காலை ஆட்டும் பழக்கம்

#1
காரணமின்றி காலை ஆட்டும் பழக்கம் பலரிடம் உண்டு. தவிர்க்க முடியாத ஓர் உந்துதலால் உடலின் சில பாகங்களை (கை) ஆட்டுவது நேர்ந்தாலும், கால்களை ஆட்டும் பழக்கம் தான் அதிகம் காணப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Restless Legs Syndrome (RLS) (அ) Wittmaack - Egbom's Syndrome என்பார்கள்.

இந்த காலாட்டும் உந்துதல், தூங்கும் முன்பு எழலாம். இந்த அறிகுறிகள் இரண்டு வகையாக காலாட்டும் பழக்கத்தை சொல்லலாம்.

பிரதம சின்ட்ரோம் - காரணம் தெரியாத காலாட்டும் பழக்கம். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் சாதாரணமாக 40 - 45 வயதில் ஏற்படும். நிதானமாக தொடங்கி, தொடர்ச்சியாக மாறலாம் அல்லது பல மாதங்கள் மறைந்தும் இருக்கலாம்.

இரண்டாம் பட்ச சின்ட்ரோம் - இது தீடிரென்று ஏற்படும். ஆரம்பத்திலிருந்தே தினமும் ஏற்படலாம். சாதாரணமாக 40 வயதில் தோன்றும். சில மருந்துகள் இந்த சின்ட்ரோமை உண்டாக்கலாம்.

அறிகுறிகள்

இனம் புரியாத உந்துதல் உணர்வுகள் கால்களை அல்லது கைகளை அசைக்க தூண்டும். இந்த உணர்வை சரியாக விவரிக்க முடியாது. 'எறும்புகள் ஊர்வது போல் உணர்வு.' மின்சாரம் தாக்கியது போல், ஊசிகள் குத்தியது போல, மரத்துப் போதல், போன்றவற்றை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லுவார்கள். முன்பே சொன்னபடி, இந்த உந்துதல் உடலின் எந்த பாகத்திலும் ஏற்படலாம். ஆனால் அதிகமாக ஏற்படுவது கால்களில் பிறகு கைகளில்

இந்த உந்துதல் உடலை (கால்களை) அசைக்க தூண்டும். உடல் அசைவுகளால் நடந்தால், சரியாகிவிடும். இந்த நிவாரணம் தற்காலிகமானது.

ஓய்வெடுக்கும் போது அதிகமாகும். உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதும், படுத்திருந்தாலும், அல்லது தூங்கினாலும், இந்த காலை அசைக்கும் சின்ட்ரோம் அதிகமாகும். தூங்குபவரை எழுப்பிவிடும். தூக்க இழப்பும், வேதனையும் அதிகமாக ஏற்படும்.

காலாட்டும் உந்துதல் சிலருக்கு நாள்முழுவதும் இருக்கும். பலருக்கு சாயங்காலத்திலும் காலையிலும் இருக்கும்.

காரணங்கள்

சரியான காரணங்களை அறுதியிற்று கூற முடியாமல் போனாலும் பரம்பரை காரணமாகலாம். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60% பேர்களுக்கு பரம்பரையாக வருவது தெரிய வந்திருக்கிறது.

ஆய்வுகளும் ஆராய்ச்சிகளாலும், டோபாமைன் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும் முக்கிய காரணமாகலாம் என்று தெரிய வருகிறது. டோபோமைன் (Dopamine) என்பது ஒரு Neuro - transmitter. அதாவது நரம்பணு. மூளையிலிருந்து செய்திகளை அனுப்பத் தேவையானது. இரும்புச்சத்து, டோபமைனின் முன்னோடியான லேவடூடாபாவை உருவாக்க உதவுகிறது.

மூளையின் ஒரு பகுதியான Sabstantia Nigra வில் அயச்சத்தும், டோபோமைன் குறைவதால் காலாட்டும் வியாதி ஏற்படலாம். இந்த வியரி உள்ளவர்களில் 20% சோகை (அயச்சத்து) குறைபாடு உள்ளவர்கள்.

இதர காரணங்களாக விரிந்து, நீண்டு போன ரத்த நாளங்கள், மக்னீஷியம் குறைவது, தூக்க கோளாறுகள் (குறட்டை), யுரேமியா, நீரிழிவு, தைராய்ட் கோளாறுகள், பார்க்கின்சன் வியாதி, எல்லைப்புற நரம்பு பாதிப்பு, சில ஆட்டோ - இம்யூன் வியாதிகள். (உதாரணம் சின்ட்ரோம் - Sjogren's syndrome), ருமடாய்டு ஆர்த்தரைடீஸ் இவற்றை சொல்லலாம்.

சில மருந்துகள் "புப்ரெஷன்", அலர்ஜி போன்றவற்றுக்காக கொடுக்கும் மருந்துகளும் உங்களை காலாட்டச் செய்யலாம்.

தாழ்நிலை சர்க்கரை (Hypoglycemia) காலாட்டும் வழக்கத்தை அதிகமாக்கும்.

அறுவை சிகிச்சைகள், உடலில் எங்கு செய்தாலும் சரி, காரணமாகலாம்.

உழைப்பில்லாத வாழ்க்கை, அதீத உடல் பருமன், புகைபிடித்தல் இவற்றால் கால்கள் தாங்களாகவே ஆடும் நோய் ஏற்படலாம்.

சிகிச்சை

பார்க்கின்ஸன் வியாதிக்கு கொடுக்கப்படும் மருந்துகள், தீவிரமான காலசைக்கும் நோய்க்கு பயன்படும். பென்ஸோடியாஜிபைன் (Banzodiazepine) வலிப்பு நோய்களுக்கு தரும் மருந்துகள் - இவை பயன்படுத்தப்படுகின்றன. முதல் ரக காலாட்டும் நோய்க்கு மருந்துகள் பல பக்க விளைவுகளை உண்டாக்கும். இவை பிரட்டல், தலை சுற்றல், பிரமையால் ஏற்படும் கனவுகள், பகலில் தூக்க மயக்கம், இரண்டாவது பிரிவு காலாட்டும் நோய்க்கு மருந்துகள் நிவாரணம் அளிக்கும்.

கால்களின் தசைகளை "நீட்டுவிக்கும்" பயிற்சி உடனே பலனளிக்கும். நின்று கொண்டு, உடலை வளைத்து கைகளால் தரையை தொடவும். முடிந்தால் கால் விரல்களை தொடவும். இந்த குனிந்த நிலையிலேயே 10-15 வினாடிகள் இருக்கவும். இதை 3 தடவை செய்யவும்.

உடலில் திசுக்களில் இரும்புச்சத்து ஒரு அயச்சத்து + புரதம் என்ற கலவையாக சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலவையை ஃபெரிடின் (Ferritin) என்பார்கள். இந்த ஃபெரிடின் அளவை சோதிக்க வேண்டும். மருந்துவரின் கண்காணிப்பில் அயச்சத்து மருந்துகளை பயன்படுத்த வேண்டும். Ferritin லெவலை பரிசோதிக்காமல் அயச்சத்தை எடுத்துக் கொள்வது அபாயகரமானது.

சில வெளிநாட்டு மருத்துவர்கள், மருந்துகளின்றி, சில பயிற்சிகள் மூலம் நிவாரணம் பெறுவதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

தூக்க நோய்களில் ஒன்றான இந்த காலாட்டும் வியாதிக்கு முற்றிலும் குணமாக்கும் நிவாரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைய நிவாரணங்கள் வியாதியை கட்டுபடுத்தும், அவ்வளவு தான். சிலருக்கு இந்த வியாதி விட்டு விட்டு வரும். தூக்கத்தில் மற்றுமின்றி, கால் கைகளை தன்னிச்சையாக ஆட்டுவது விழித்திருக்கும் போதும் நேரிடும். பொது இடங்களில் இந்த மாதிரி கை கால்கள் ஆடுவது தர்ம சங்கடமான நிலைமை தான்.
 

RathideviDeva

Registered User
Blogger
#2
Summa kaala aatradhukku ivlo periya vilakkamaa:amazed:. Summa kaala aatikkittirukkavanga kooda bayaththula niriththiruvaanga:rolleyes:.

En kanavar eppavum kaala aatikkittu iruppaar. Ennai poruththavaraikkum kaala aatraangannaa ore reason, adhu......odambula kozhuppu adhigam aagirichchunnu arththam:p
 

dnsintu

Well-Known Member
#3
hi jaya,
thanks for de sharing, dear...

aiyo, kaalaattuvathukku sigichchai varai poganuma???
omg...

naan pirantha annaikey, kaalattinenu amma sonnanga...
en amma bayanthaangelaam, oru velai 'spcl kid'a poranthuttenonu???
aanal, ippo varai thoongurathukku munbu kaalaattum palakkam undu...
yean, pc use pannumbothu kooda, naan kaalaattuven...
athu palakkam aayiduchi...
((enakkoru doubt... aanal 40 vayathai thodurathukku enakku innum pala varushanggal aagumey... intha palakkam yeppadi enakku vanthathu???))

ithu nallatha kettatha???
:rolleyes:
vidai therinthaal udaney sollunga pa...
 

gkarti

Super Moderator
Staff member
#6
Adeiiiii Yen da Ipadi Beethi ah Kelappura..?? Pora Pokka Partha Udambu la irukura Oru Kodi Parts um Damaged than Pola.. :Cry: Naanlam Veembukkunne Kaala aatuvene...:rolleyes::rolleyes: Enga Amma Kooda Rathi Soldra Pola than Solvanga.. Ippo Athu Noyaaa..?? Mommy.... :violin:
 
#7
hi jks,
intha pazhakkam en hus kitta irukku..avanga system la work pannum pothu mattum ippadi seiratai parthu irukean...actually intha habit en FIL kitta irunthu en HUS ku vanthu irukku...
 
#8
JJJJ un thread patha informative ah irukumay nu naan padika arambichithey, ana ipo un thread pakum pothu a shapeless lump is rolling between the stomach and throat feeling thaan varuthu:fear::fear:

Ithula oru nala vishyama ena teriyuma j ??? Parkinson kuda intha diesease compare panathu thaan, scientist ku intha madhiri disorders vanthruku nu science soluthu:heh::heh:

Iruku disease ku medicine kandu pidikrangalo illaiyo dinam dinam oru disease kandupidichi namala kalvara paduthuranga pa:amuse::amuse::amuse::amuse:
 
#9
Summa kaala aatradhukku ivlo periya vilakkamaa:amazed:. Summa kaala aatikkittirukkavanga kooda bayaththula niriththiruvaanga:rolleyes:.

En kanavar eppavum kaala aatikkittu iruppaar. Ennai poruththavaraikkum kaala aatraangannaa ore reason, adhu......odambula kozhuppu adhigam aagirichchunnu arththam:p
Sister athu epdi all amma's oray wavelength la think panreenga:):):):)
 
#11
Adeiiiii Yen da Ipadi Beethi ah Kelappura..?? Pora Pokka Partha Udambu la irukura Oru Kodi Parts um Damaged than Pola.. :Cry: Naanlam Veembukkunne Kaala aatuvene...:rolleyes::rolleyes: Enga Amma Kooda Rathi Soldra Pola than Solvanga.. Ippo Athu Noyaaa..?? Mommy.... :violin:
Hahaha vidra vidra nama panra agarathi ku ella vyathiyum namala kandu talai terichi odidum

En ma aduthu enna thread ma, Cross leg sitting posture pathi thana, naanga ethukum asara matom
 

RathideviDeva

Registered User
Blogger
#15
a shapeless lump is rolling between the stomach and throat feeling thaan varuthu:fear::fear:
Vimmm, U Mean Vayitrukkum Thondaikkum Uruvamilla Oru Urundu... :lol:
Adhu onnum illa neththu idli saapidum bodhu sariya mennu thinnirukka maatteenga, adhaan. Unga ammaava adi mudhugula rendu saathu saatha sollunga, thaanaa sari aagidum:rolleyes:.
 
Last edited:
#17
Adhu onnum illa neththu idli saapidum bodhu sariya mennu thinnirukka maatteenga, adhaan. Unga ammaava adi mudhugula rendu saathu saatha sollunga, thaanaa sari aagidum:rolleyes:.
Hahaha, okk sister neenga sona appeal yethu seinchralam

Ana enaku doubt sister, vairmuthu intha feeling thaan vari eluthinar nu epdi kandupidicheenga,analum unga nyanamay nyanam thaan,great sister
:yo::yo::yo:
 

Important Announcements!