கால்சியமும் முக்கியத்துவமும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கால்சியமும் முக்கியத்துவமும்


மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.

கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.

கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பல வேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கால்சியம் உதவி செய்கிறது.

மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.

வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.


கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.


தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.

கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
கால்சியம் சத்து...

மனித உடலுக்கு உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த தாதுப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் பற்றாக்குறை உண்டாகும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீர்கேடடைகின்றன. மேலும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் உடல் உறுப்புகளின் பலத்திற்கும் இவையே பயன் படுகின்றன.

உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், போன்ற தாதுப் பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

இவற்றில் கால்சியத்தின் பயன்பாடுகள் பற்றியும் அவை எதில் அதிகம் நிறைந்துள்ளன என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். வளர்ச்சி குன்றி காணப்படும்.

இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றின் சுருங்கி விரியும் தன்மைக்கு கால்சியம் மிகவும் உதவுகிறது. இதனால் உடலின் பாகங்களுக்குத் தேவையான இரத்தத்தை இரத்தக்குழாய்கள் இலகுவாக கடத்துகின்றன.

நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு கால்சியம் சிறந்த பணியாளாக செயல்படுகிறது. மேலும் இவற்றின் சுரப்பு நீரான என்ஸைம் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாதது. இரத்தம் உறைதலிலும் கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

பற்களின் உறுதிக்கும் கால்சியம் சத்து முக்கியமானது. அதாவது உடலின் அனைத்து செயல் பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாததாக இருக்கிறது.

உடலில் 99 சதவிகித கால்சிய சத்துக்கள் எலும்புகளிலும், பற்களிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படும்போது கொடுப்பதுடன் மீதமுள்ளவற்றை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது. இது வயதிற்குத் தகுந்தவாறு நடைபெறும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியத் தேவையாகும். கால்சியம் சத்து குறையும்போது முதுமையில் உடல் பலமிழக்கிறது. பெண்களுக்கு கால்சியத் சத்து அவசியம் தேவையாகும். மாதவிலக்கு முடியும் தருவாயான மெனோபாஸ் காலத்தில் அதிக அளவு கால்சியம் சத்து குறைவு உண்டாகும்.

தேவையான கால்சியம் சத்து

7 முதல் 12 மாத குழந்தைக்கு - 270 மி.கி.
1 முதல் 3 வயது வரை - 500 மி.கி.
4 முதல் 8 வயது வரை - 800 மி.கி.
9 முதல் 13 வயது வரை - 1300 மி.கி.
14 முதல் 18 வயது வரை - 1300 மி.கி.
19 முதுல் 40 வயது வரை - 1200 மி.கி
40 முதல் - 1100 மி.கி.


கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் எலும்புகள் பலமிழக்கின்றன. கருவில் இருக்கும்போதே தாய்க்கு கால்சியம் சத்து குறைந்திருந்தால் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது. இதனால் மயக்கம், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை. இதனால் இதயநோய்கள் உண்டாக ஏதுவாகிறது.

தசைகள் சுருங்கும் தன்மை குறைவதால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். தசைகள் இறுகாமல் தொளதொளவென மாறிவிடும்.

கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. நகங்கள் வெளுத்துக் காணப்படும். பற்கள் தேய்மானம் அடையும். பற்களில் கூச்சம் உண்டாகும் பற்சிதைவு ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடு குறைவதால் உடலுக்கு அதிக கால்சியம் தேவைப்படும். இதனால் எலும்புகளில் சேமிக்கப்ட்ட கால்சியம் சத்துக்கள் உடல் எடுத்துக்கொள்கிறது. இதனால் கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஓஸ்டியோபொராசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, கை கால் வலி , எலும்பு பலமிழப்பு போன்றவை உண்டாகும். இதுபோல் ஆண்களுக்கும் 50 வயதிற்கு மேல் கால்சியம் குறைபாடு ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டைப் போக்க பல மருந்துகள் தற்போது மருத்துவச் சந்தைகளில் விற்கப்படுகிறது.

ஆனால் உணவின் மூலம் இப்பற்றாக் குறையைப் போக்கி கால்சியம் இழப்பினால் உண்டாகும் பாதிப்புகளை நீக்கி ஆயுள் முழுவதும் உறுதியாகவும் பலமாகவும் வாழலாம்.

கால்சியம் சத்துநிறைந்த பொருட்கள்


பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பால் அருந்துவது நல்லது. அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பாலாடை, நெய் முதலியவற்றிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகம் உள்ளது.

கீரைகளில் அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, அகத்திக்கீரை, லட்சுக் கொட்டைக் கீரை, வெந்தையக் கீரை போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.

பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள் இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. முளைகட்டிய பயறு வகைகளில் அதிகம் உள்ளது. அதிலும் பச்சைப் பயிற்றில் அதிக கால்சியம் உள்ளது.

நம் உடலுக்கு அவசியத் தேவையான கால்சியத்தை பெற இன்றிலிருந்தே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.