கிச்சுக் கிச்சு தாம்பாளம்.-Kichu kichu thaambaalam

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#1

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்":

ஓடி ஓடிக்களைத்த காவிரி சற்று ஓய்வு கொண்ட வேனில் காலம்!

இரு கரைகளையும்அச்சுறுத்திய காவிரி சற்று அயர்ந்து போய் ஆற்று மணலை எமக்கு ஆடுதற்குத் தந்த காலம்!

ஆடைகளில்கறையேறாதிருக்க, காவிரித்தாய் தோய்த்துத் தோய்த்து தூய்மையாய்த் தந்த ஆற்றுமணல் கருப்பஞ்சக்கரையாய் எம் கண்களுக்கு!

உள்ளங்கைகளில் அள்ளி உற்று நோக்கி மெல்ல வியந்திருந்தோம்! அப்படியே அமர்ந்து, அருமை மணலில் கிச்சுக்கிச்சு தாம்பாலம் ஆடிய நாட்களை இன்றைக்குப் பிள்ளைக ளோடும் ஆர்வமுள்ளோரும் பகிர்ந்து கொள்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி! அதுவும் பாவாணரின் எழுத்துக்களை அடிப்படையாகச் கொள்ளும்போது மகிழ்ச்சிப் பொங்கத்தான் செய்கிறது.

கிச்சுக்கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர். ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.

திறந்த வெளிகளில்ஆடப்படும் ஆட்டம்.இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள மணற்கரை அமைப்பர்; அதுஒரு 4 அல்லது 5 அங்குல உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு அங்குல நீளம்உடைய மெல்லிய குச்சியை (சிறு கிளிஞ்சல்/சங்கு/புளியங்கொட்டை/சிறு ஓடு/விலக்குமார் குச்சிபோன்றவற்றையும் பயன்படுத்துவர்)

ஒருவர் மறைத்துவைக்க, மற்றவர் அதைக் கண்டு பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.

மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில் மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில், காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல, ஓட்டாஞ் சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி(நக்கி :) ) ,
"எச்சா மானமா" என்று கேட்டு, வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.

ஆடு கருவியானகுச்சியை, எதாவது ஒரு கையின் இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),மணற்கரையின் ஒரு முனையில் அவ் விரல்களை நுழைத்து வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்தஇரு விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.

குறிப்பு:"தம்பலம்" என்று ஒலிக்காமல் "தாம்பாலம்" என்று நீட்டி ஒலிப்பது வழக்கம். பாவாணர் தம்பலம் என்று சொல்கிறார்.

"கிச்சுக்கிச்சுத் தம்பலம் கீயாக் கீயாத் தம்பலம் மச்சு மச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்"என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின் முழுநீளத்திற்கும், முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக் கொண்டே யிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.

மறைத்துவைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்தஇடத்தில் இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின்,அடுத்தவர் எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக் கிறாரோ, அந்த இடத்தில், தன் இரண்டுகரங்களையும் பிணைத்து,குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த வேண்டும்.

மறைத்துவைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருந்த போது, அவரின் கரஅசைவுகள், உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றைக் கூர்மை யாகக் கவனித்தால் தான், மற்றவர்அதை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாகும். கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால், எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர்வென்றார்.

வென்றவர்மீண்டும் மறைத்து வைப்பார். இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர், ஆட்டத்தை வென்றவர்ஆகிறார்.

தற்போது,தோற்றவரின் கையைக் கூட்டி, (ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து, நடுவிலே அந்தசிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர், அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?" என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று சொல்வார்;

இப்படியே,இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்தஏந்து கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச் சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப்பட்டிருக்கும்.
மேலும் சிறிதுதூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே, இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர்.

பின்னர்கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அப்போது, தோழர் தோழியரின்மகிழ்ச்சி பொங்கிப் பாயும். இப்படி ஆடுவது தான் கிச்சுக் கிச்சுத் தம்பலம் விளையாட்டு.யாருக்கும் இன்னல் இன்றி, குழுவினரோடு ஆடும் இந்த விளையாட்டு, நகரத்தில் மற்றும் நாடுகள் தாண்டி வாழ்பவர்க்கு ஏலவில்லை. அப்படியே இயன்றாலும் அவ் விளையாட்டை நாம்/நம் பிள்ளைகள்ஆடுவதில்லை.

இது ஒருசில்லறை விளையாட்டு - ஏழைகளின் விளையாட்டு, என்ற கருத்தே நமக்குப் பெரும்பாலும் தோன்றும்.ஆனால் மிகவும் பொருள் பொதிந்த விளையாட்டு.

1) மணற்கரையில்மறைத்த குச்சியை கண்டு பிடிக்கும் போது,மறைத்து வைக்கும் சூக்குமத்தை மறைப்பவருக்குவளர்க்கிறது!

2) எடுக்கவேண்டியவருக்கோ, மறைத்து வைப்பவரின் உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றை வைத்தே, மறைத்துவைக்கும் இடத்தை உணரும் திறன் வளர்கிறது.

3)அதன் பின்,விளையாட்டின் இறுதியில், கண் பொத்தி சுற்றி விடப்பட்ட பின், அம் மணலைத் தேடும்போது,"திசையறியும்" திறன் வளர்கிறது.
இருவர் ஆடினும்,மகிழ்ச்சி, கூடியுள்ளோர் அனைவருக்கும்தான்.
திருச்சி பகுதியில் இப்படித்தான் விளையாடுவோம்; விளையாடினோம். பாவாணர் அவர்களும், சோழ கொங்குநாடுகளில் இப்படி பழக்கம் என்கிறார்.

அதோடு பாண்டிநாட்டில், ஆடப்படும் விதம் நோக்கம் எல்லாம் ஒன்றாகினும், பாடும் பாடலும், மறைக்கும்கருவியும் வேறுபடுகிறதைச் சுட்டுகிறார். பாண்டி நாட்டில் சிறு குச்சிக்கு பதில் சிறுதுணித் திரியை பயன்படுத்துகிறார்களாம்.

பாண்டி நாட்டில்பாடப் படும் பாடல்:

"திரித்திரி பொம்முதிரி
திரிகாலடிபொம்முதிரி
காசுகொண்டுபொம்முதிரி
கடையிலேகொண்டும் பொம்முதிரி
நாலுகரண்டிநல்லெண்ணெய்
நாற்பத்தோருதீவட்டி
கள்ளன் வாறான்கதவடை
வெள்ளச்சிவாறாள் விளக்கேற்று
வாறார் அய்யாசுப்பையா
வழிவிடம்மாமீனாட்சி."

(பாண்டிநாட்டுக் காரங்கதான் இதுபற்றிச் சொல்ல வேண்டும்)

சோழ, கொங்கு,பாண்டி நாடுகளில் கண்ட இந்த ஆட்டம் இன்றும் கிராமங்களில் சிறாரால்விளையாடப்படுகிறது.கிராமம் விட்டு நகரம் வந்தோரும், நாடை விட்டு நாடு போனோர்களும் இதனை மறந்து விட்டனர். மேலும் நகரங்களிலும் வெளிநாடுகளிலும் இம்மாதிரி விளையாடவியலாது.

தூய்மைக்காரணங்கள், திறந்த வெளிகளில் மணல் கிடைக்காமை, அடுக்கு மாடி வீடுகளில் வாழ்க்கை என்றுபலகாரணங்கள் உள்ளன. தமிழர் தமிழரின் பலவற்றை மறந்து வருகையில் இதையும் மறக்க மாட்டார்களா என்ன? என்று இப்படியாக சிந்தனைகள் போனபோது ஏன் இதனை விளையாட முடியாது நகர்களில் என்றும்தோன்றியது.

தூய்மைக்குறைவான மணலை வைத்து விளையாடுவது சரியல்ல! ஆனால் தூய்மையான மணலை வைத்து, பிறருக்குஇன்னல் வராமல் இந்த விளையாட்டை விளையாட ஏலும்.ஒரு ஒன்னறை அடி/இரண்டடி நீளப் பெட்டியில்மணல் பை வைத் திருக்க வேண்டும். அதில் சிறு குச்சி அல்லது கிளிஞ்சல்,சோழி போன்றவற்றில்ஒன்றை வைத்திருக்கலாம். விளையாடும் போது, தரையில் கொட்டாமல் அந்தக் கச்சிதமான சிறு மடிப்புப் பெட்டிக்குள்ளே கொட்டிக் கொண்டு ஆசை தீர கிச்சுக் கிச்சுத் தம்பலம் விளையாடலாம்:))))))

வீட்டில்மட்டுமல்ல, வெளியே பூங்காக்களில் விளையாடலாம். கடற்கரை களிலும் தூய்மை குன்றி வருவதால்அங்கு கூட எடுத்துச் சென்று இதை விளையாடலாம். பிள்ளைகளுக்கு, அறிவுத்திறனை வளர்க்கும் ஆட்டம் இது; நினைவாற்றல் மற்றும் திசையறியும் ஆட்டம் இது; முக்கியமாக ஓசையுடன் கூடியபாடலோடு கூடிய ஆட்டம் இது; சொல்லையும் மொழியையும் நாவில் வளர்க்கும் ஆட்டம் என்பதோடு மீட்டெடுக்கப் படக்கூடிய, தக்க வைக்கக் கூடிய ஆட்டமாகத்தான் தோன்று கிறது. என்ன எப்படிஇது.... என்று சிரிப்பு வருகிறதா? :))

இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு பேத்தலா?அதுவும் கணியுகத்தில் இப்படி ஒரு கிறுக்கலா....! என்று நக்கலடிக்கத் தோன்றுகிறதா?:))

ஏங்க, கடைகளிலே,"சைனாக்களிமண்" கிடைக்கிறதே அதைப் பிள்ளை களுக்கு வாங்கிக் கொடுத்து பொம்மைகள்செய்து விளையாடக் கொடுக் கிறோமே!?

அது மண்தானே!நாம், களிமண்ணில் செய்து விளையாடியதைத்தானே கடையில் தூய்மையான களியாய் வைத்திருக்கிறார்கள்!அந்த மண்ணை நாம் தொட்டு விளையாடும் போது, வேதிப் பொருள்கள் கலந்து ஒருவித முடையடிக்கும்.அந்தமண்ணைத் தொட்டு விளையாடும்போது, ஒட்டிக் கொள்ளாத தூய்மையான ஆற்று மணலில் சிறு மடிப்புப்பெட்டிக்குள் வைத்து விளையாடலாம்தானே! கடைகளிலும் கிச்சுக் கிச்சுத் தம்பல விளையாட்டுப்பொருள்கள், சிறு பெட்டிக்குள் போட்டு விற்கப் படலாம்தானே!

நமது விளையாட்டுகள்அத்தனையையும் நகர, வெளிநாடுகளுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைத்து நாம் அதை விளையாடலாம்தானே!

மெய்யாலுஞ்சொல்கிறேன் - சீனாக்காரன் நம்ம கிராமத்துப் பக்கம் போய்ப் பார்த்தான்னா அழகான பெட்டிசெய்து, அதுக்குள்ள மூனு படி ஆற்று மண்ணைப்போட்டு, இரண்டு மின்கலன்கள் போட்டு, வண்ண வண்ண விளக்குகள் போட்டு, கூடவே 'கிச்சுக்கிச்சுத் தாம்பாலம்..." என்ற பாட்டையும் ஓடவிட்டு 49.95$ க்கு விற்று விடுவான்:))

நம்ம ஊர்க்காரன்அதுக்கு முகவர் ஆக அலைவான் ;-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#2
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று மணல் விளையாட்டு.

கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சில வேளைகளில் பெரியவர்களும், சிறுவர்களோடு சேர்ந்து கொள்வர். சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு. இந்த ஆட்டத்திற்கு இரண்டுபேர்கள் ஆட்ட நாயகர்கள். ஒருவர் துரும்பை மறைப்பவர். மற்றொருவர் கண்டுபிடிப்பவர். இருகைப் பெருவிரலிலும் இணைந்து விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் கைக்குள் அடங்கும். மணல் அல்லது புழுதி மண் கரை அமைக்கப்படும். அதன் நீளம் விளையாடுபவர் கையில் ஒரு முழம் இருக்கும்.

கிச்சுக் கிச்சுக் தம்பலம்
கிய்யாக் கிய்யாத் தம்பலம்
மச்சு மச்சு தம்பலம்
மாயா மாயா தம்பலம்

இப்படி பாடிக்கொண்டு தன் கையிலுள்ள துரும்;பை ஒருவர் மறைப்பார். கண்டுபிடிப்பவர் தம் இருகை விரல்களையும் கோத்துக்கொண்டு துரும்பு இருக்கும் இடத்திலுள்ள கரையை பொத்திக் கொள்வார். மறைத்தவர் கை பொத்தப்படாத கரையைக் கிண்டித் தான் மறைத்த துரும்பை எடுக்கவேண்டும். அப்பகுதியில் துரும்பு இல்லையென்றால், இருக்குமிடத்தைக் கையால் பொத்தி மறைத்தவர், தான் மறைத்த இடத்தில் துரும்பு இருப்பதை எடுத்துக் காட்ட வேண்டும். யார் கையில் துரும்பு அகப்படுகிறதோ அவர் துரும்பை மறைக்கும் ஆட்டத்தைத் தொடங்குவார். இது ஒரு ஊக விளையாட்டு. சங்க காலம் தொட்டே இப்படி மணல் விளையாட்டுக்கள் மறைந்து போவதற்கு நாகரீகத்தை விரும்பும் பெற்றோர்கள் காரணமாகி நிற்கிறார்கள். குழந்தைகளின் அறிவுத் திறனை சோதிக்கும் விளையாட்டுகளில் ஒன்றான கிச்சு கிச்சு தாம்பலம் விளையாட்டு தற்பொழுதுள்ள குழந்தைகளுக்கு என்ன விளையாட்டு என்று கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது.

தற்பொழுது அறிவை மழுங்கடிக்கும் கம்;ப்ய+ட்டர், லேப்-டாப், செல்போன், வீடியோ கேம்ஸ் என அறிவுத்திறனை சோதிக்காமல் ஆடம்பர விளையாட்டுக் களின் வருகையால் பாரம்பரிய விளையாட்டுக்கள் கற்றுக்கொடுக்க கூடிய ஆட்களும் இல்லை. விளையாடக்கூடிய மனநிலையிலும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியத்தில் காணக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நாட்டுப்புற விளையாட்டுக்கள் ஏதாவது ஒருவகையில் அதனை வெளிப்படுத்துபவர்களின் உடலியல் உளவியல் கூறுகளின் வெளிப்பாடுகளாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#4
TFS uncle... Enaku indha vilaiyaattu theriyaadhu... Ippolaam periya toy stores la clean play sand vikkaraanga...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#5
Super Dangu Sir. Indha vilayaattai innoru thiriyil ninaivu koorndhen. Idhil muzhu vizhakkaththudan, innum thelivaaga vilayaattin vidhigalai koorugindrana. Malarum ninaivugal meendum vilaiyaada thoondugindrana.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.