காலை எழுந்தவுடன் எதை உட்கொள்ளலாம்?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
காலை எழுந்தவுடன் எதை உட்கொள்ளலாம்?


காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறு வெங்காயம் அல்லது தீயில் வாட்டிய பூண்டு சாப்பிடுவது, தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆகியவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நெல்லி வற்றல், சந்தனத்தூள், கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்த பின் வடிகட்டி, அந்நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.


வெல்லத்தை கெட்டியாக பாகு வைத்து, அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இருமல் வரும்போது இதில் சிறிது எடுத்து, வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். மண் சட்டியில் உப்பை வறுத்து, துணியில் கட்டி இரண்டு, மூன்று வேளை உப்பு ஒத்தடம் கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில், அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாக குழைய விடாமல் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.
நூல்கோலை துருவி ஊற வைத்து, பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசிறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால், சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும். தேங்காய் எண்ணெயை, மிதமான தீயில் வைத்து காய்ந்ததும், வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்து விடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால், வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.


வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். மாதுளை பழச்சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாதுளையை சாறாகதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. பழத்தை உடைத்து பருப்புகளை தனியாக சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது. பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி, படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.


திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால், இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம். குழந்தைகள் சிறந்த ஞாபக சக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் காலை உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.


சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.