கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி - பியூட்டி ப&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி - பியூட்டி பலன்கள் 12


திக ஊட்டச் சத்தும், மிகக் குறைந்த கலோரியும் கொண்டது கிரேப் ஃப்ரூட். பார்க்க, கமலா பழம் போல இருக்கும் இதில், 91 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் நம் உடலுக்குத் தேவையான நீர்சத்துக் கிடைப்பதால் சருமத்தைப் பொலிவாக, ஆரோக்கியமாக வைக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளன. இது உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

1. கிரேப் ப்ரூட்டில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளது. அதிகப்படியான கால்சியம், நம் மூட்டுக் குருத்தெலும்பில் தங்கிவிடும். இதனால், ஆர்த்தைடிஸ் பிரச்னை ஏற்படலாம். அந்த கால்சியத்தை கரைக்கும் தன்மை இந்த பழத்துக்கு உண்டு.


2. பித்தப்பை கற்களை கரைத்து, கல்லீரலை தூண்டசெய்கிறது.

3. இந்த பழத்தில் உள்ள லைகோபீன் என்னும் நிறமி புற்றுநோய் செல்களை மற்றும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டது.

4. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது.

5. சாப்பாட்டிற்கு முன் இதனை உட்கொள்வதன் மூலம் இன்சுலினை நன்கு சுரக்க வைக்கமுடியும்.

6. மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

7. நார்ச்சத்து, லைகொபீன் நிறமி, வைட்டமின் சி, கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதயத்தை பலமாக்குகிறது.

8. இதில் பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

9. தோலில் சுருக்கம், கருந்திட்டுகள் ஏற்படாது. இதில் உள்ள அமினோ அமிலம் தோலை இறுக்கமாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. முகத்தில் அதிகம் எண்ணெய் சுரப்பதை கட்டுபடுத்தி, பிசுபிசுப்பை நீக்குகிறது.

10. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் செரிமான மண்டலத்தை தூண்டி மலச்சிக்கலை போக்குகிறது.


பியூட்டி டிப்ஸ்:

11. ஃபேஸ் பேக்: வாரத்தில் ஒருமுறை கிரேப் ஃப்ரூட் சாறு, தேன், ஓட்மீல் மூன்றையும் கலந்து மாஸ்க் போட்டு, காய்ந்த பின் ஈரமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். இதனால் முகத்தில் கருமை நிறம் மாறி, மென்மையாகவும், முகம் பளிச்சென்றும் மாறும். புதினா சாரையும், கிரேப் ஃப்ரூட் சாரையும் சம அளவு எடுத்து காலையும் மாலையும் முகத்தில் தடவி காயவைத்து கழுவலாம். ரசாயன பேஸ் வாஷ்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

12. இதில் தலைமுடியை அலசுவதால் முடிக்கு நல்ல ஊட்டம் கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை உதட்டில் பூசி வந்தால் உதட்டில் உள்ள வெடிப்பு மறைந்து, மென்மையாக மாறிவிடும்.
 

spv

Friends's of Penmai
Joined
Mar 29, 2015
Messages
122
Likes
225
Location
chennai
#2
Re: கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி - பியூட்டி ப&a

grape fruit in tamil please. is it kichili pazham
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#3
Re: கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி - பியூட்டி ப&a

Its பம்பரமாசு /Bumblimas, Punitha :)

grape fruit in tamil please. is it kichili pazham
Bitter orange thaan கிச்சிலிப்பழம்..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.