கால் ஆணி - Remedies for Corn & Calluses

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கால் ஆணி
கால் ஆணி என்றால் என்ன? சாதாரணமாக கைகளிலும், கால் விரல்களிலும் தோல் காய்த்துப் போய் இறுகி கெட்டியாவது தான். பொதுவாக 'ஆணி' எனப்படுகிறது. கால் கட்டைவிரலின் அடியிலும், விரல்களின் நடுவிலும் ஏற்படும் போது Corn என்றும் உள்ளங்கால்களில் [FONT=TAM_ELANGO_Barathi](
Soles of feet[FONT=TAM_ELANGO_Barathi]) [/FONT] தோன்றும் போது Calluses எனப்படும். ஒரே இடத்தில் தொடர்ந்த உராய்வு [FONT=TAM_ELANGO_Barathi]([/FONT]Constant friction) இருக்கும் போதும், குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மீறிய அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் போதும் இவ்வகைக் காய்ப்புகளும், ஆணிகளும் தோன்றுகின்றன. வலி எதையும் ஏற்படுத்தாத வரையில் இவை பற்றி யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.


தொழில் நிமித்தம் தங்கள் கைகள், கால்கள் மற்றும் விரல்களைத் தொடர்ந்து உராய்வுக்கு உட்படுத்துகின்ற மண் வெட்டுவோர், லாரி மற்றும் பேருந்து ஒட்டுனர்கள், தையற்காரர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கு இவ்வகை காய்ப்புகள் எளிதாக ஏற்படக் கூடும்.


காரணங்கள்


• ஆணிகளை உண்டாக்கும் சர்ம தடிப்பு, ஒரு வித தற்காப்பு நடவடிக்கை தான். எப்போதும் ஒன்றோடொன்று உராய்ந்து கொண்டு, அதிக அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த இடங்களில் ஏற்படும் காய்ப்பு தோலை பாதுகாக்கத் தான். நாம் பாதங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஆணி, வலி இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் போது தான் கால்களை கவனிக்கிறோம்.


• அளவில் சரியில்லாத, பொருத்தமில்லாத, இறுக்கமான காலணிகள் அணிவது முக்கிய காரணம். இறுக்கமான காலுறைகள் [FONT=TAM_ELANGO_Barathi]([/FONT]Socks[FONT=TAM_ELANGO_Barathi]) [/FONT]அணிவதும் காரணமாகலாம். தரம் குறைந்த பிளாஸ்டிக் செருப்புகளும் காரணமாகலாம்.


• உருக்குலைந்த கட்டை விரல்கள், நடக்கும் பாணி


• கெட்டியான தரை / பாதையில் அதிக நேரம் நிற்பது, நடப்பது


• தொழில் ரீதியாக, ஒரே இடத்தில் அழுத்தம் ஏற்படுவது


உதாரணம்


முன்பு சொன்ன தொழில்கள் செய்பவர்கள். பொதுவாக காய்ப்புகளால் பெரிதும் வேதனை ஏற்படுவதில்லை. பல சமயங்களில் காய்ப்புகள் தானாகவே மறையலாம்.


வீட்டு வைத்தியம்


• ஆணிகளை "கரைக்க" தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை, தினமும் 3 அல்லது 4 தினங்கள் தடவவும் இதனால் கெட்டிபட்டுப் போன தோல் மிருதுவாகும்.


• மஞ்சள் பொடியை தேன் அல்லது விளக்கெண்ணையில் சேர்த்து ஆணிகளின் மேல் தடவலாம்.


• பப்பாளி சாற்றை ஆணிகளின் மேல் தடவலாம்.


• சிறு துணித்துண்டை வினிகரில் (புளிக்காடி [FONT=TAM_ELANGO_Barathi]- [/FONT]Vinegar) தோய்த்து ஆணி மேல் வைத்து கட்டவும். ஒன்றரை நாள் கழித்து ஆணி தானாகவே உதிர்ந்துவிடும்.


இதர குறிப்புகள்


• காலின் விரல்களை அழுத்தும் முன்பாகம் குறுகலான காலணிகளை அணியாதீர்கள். புது காலணிகளை வாங்கும் போது உங்கள் காலின் அளவுகளை சரியாக அளக்க, நின்று கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பகல் வேளைகளில் காலணிகளை வாங்கவும். பகலில் கால்கள் சிறிது "வீங்கி" இருக்கும்.


• ஆயுர்வேத மருந்தான காசி சாதி தைலம் பயனளிக்கும்.
[/FONT]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: கால் ஆணி- Corn & Culluses

உங்கள் காலில் ஆணி ஏற்பட்டால் செய்ய வேண்டியது


பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.


அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்:

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.