குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண்

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண்


குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலிவுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்பபடலாம்.

அசுத்தமான குடிநீர், சுற்றுச்சூழலால் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மேலும் கவலை, மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதன் மூலமும் அல்சர் ஏற்படும். வயிற்றுப்புண் வயிற்றைக் காட்டிலும் சிறுகுடல் மேற்பகுதியில் உருவாகிறது. சுமார் 4 சதவீதம் வயிற்றுப்புண்கள் உயிருக்கு ஆபத்தான கட்டிகளால் ஏற்படுகின்றன. அதனால் புற்றுநோயை தவிர்ப்பதற்கு பன்மடங்கு உடல் திசு ஆய்வுகள் தேவைப்படுகிறது. சிறுகுடல் மேற்பகுதிக்குரிய சீழ்ப்புண் பொதுவாக மென்மையானவை. பொதுவாக வயிற்றுப்புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
அசுத்தமான குடிநீர், சுற்றுச்சூழலால் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மேலும் கவலை, மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதன் மூலமும் அல்சர் ஏற்படும். வயிற்றுப்புண் வயிற்றைக் காட்டிலும் சிறுகுடல் மேற்பகுதியில் உருவாகிறது. சுமார் 4 சதவீதம் வயிற்றுப்புண்கள் உயிருக்கு ஆபத்தான கட்டிகளால் ஏற்படுகின்றன. அதனால் புற்றுநோயை தவிர்ப்பதற்கு பன்மடங்கு உடல் திசு ஆய்வுகள் தேவைப்படுகிறது. சிறுகுடல் மேற்பகுதிக்குரிய சீழ்ப்புண் பொதுவாக மென்மையானவை. பொதுவாக வயிற்றுப்புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. இதனால், அடிக்கடி வயிற்று வலி, அஜீரணக்கோளாறு, சாப்பிட முடியாத பிரச்னை ஏற்படும். உடலில் செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலுமே இருக்கின்றன. இதனால், இரைப்பையில் செரிமானத்திற்கு தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் உடற் செரிமான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
குடற்புண்ணுக்கான அறிகுறிகள்

* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி

* நெஞ்செரிச்சல்

* வயிறு வீங்குதல்

* பசியின்மை வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்!

* பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒருவித எரிச்சல் ஏற்படும். இதுதான் வயிற்று எரிச்சல் ஆகும்.

இவை வயிற்றில் புண் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.


 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
* நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும்.

மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

* இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.

* அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.

* புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
சுயிங்கம்:

* சுயிங்கம் தின்பவர்களுக்கு இந்த அல்சர் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

* ஆண்டுக்கணக்கில் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் கூட வரலாம். சிலர் புகைப்பதை விடுவதற்காக சுயிங்கம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதுவும் தவறு. தொடர்ந்து சுயிங்கம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#6
எதை தவிர்க்க வேண்டும்?

* வயிற்றுப்புண் வராமல் இருக்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

* அடிக்கடி உணவு உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உண்பது அவசியம்.

* காலை மற்றும் இரவு நேரத்தில் தவறாமல் உணவு உண்பது அவசியம். ஏனெனில் இரவு நேர உணவுக்கும், காலை உணவுக்கும் அதிக நேர இடைவெளி இருப்பதால் இவற்றை தவிர்த்தால் உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#7
குடற்புண் கண்டறியும் முறைகள்:

* சிறுநீர் உப்பு, மூச்சு பரிசோதனை

* யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசியின் நேரடி கண்டறிதல்;

* ரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு

* மல எதிரியாக்கி பரிசோதனை

* உயிர்த்தசை பரிசோதனை மற்றும் ஈ.ஜீ.டீ பரிசோதனை.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#8
சிகிச்சை என்ன?

தண்ணீர்:

போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.

அருகம்புல்:

எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதிய சாப்பாடு. இதன்மூலம் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#9
வாழைத்தண்டு:

நோயாளிகளுக்கு பொதுவாக சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத்தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.


கொத்தமல்லி:

இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#10
வல்லாரை:

மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.


வெங்காயமும், பூண்டும்:

உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.

மணத்தக்காளி கீரை:

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.