குடல் புண் (Ulcer)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குடல் புண் (Ulcer)

வயிற்றுக்குள் புண் இருந்தால் பசியெடுக்கும்போது ஜீரணிப்பதற்காக அமிலம் வயிற்றில் உருவாகும். அது அந்தப் புண்ணில் படும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். இப்படி புண் இருப்பதை எண்டோஸ் கோப்பி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் ஆறிலிருந்து எட்டுவாரம் வரை மாத்திரை சாப்பிட்டு குடல்புண் நோயைக் குணப்படுத்திடலாம்.

அல்சரில் இரண்டு வகை இருக்கிறது.

1. கேஸ்ட்ரிக் அல்சர், இது இரைப்பையில் உருவாகும் புண்.

2. டியோடினல் அல்சர், இது குடலில் உருவாகும் புண்.


இரைப்பைக்கு ஒட்டின சிறு குடலின் முதல் பாகத்தில் முதல் இரண்டு அங்குலத்தில்தான் குடல் புண் உருவாகும்.

முன்பெல்லாம் இந்த இருவகையான புண்களையும் சேர்த்து பெப்டிக் அல்சர் என்றே கூறுவர்.

இரைப்பை ஒரு அமில மண்டலம். அமிலம் அதிகமாக சுரக்கச் சுரக்க அதை ஒட்டின மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு புண் வருகிறது. அமிலம் மேலே வந்து உணவுக் குழாயைப் பாதிக்கும்போது நெஞ்செரிச்சலும், இரைப்பையினுள் கசியும் போது இரைப்பை புண்ணும், சிறுகுடலில் படும்போது குடல் புண்ணும் உண்டாகிறது.

இரைப்பையில் உருவாகும் புண்ணை மூன்று வகையாக பிரிக்கலாம்.

அமிலம் குறைவாக இருக்கும் வகை ஒன்று,

அமிலம் அதிகமாக இருக்கும் வகை இரண்டாவதும்,

அமிலம் அதிகமாக இருந்து சிறுகுடலில் அல்சர் உண்டாகி அதனால் அமிலம் வெளியே போக முடியாமல் தடைப்பட்டு புண்ணாகும் வகை மூன்றாவதாகவும் இருக்கிறது.

இதை ப்ரி பைலோரிக் அல்சர் என்பர்.

அல்சருக்கு அடிப்படைக் காரணமாக ஹரி, வொரி, கறி (Hurry, Worry, Curry ) ஆகியவைகள் அமைகின்றன.

ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும் போது மூளையிலிருந்து வயிற்றுக்குப் போகும் நரம்பு தூண்டப்பட்டு இரைப்பையில் அமிலம் அதிகமாக சுரக்க ஆரம்பிப்பதால் அல்சர் உண்டாக நேரிடும். மேலும் கிருமிகளினாலும் அல்சர் உருவாகும். ஹெச்-பைலோரி என்ற பாக்டீரியாவினால் அல்சர் வருகிறது.

சுகாதாரமற்ற இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்பதினால் இந்த பாக்டீரிய்யா குடலுக்குள் புகுந்து புண்ணை உண்டு பண்ணுகிறது.

குடல் புண் நோயாளிக்கு உணவு உண்ட இரண்டு மணிநேரத்திற்பு; பின்தான் வலி ஏற்படும். உணவு உண்டு ஜீரணிக்கும் வரை அமிலம் குடல் புண் மேல் படாது. எனவே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்குப் பின்தான் வலி ஏற்படும். பெரும்பாலும் இரவு உணவிற்குப் பிறகு நடு இரவிலோ, விடியற்காலையிலோ வலி ஏற்படும்.


ஆனால் இரைப்பை புண் நோயாளிக்கு சாப்பிட்ட உடனேயே வலிக்க ஆரம்பிக்கும். இ;ந்த இரண்டு புண் உள்ளவர்களுக்கும் ரத்தக் கசிவு உண்டாகலாம், அடைப்பு உண்டாகலாம், ஓட்டை உண்டாகலாம். வேகஸ் என்ற நரம்புதான் மூளையிலிருந்து இரைப்பை வரை வந்து அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அறுவை சிகிச்சை மூலம் இந்த நரம்பை வெட்டிவிட்டால் அமிலம் சுரக்காது. அதெனால் குடல் புண்ணோ, இரைப்பை புண்ணோ உருவாகாது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
[h=2]அல்சர் நோயாளிகளுக்கான மருத்துவம்: என்ன சாப்பிடலாம்?[/h]

இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.

அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.

பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.

குடல் புண்ணுக்கான அறிகுறிகள்
* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
* நெஞ்செரிச்சல்
* வயிறு வீங்குதல்
* பசியின்மை, உடல் எடை குறைதல்
* வாந்தி, குமட்டல், வாயுக்கோளாறு

எதை தவிர்க்க வேண்டும்?
* காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும், பின் இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

* புகைபிடிக்கக் கூடாது, மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

* காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

சாப்பிட வேண்டியவை
* சத்தான சரிவிகித உணவு, குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

* உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.

* கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

* மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது வல்லாரை. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.

* மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.