குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறையு&#

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#1
குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறையும்!!!


இந்த இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே குங்குமம் ஆகும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனைத் தண்ணீரில் இட்டால் கொஞ்ச நேரத்தில் தண்ணீரும் இதன் நிறமாக மாறிவிடும்.


இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
ஆயுர்வேத மருத்துவப் பயன்கள்

* இதனால் விந்துக் குறைவு, தண்ணீர் தாகம், தலைவலி,கண்ணில் பூ விழுதல், கண்ணோய், வாந்தி, காது நோய்,வாயினிப்பாக இருத்தல், வயிற்று அழுக்குகள் போகும்.

* உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

* கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

* தலைவலி, மூக்கில் நீர்வடிதல், இவற்றிற்கு குங்குமத்தை தாய்ப்பாலில் உறைத்து நெற்றியில் பற்று போடலாம்.

* விளாம் பிசின், பனை வெல்லம் இவைகளுடன் சேர்த்தரைத்து துண்டுத்தாளில் வைத்து தடவி கன்னப்பொறியின் மீது பற்றாக போட வலி நீங்கும். மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் சேர்க்கலாம்.

* குங்குமப்பூ 1 பங்கும், தண்ணீர் 80 பங்கும் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 - 100 மி.லி. அளவு கொடுக்க மேற்படி நோய்கள் தீரும்.

* பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும் போது சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* குழந்தை பிறந்தபின் சிறிதளவாக 3 வேளைகள் கொடுக்க இரத்தப்போக்கு நீங்கும்.

* 20 கிராம் பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். 10 கிராம் குங்குமப்பூவை சுமார் 15பலம் நீரில் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுத்தால் பசி அதிகம் உண்டாகும்.

குங்குமப்பூவின் மருத்துவ குணங்கள் யுனானி மருத்துவம்:

தோற்றம் : குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூஎன்று அழைக்கின்றோம். இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும்.

குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். குங்குமப்பூ, கசம்பூவைப் போன்று இருக்கும். இதன் வேர் வெங்காயத்தைப் போன்று இருக்கும்.

இயல்பு : உஷ்ணம் 2, வறட்சி 1.

முக்கிய குணங்கள் : மலச்சிக்கலை உண்டாக்கும். கட்டி,வீக்கங்களைக் கரைக்கும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும்.

பயன்படுத்தும் முறை : கல்லீரல் வீக்கம், கருப்பை வீக்கம் ஆகியவற்றைக் கரைக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுடன் கலந்தோ மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

பார்வைக் குறைவைப் போக்க இதைத் தனியாகவோ அல்லது மற்ற பொருத்தமான மருந்துகளுடன் சேர்த்தோ அரைத்துக் கண்களில் விடுவார்கள். இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர பலவகைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.

மாதவிலக்கை தாராளமாகப் பிரியச் செய்ய உள் மற்றும் வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் நாரை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை பயன்படுத்தவும். தீய விளைவுகள் : சிறுநீரகப் பையை பலவீனமாக்கும். பசியைக் குறைக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் அனிசூன், சிகன்ஜபீன் மற்றும் ஜரிஷ்க் கலந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக உத்ரஜ் விதை,பெருலவங்கப்பட்டையைப் பயன்படுத்தலாம்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#2
Re: குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறைய&#300

ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது தனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்க வேண்டும் என்று குங்கும்ப்பூவை பாலில் கலந்து குடிப்பார்கள். குங்குமப்பூ நல்ல நிறத்தை மட்டுமல்ல மனிதனின் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இரத்தம் சுத்தமடைய
குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள்.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

மேலும் சில பயன்கள்
1.குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

2.குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

3.கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
Re: குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறைய&#300

இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட்

குங்குமப்பூ என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது...



‘குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது‘ என்பதுதான். சரி... குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா...? இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது.


இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம் அதிகளவு விழிப்புணர்வு இல்லாதது தான். தரமில்லாத குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்த பிரயோஷனமும் இல்லாமல் போகிறது என்கிறார்கள் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள சரஸ்வதி ஸ்வேதா ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ரவிசங்கர் பாபு, டி.டி.சந்திரசேகர். இதோ அவர்களே விளக்கம் தருகிறார்கள்...


குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம் பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே சேகரிக்க முடியும்.


தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.


இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.


பொதுவாக குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரிலும், ஸ்பெயின், ஈரான், கிரீஸ் நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஸ்பெயினில் விளையும் குங்குமப்பூக்கள் தான் முழு தரமானவை. அங்கிருந்து இறக்குமதி செய்து தாஜ்மகால் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் பிராண்ட் உலகத்தரம் வாய்ந்ததென ஐஎஸ்ஓ 3632 சர்டிபிகேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதைப்பற்றி மொத்த வியாபாரிகளிடம் விளக்கம் கொடுப்பதால் அவர்களும் மனம் மாறி சீப்பான குங்குமப்பூக்களுக்கு பதிலாக விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும் எங்கள் பிராண்ட் குங்குமப்பூவை வாங்கி விற்கிறார்கள். சுமார் 500 கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.


அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே சர்டிபிகேட் தருகிறார்கள். குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில் தேய்த்தால் சிவப்பாகலாம். இதையே கர்ப்பிணிகள் சாப்பிடும் போது, கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு மசாஜ் செய்வது போலாகி குழந்தை சிவப்பாக பிறக்கிறது. தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.


எது ஒரிஜினல்


ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.


டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.




பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.


ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு. கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.


குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால் பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
Re: குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறைய&#300

குங்குமப் பூ பற்றி அறிவோமா ........


குங்குமப்பூ என்றதுமே ஒருவரது மனதில் தோன்றுவது இரண்டு விஷயங்கள் ஒன்று அதன் அபார விலை மற்றொன்று குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கு கர்ப்பிணிப் பெண்கள் உண்பது குங்குமப்பூவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.


விசேஷ சக்தியைத் தூண்டி செயல் திறனை அதிகரிப்பதால் ஒரு வேளை பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கலாம் என்பது மட்டுமே உண்மை. குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் கட்டுப்பாட்டுடன் அளவோடு பயன்படுத்த வேண்டும்.


குங்குமப்பூவில் சுமார் 150ற்கும் மேற்பட்ட எண்ணெய்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தான் அதன் ருசி, நிறம், மணம் போன்றவற்றிற்குக் காரணம்.


குங்குமப்பூ உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு ஸ்பெயின் ஆகும் அதனைத் தொடர்ந்து இத்தாலி, கிரீஸ், போன்ற நாடுகள் உள்ளன இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது இந்தியாவின் வருட உற்பத்தி உலக உற்பத்தியில் சுமார் 7 சதவிகிதம்.


குங்குமப்பூவின் பயன்கள்:


• சமையலில் பானங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
• இந்திய, அரேபிய, ஆசிய உணவுகளில் குங்குமப்பூ இடம் பிடித்துள்ளது. மருத்துவம்:
• உடல்
• ஆரோக்கியத்தை பேணக் கூடியது.
• நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது
• வயதைக் குறைக்கக் கூடியது.
• புற்று நோயை தடுக்கக் கூடியது.
• பசியைத் தூண்டக்கூடியது.
• வாய்வை வெளியேற்றக் கூடியது.
• தலைவலியை போக்கக் கூடியது.
• நுரையீரலுக்கு வலுச் சேர்க்கக் கூடியது.
• இரணங்களை ஆற்றக் கூடியது.
• கல்லீரலை செம்மையாக செயல்படச் செய்யக் கூடியது.
• ஆண்களின் விசேஷ சக்தியை தூண்டக் கூடியது.
• வேகத்தையும் சக்தியையும் அதிகரிக்கின்றன.
• புதிதாக மணமான தம்பதியரில் குங்குமப்பூ பாதாம் சேர்ந்த பால் மிகவும் பயன்தரக் கூடியது.
• தேவைப்படுவோருக்கு தேவையான சக்தியை தரக்கூடியது.

மூக்கடைப்பு விலக… சிறிது குங்குமப்பூவை எடுத்து சிறிது சூடன் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நெற்றியில் பற்று போல போட்டால் தலைவலி விலகும் மூக்கடைப்பு நீங்கும்.



கலப்படங்கள் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் அதன் விலை அதிகமாக இருப்பதால் பல வாறு கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவும் கிடைக்கின்றது.


நயமான பூக்கள் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதாக கலப்படம் செய்யப்பட்ட பூவை அறிவது மிகவும் அவசியம். உண்மையான நயமான குங்குமப்பூ செயற்கையான கலப்படம் செய்தவற்றிலிருந்து மாறுபட்டது.


இதனை தரம் பிரிக்க சிறிது குங்குமப்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் நயமான கலப்படமில்லாத பூ மெதுவாகக் கரைத்து மின்னக் கூடிய தங்க நிறம் கொண்டதாக தண்ணீர் மாறி நல்ல மணம் தரும். ஆனால் கலப்படம் செய்யப்பட்டது உடனே கரைந்து சிவப்பு நிறமானதாக தண்ணீரை மாற்றிவிடும். மணம் இருக்காது.

நாம் குங்குமப்பூ என்று கூறும் குங்குமப்பூ ஒரு பூவின் மகரந்த கேசரமாகும் ஒரு பூவில் 3 மகரந்த கேசரம் மட்டுமே இருப்பதால் அந்த மகரந்த கேசரங்களைச் சேர்த்துத் தருவதாலேயே அதன் விலை அதிகமாக உள்ளது. அதிக விலை போகும் மூலிகைகளுள் குங்குமப்பூவும் ஒன்றாகும் அதனை வாயில் போட்டால் ஒரு வித்தியாசமான கசப்பு சுவை வரும் ஒரு வித்தியாசமான மணமும் வரும். இளம் மஞ்சள் நிறத்தை தரக்கூடியது.


Posted in மூலிகை வைத்தியம்
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#5
Re: குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறைய&#300


பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.


இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.

மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.

குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.

இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.
[TABLE="width: 300, align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]

Tamil - Kungumapoo

English - Saffron

Sanskrit - Kumkuma

Malayalam - Kugamapoo

Telugu - Kumkumapoova

Hindi - Kesar

குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்

தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்

பொருள் - நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.

மருத்துவப் பயன்கள்

காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.

ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.

கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.

அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,987
Location
Atlanta, U.S
#6
Re: குங்குமபூவும் அதை பயன்படுத்தும் முறைய&#300

குங்குமப்பூ பாலில் கலந்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் --- அதைப்பற்றி இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது....

ஆனால் இங்கே நிறைய விளக்கங்கள்.... எப்படி வாங்குவது.... எது ஒரிஜினல்.... பயன்பாடுகள் என நீண்டதொரு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அங்கிள்....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.