காலையில் எழுந்ததும் இடுப்புப் பகுதியும&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காலையில் எழுந்ததும் இடுப்புப் பகுதியும் முதுகும் ஏன் வலிக்கின்றன


டாக்டர் எஸ்.ராஜசேகரன்,


முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்.


``பொதுவாக, பருவநிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, காலையில் எழுந்ததும் சிலருக்கு முதுகுவலியும், முதுகெலும்பு இறுக்கமானதுபோன்ற உணர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போதுமான அளவு ஓய்வு எடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். தசைப்பிடிப்பு, வைட்டமின் டி குறைபாடு, சர்க்கரை நோய், ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) எனும் முதுகெலும்புப் பிரச்னை போன்றவற்றின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். பெண்களுக்கு முன்கூட்டியே ஏற்படும் மெனோபாஸ் (Early menopause) காரணமாகவும் இப்படி ஏற்படலாம்.

காலையில் எழும்போது எல்லா தசைகளும் தளர்ந்து இருக்கும். முதுகெலும்பை வயிற்றுப்பகுதியின் தசைகளும் முதுகின் தசைகளும் சேர்ந்தே தாங்குகின்றன. உங்கள் பி.எம்.ஐ அளவு சரியாக இருந்தாலும், தொப்பை இருப்பதால் அதில் உள்ள அதிகத் தசைகளால் உங்கள் உடலின் நிலை மாறுபட்டு, முதுகெலும்பு முன்பக்கமாக அழுத்தம் பெற வாய்ப்புள்ளது.

இதனால், முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் தரப்படும். இதுவும் காலையில் முதுகுவலி ஏற்படுவதற்கும், முதுகுத்தண்டு இறுக்கமானதாகத் தோன்றுவதற்கும் காரணமாக இருக்கக்கூடும். வாரத்துக்கு நான்கைந்து நாட்களுக்காவது தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது, முதுகுத்தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் செய்வது, தொப்பை குறைப்புக்கான பயிற்சிகள் செய்வது, டயட் பின்பற்றுவது மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கும்.

45 வயதாகிவிட்டது என்றால், உங்களுக்கு எலும்பு தேய்தல் போன்ற வேறு ஏதேனும் தீவிரமான பிரச்னை உள்ளதா என்று உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.’’
 

Ragam23

Citizen's of Penmai
Joined
Oct 10, 2015
Messages
608
Likes
1,426
Location
Australia
#2
Re: காலையில் எழுந்ததும் இடுப்புப் பகுதியு&#299

Tfs..........​
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.