காய்களின் மருத்துவ பலன்கள் - Medicinal Benefits of Vegetables

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காய்களின் மருத்துவ பலன்கள்

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.

1. காரமுடைய பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
2. ஒரு மாதத்திற்கு 500 மிலிக்கு எண்ணையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
3.ஒரு வாரத்திற்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது. இந்த கொழுப்பு 8 தேக்கரண்டி வெண்ணைக்குச் சமமானது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
உப்பு :ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 கிராம் அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேல் சேர்த்துக் கொண்டால் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ஊறுகாய், அப்பளம், சட்னி ஆகியவைகளில் உப்பு அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.

ஜீரணம் :
மாவுப் பொருட்களின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மாவுச்சத்து ஜீரணமடைய சுண்ணாம்புச் சத்து ஊடகமாக உள்ளது. மாவுப்பொருட்களை நன்கு மென்று சாப்பிடவேண்டும். இல்லையென்றால் சரியாக ஜீரணம் ஆகாது. புரதம் இரைப்பையில் ஜீரணம் அடைய ஆரம்பிக்கிறது. புரதசத்து ஜீரணமடைய அமிலம் ஊடகமாக உள்ளது.

பூண்டு :1. பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
2. பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.
3. பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
4. இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.
5. பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்.
6. குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.
7. தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.
8. பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு, ஈ, மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.

இஞ்சி :இஞ்சியில் கால்ஷியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் கார்போ ஹைட்ரேட், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்கவேண்டும். பித்தத்தை குணமாக்கும்.

புதினா :புதினா கீரை இரத்த சுத்திகரிப்புக்குச் சிறந்த மருந்தாகும். தினமும் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாக்கி, கரும்புள்ளி மறைகிறது. பருக்கள் வருவது குறைகிறது. முகத்திலுள்ள எண்ணை பசை மறைகிறது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
வெங்காயம் :வெங்காயம் ஜீரணத்திற்கு நல்லது. வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். அப்ப்ஹ்ற்ங் டழ்ர்ல்ஹ்ற்ங் ஈண்ள்ன்ப்ல்ட்ண்க்ங் என்ற எண்ணை இருப்பதால் வெங்காயம் காரத்தன்மையோடு உள்ளது. இதயத்திற்கு சக்தியை தருகிறது. நரை முடியைத் தடுக்கும், தலையில் வழுக்கை விழாமல் காக்கும். எலும்புக்கு வலிமை அளிக்கும். பித்தநோய், கண் நோய், வாத நோய்கள் குணமாகும்.
கத்தரிக்காய், பீட்ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லாவகையான கேன்ஸர் நோய்களும் அண்டாது.
ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல் தடுக்கலாம்.
நார் சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவைகளை உண்டு வந்தால், நம் உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேரும்.
தக்காளி, சிவப்பு நிறமுள்ள ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை உண்டால் கண்பார்வை நன்கு தெரியும்.

கத்தரிக்காய் :கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

முருங்கைக்காய் :முருங்கைக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முருங்கைக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாரை ஏற்படுத்தும்.

வெண்டைக்காய் :Acetylated, Galeturomic என்ற அமிலங்கள் வெண்டைக்காய்க்கு வழுவழுப்பை ஏற்படுத்துகிறது. பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டெராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்றுநோய் வராமல் காக்கும்.
மாங்காய் :மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மை உள்ளது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
அவரக்காய் :அவரக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.

அத்திக்காய் :


அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்காயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.

பீர்க்கங்காய் :
பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.


கோவக்காய் :


கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.
புடலங்காய் :
புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து மற்றும் நிறைய புரதம் உள்ளது. தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
பாகற்காய் :


பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு பாகற்காய் ஜøஸ் சாப்பிடலாம்

சுரைக்காய் :


சுரைக்காயில் நீர்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்க நல்லது.
பூசனிக்காய் :பூசனிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச் சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.
கொத்தவரைக்காய் :கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத்தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
வாழைக்காய் :
வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
வெள்ளரிக்காய் :


வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும், உடலுக்கு குளிச்சியைத் தரும்.

சுண்டைக்காய் :

சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.பலாக்காய் :
பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.களாக்காய் :

களாக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலோஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலைமுடி நன்கு வளரும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
காரட் :

காரட்டில் வைட்டமின் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.பீன்ஸ் :
பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போ ஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும். வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.பீட்ரூட் :
பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்தசோகை நீங்கும்.


வெள்ளை முள்ளங்கி :
வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
சிவப்பு முள்ளங்கி :

சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.காலி ஃபிளவர் :
காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும். உடல் மெலியும்.முட்டைக்கோஸ் :
முட்டைக்கோசில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.நார்த்தங்காய் :

நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உள்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத் தொல்லையை நீக்கும்
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
[h=1]இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்[/h]
பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.
பழுத்த பிறகு தான், முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுவும் ஒரு டானிக் காய்கறிதான். 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கல்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச்சத்து 1.6 மி.கிராமும், விட்டமின் A 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும் உள்ளன.
நார்ச்சத்து, A, B, C விட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.முற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் கிடைக்கும் நன்மைகள்

பீர்க்கன்காய் கொடி இனத்தை சேர்ந்தது. இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது. தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது. இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன. காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய மாச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
[h=1]நீரிழிவுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்[/h]
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் இரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள விட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் A, டார்வோனின் B, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்மா, காசநோயாளிகள் இதனை அருந்தி வந்தால் பாதிப்பு குறையும்.


 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.