கிர்ணிப்பழ அழகு குறிப்புகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
கிர்ணிப்பழம். 'முலாம்பழம்' என்றும் அழைக்கப்படும் இந்த சுவையான பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.

நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் - தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலை யில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சூப்பர் சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.

கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் தலா 100 கிராம் எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி.. முகம் டல்லடிக்கும். அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்

இரண்டு டீஸ்பூன் வெள்ளரி ஜூஸூடன், இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதைச் சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். எங்காவது வெளியில் போகும்போது இதை இயற்கை 'சென்ட்' ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது.. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு, கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும். இதற்கு, கிர்ணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக் கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து தண்ணீரில் குழைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும்போது இந்த பேஸ்ட்டைத் தேய்த்துக் குளியுங்கள். கிர்ணிப்பழ விதை, கோரைக்கிழங்கு, ஓட்ஸ் பவுடர் மூன்றும் முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவா ரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில்தான் முதலில் தெரியும். பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண் டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.

கடுகு எண்ணெயுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால்.. பஞ்சு போல் பாதங்கள் மிருதுவாகும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
hi viji,
mulaambalam ithanai alagai tharuma? super tips friend....

Anitha.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.