கால் ஆணியை சமாளிக்க எளிய சிகிச்சை முறை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கால் ஆணியை சமாளிக்க எளிய சிகிச்சை முறை



கால் பாதத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேடு போன்ற பகுதியுடன் ஏற்படும் கால் ஆணி நோய் ஏற்பட்டால் நடக்கும் போதும், நிற்கும் போதும் வலி ஏற்படும். இதனை எளிய முறையில் குணப்படுத்துவது பற்றி, மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, கால் ஆணி என்பது பாதத்தில் ஆணி போன்ற ஒரு வளர்ச்சி இருக்கும். அதன் வெளிப்பகுதி கடினமாக இருக்கும். உள்முனை சதையின் உள் பதிந்து வளர்கிறது. நிற்கும் போது, மற்றும் நடக்கும் போது இந்த பகுதியில் அழுத்தம் கிடைப்பதால் வலி ஏற்படும். சிலருக்கு பாதத்தில் பக்கவாட்டிலும் ஏற்படலாம்.இருபாலருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான்.

வகைகள்

கடினமான கால் ஆணி

சிறிய தட்டையான கடினமான தோல் போன்ற அமைப்பு வெளியில் தென்படும். ஆனால் உள்ளே ஆணி போன்று வளர்ந்து இருக்கும்.
மிருதுவான கால் ஆணி

வெளியில் வெண்மையாக மிருதுவான தோல் இருக்கும். சில நேரம் சிவந்து காணப்படும். விரல்களுக்கு அடியில் காணப்படும்.
விதை ஆணி (seed corn)

வித்துகள் போன்று 5 க்கும் மேல் ஒரே இடத்தில் அதிக அழுத்தம் கிடைக்கும் இடத்தில் இருந்து வலியை உருவாக்கும் வகையினை சீட் கார்ன் என அழைக்கின்றனர்.
அறிகுறிகள்

கால் ஆணியின் வலி ஆள் ஆளுக்கு வேறுபடும். சிவந்த நிறத்தில் தோல் கடினமாய் இருக்கும். சில நேரங்களில் சீழ் அல்லது நீர் போன்ற திரவத்தை வெளிவிடும். சர்க்கரை நோய் உடையவர்களுக்கு கால் ஆணி இடத்தில் புண் ஏற்படும்.
காரணங்கள்

முறையற்ற விதத்தில் நடப்பதாலும், சரியான அளவில் இல்லாத, ஒத்துக் கொள்ளாத காலணி அணிவதாலும், குதிகால் உயர்ந்த காலணிகள் அணிவதாலும், அதிக நேரம் நிற்பதாலும், கரடு முரடான பாதையில் நடப்பதாலும் ஏற்படலாம். பிறவியிலேயே பாதத்தில் குறைபாடுகள் இருக்கும் போது காலுறை இன்றி காலணிகளை போடும் போது அழுத்தம் ஏற்படும். அதிக நேரம் தண்ணீரில் பாதங்கள் நனையும் போதும், காலணி அணிந்திருக்கும் போது வியர்வை அதிகம் இருந்தாலும் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு சலம் ஏற்படும்.
சிகிச்சை

காலணிகளை அடிக்கடி மாற்ற வேண்டும். சாலிசிலிக் அமில களிம்புகளை போட வேண்டும். யூரியா அதிகம் உள்ள களிம்புகளை போடும் போது குறையும். அறுவை சிகிச்சை மூலமும் கால் ஆணியை அகற்றலாம்.
ஆரோக்கியம் ஆனந்தம் மூலிகை சிகிச்சை

மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது கட்டுப்போடலாம். மஞ்சள், வசம்பு, கற்பூரம், மருதாணி அரைத்து இதே போல் கட்டலாம். அதிமதுரத்தை கடுகு எண்ணெயில் உரைத்துப் போடலாம். ஆமணக்கு எண்ணெயையும் இதற்கு பயன்படுத்தலாம்.

மூலிகைகளில் இருந்து ஷாரம் தயாரித்து காரத்துடன் கட்டுப்போடலாம். எலுமிச்சை சாறுடன் வெள்ளை பூண்டு சேர்த்து கட்டுப்போடலாம். மின்சார சூட்டு கோல் மூலம் காலணியை கரித்த பின்னர் சோற்று கற்றாழை ஜெல்லினை பயன்படுத்தலாம்.
வீட்டு வைத்தியம்

பப்பாளிகாயை அரைத்து கால் ஆணியில் கட்டி வைக்கலாம். சுண்ணாம்பை காலில் வைத்து கட்டலாம். ஆப்பசோடாவுடன் எலுமிச்சசை சாறு கலந்து கட்டலாம். சிடார் வினிகரில் 20 நிமிடம் காலை ஊற வைத்து கால் ஆணியில் ஆப்ப சோடா வைத்து கட்டலாம்.

தடுக்கும் முறை

சரியான காலணிகளை போடவேண்டும். தினமும் காலை தேய்த்து கழுவி சுத்தம் பேண வேண்டும். தட்டையான இடத்தில் தான் நடக்க வேண்டும். குதிகால் உயர்ந்த காலணிகளை தவிர்க்க வேண்டும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.