குடல் இறக்கம்(Hernia )

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குடல் இறக்கம்(Hernia )

இடுப்புக்குக் கீழே சற்று வீக்கமும் வலியும் காலையில் எழுந்தால் வலியோ, வீக்கமோ இல்லாமலும் இருந்தால் இதை குடல் பிதுக்கம் என்று பெயர்.இது எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்குக் கூட உருவாகலாம்.

பிறந்த குழந்தைகளில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் ஹெர்னியாவால் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது விரைகள் வயிற்றின் பின் சுவர் பக்கத்தில் இருக்கும். பின் அது இங்குவினல் கேனால் எனப்படும் பாதை வழியே நகர்ந்து கீழிறங்கி விதைப்பைக்குள் சென்று சேரும்.

அதன் பின்னர் அந்தப் பாதை பெரும்பாலானவர்களுக்கு இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஆனால் வெகு சிலருக்கு பிறவியிலேயே அது மூடப்படாமல் இருக்கும்.

இந்தப் பாதை வழியாக குடல் இறங்கி வருவதற்குப் பெயர் தான் இங்குவினல் ஹெர்னியா. இதை மறைமுக குடல் இறக்கம் என்பார்கள்.

குடல் இறங்கி வரும் பாதைக்கு முன்புறமுள்ள வயிற்று மேலுள்ள தசைகள் வயதாவதால் பலவீனப்பட்டு வருவது நேரிடையான ஹெர்னியா.

ஆரம்பத்தில் குடல் வெளிவரும்போது சிறு துவாரத்தை விரித்துக் கொண்டு வருவதால் ஒரு மாதிரி வலிக்கும். துவாரம் பெரிதாகிவிட்டால் வலி போய்விடும். மாலை நேரத்தில் வீக்கமிருக்கும். படுத்துக் காலையில் எழுந்தால் வலி முழுவதுமாக மறைந்து விடும்.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வந்திருக்கும் ஹெர்னியாவைப் போக்கும் அறுவை சிகிச்சைக்கு ஹெர்னியோடமி என்பார்கள்.
ஒரு முறை அறுவை சிகிச்சை செய்த பிறகு பக்க தசைகள் பலவீனப்பட்டு தையல் விட்டுப் போனால் மீண்டும் ஹெர்னியா உருவாகலாம். இதற்குப் பெயர் ரெக்கரண்ட் ஹெர்னியா (Recurrent Hernia ).

நோயாளிகளின் நோய்க்குத் தகுந்தவலாறு சோதித்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்து குடல் இறக்கத்தை குணப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.


 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Thanks Lakshmi for the details about Hernia.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.