"காய்ச்சல் காணாமல் போகும்!'

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு சளி, மூச்சிரைப்பு, இருமல் என்று, நுரையீரல் பிரச்னைகள் தான் அதிகம் வரும். இந்த பிரச்னைகளுக்கு, வீட்டு மருந்தாக நாமே சில மூலிகை மருந்துகளைத் தரலாம். கற்பூரவள்ளி, துளசி, கண்டங்கத்தரி, தூதுவளை ஆகிய செடிகள் மிக எளிதாக வளரும்.

அதற்குத் தண்ணீர் மட்டும் விட்டாலே போதும். இந்த இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்த வேண்டும்.குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை வரும் போது, அரை டீஸ்பூன் பொடித்த பவுடருடன், தேன் கலந்து குழைத்துக் கொடுத்தால் சளி, இருமல் பறந்து போய்விடும். ஒரு வயதிற்குள் உள்ள குழந்தை என்றால், இந்த மூலிகைப் பொடியை, தண்ணீர் விட்டுப் பிசைந்து மாத்திரை போல செய்து, காயவைத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைக்கு சளி வரும் போது, மருந்து உரைகல்லில் இந்த மாத்திரையை இரண்டு முறை உரசி, தேன் கலந்து நாவில் தடவலாம். மூன்று வயது குழந்தை என்றால், மூலிகைக் கீரைகளை நல்லெண்ணெயில் வதக்கி, துவையலாக அரைத்து, சாப்பாட்டில் பிசைந்து ஊட்டி விடலாம்.திடீரென குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் சமாளிக்க, வீட்டில் நிலவேம்புச் செடி வளர்க்கலாம். இந்த நில வேம்பு இலையை, கஷாயம் வைத்துக் கொடுக்கலாம் அல்லது பொடி செய்து, தேனில் குழைத்தும் கொடுக்கலாம். காய்ச்சல் காணாமல் போய்விடும்.

குழந்தைகளுக்கு சரும அலர்ஜி உண்டாகிவிட்டால், குப்பைமேனி, வேப்பிலை இரண்டும் தேவைப்படும். குப்பைமேனி எங்கு வேண்டுமானாலும், மிக எளிதாக வளரும். குப்பைமேனி இலை, வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து அரைத்து, குழந்தையின் உடம்பில் பூசி, பின் குளிக்க வைத்தால், அலர்ஜி சரியாகிவிடும்.குழந்தை எதையா வது சாப்பிட்டு விட்டு, வயிற்றுப் பொருமலில் தவிக்கும். அதற்கு, பொடுதலை இலைக ளை நிழலில் உலர்த்தி, பொடித்து தேன் கலந்து குழைத் துக் கொடுக் கலாம்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
hi sudha,
ore threadil superai niraya kulandhaigal prachanaiku elidhana theervai valangi ulleergal... super....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.