வு..காதல்.
கனவுகள் வரும், வரும் கனவுகளை நிஜமாக்க சோதனைகளும் வரும், சோதனைகளை சந்தித்தால் சாதனைகளைத் தரும் காதல்.
காதலில் உழன்று கரம் பிடித்தவர்களுக்கு காதல் சொர்கத்தின் சூழலைத் தரும்.
சில பல காரணங்களால் காதல் கொண்ட இருவரும் கரம் பிடிக்க தவறினால் காதல் வடுக்களாக மாறி,
நரகத்தின் சூழலை உருவாக்கி உணர்வுகளை உறங்கவைதுவிடும்.
உலகம் உய்ய மனிதனின் உன்னத உணர்வு..!
காதல் .
 

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#3
அஸ்செட்ஸ் இரண்டு வகைப் படும்:
டேஞ்சிபில் அண்ட் இன்டேஞ்சிபில்.

காதல் அன்பு நட்பு இவை எல்லாம்
இண்டேஞ்சிபில் வகையைச் சார்ந்தது.

டேஞ்சிபில் அஸ்செட்ஸ் சேர்த்திட வேண்டி
இண்டேஞ்சிபில் அஸ்செட்சின் அருமையை
உணர மறந்து விடுகிறோம் பெரும்பாலும்...

இண்டேஞ்சிபில் அஸ்செட்சின் அருமை உணர்ந்தோருக்கு
டேஞ்சிபில் அஸ்செட்ஸ் தானே வந்து சேரும்...
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi venkat,

parasakthi kettadhu kaadhalai pathi... neenga kanakkai pathi solli kalaaikireenga....hahaha.... ippo kaadhal pathi vivek sonna commedy thaan ennoda nyaabagathukku varudhu...

kaadhal kalatti potta seruppu;
size sariyaa irundhaa yaar venaalum maattikkalaam ( hey joke pa... yaarum ennai adikka odi vara venaam)
sari naan oru karuthu sollren.....(kettutu kumuridaadeenga friends)
kaadhal lifeil oru alagaana part... success aagudho failure aagudho but adhu vera visayam. but,
nammai oruvar nesikkumbodhu, naamum nammai nesikka thodangugirom. kaanbavai yaavum alagaanadhaai, sandhosam tharuvadhaai.... oru alagaana thani ulagathil sanjarikka thodangugirom. namadhu vaalvukku artham kidaithu vittadhaai unargirom. endrum nilaithirukka vendugirom....

(friends, romba overaa irukko?)

paarunga parasakthi,

ovvoru manusanukkum ovvoru feelings.... illaya? hahahaha......
 

natpudan

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
264
Likes
164
Location
Doha
#5
Anitha - kanakkaana kaathalap paththi thaan sonnaen...

Kalaaikkiraennu solli aappu vekkaatheenga...

Yenna kumuridap poraanga...
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#7
note: பின்விலையுகளுக்கு பெண்மை.com பொறுப்பு இல்லை.

nan solrathu sariya shakthi,,
 

yams

Commander's of Penmai
Joined
Jul 4, 2011
Messages
1,595
Likes
1,855
Location
chennai
#9
காதல்!

உணர்வுகள் எல்லாம் இறந்து கிடப்பதாய் நினைத்திருக்க அதை உயிர்ப்பிக்கும் ஓர் அழகிய தூண்டுகோல்!



காதல்!


உன்னை நீ மட்டும் தான் அதிகமாய் தெரிந்திருப்பதாய் கர்வத்தில் இருக்க அதை பொய்யாக்கும் ஓர் நிஜம் காதல்!


காதல்!


உனக்காய் வாழாமல் இன்னொருவருக்காகவே நீ பிறபெடுத்ததாய் நினைக்க வைக்கும் ஓர் அதிசயம் காதல்!


காதல்!


நேற்றுவரை குழந்தையாய் உணர்ந்த உன்னை பருவத்துள் அடி எடுத்து வைத்ததாய் உணர்த்தும் காதல்!


காதல்!


அம்மா மடியை மறந்து உன் இணையின் மடிக்காக ஏங்க வைக்கும் அன்பாய் காதல்!


காதல்!


நிகழ்காலத்தில் இருந்த உன்னை கனவுலகிற்கு பறக்க வைக்கும் அழகான சிறகாய் காதல்!


காதல்!


பேச்சை மறந்து உன்னை மீண்டும் ஊமையாக்கி கண்களால் பேசும் பாஷை கற்பிக்கும் காதல்!


காதல்!


காத்திருப்பில் கூட இனிமையை உணர்த்தும் காதல்!


காதல்!


நினைத்ததும் உன் உயிரான இணையை நினைவால் தழுவ செய்யும் காதல்!


காதல்!


இரு உடல்களில் ஓர் உயிராய் வாழ செய்யும் ஓர் அதிசயம் காதல்!


காதல்!


உன் முகம் பார்க்க மறந்து உன் இணையின் முகத்திற்காக ஏங்க செய்யும் காதல்!


காதல்!


அன்னியனாய் நேற்று வரை இருந்த ஒருவன்/ஒருத்தி அன்று முதல் உன் வாழ்வாய் மாற்றும் காதல்.


காதல்!


அவர்களே மீண்டும் அன்னியம் ஆகி போக தாளாமல் இதயம் துடிக்க செய்யும் ஓர் மரணவலியாய் காதல்!


காதல்!


ஒன்று சேராத போதும் அவர்களும் என்றும் வாழும் ஓர் அழியா ஓவியமாய் இருக்கும் காதல்!


காதல்!


மரணத்தால் ஓர் உயிர் பிரிய அதன் இணையான உன்னையும் சேர்த்து கொன்று விடும் ஓர் கொடுமையான அரக்கனாய் மாறுமே உண்மை காதல்!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.