குடும்ப அட்டை பெறுவது எப்படி?

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
அரசின் பல்வேறு சலுகைகளை பெற உதவும் குடும்ப அட்டையை பெறுவது எப்படி?

குடும்ப அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது? அதன் அவசியம் என்ன?

குடும்ப அட்டையானது பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது, சிலிண்டர் இணைப்பு மற்றும் இருப்பிட சான்று பெறுவதற்கான முக்கியமான ஆவணமாகவும் பயன்படுகிறது.

குடும்ப அட்டை பெறுவதற்கான தகுதிகள் :

தமிழகத்தில வசிப்பவராகவும், தனி குடும்பமாக வசிக்கும் எல்லோருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் மற்றும் அவர் தரப்படும் தகவல்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள் தமிழகத்தில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

விண்ணப்பதாரர் வசிக்கும் வட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் ஓநுசுழுஓ கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கின்றன.

தமிழக அரசு இணையதளத்திலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கேஃயாரிடம் விண்ணப்பிப்பது?

சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் :

புதிய குடும்ப அட்டை பெறும்போது ரூ.10 கட்டணமாகப் பெறப்படும்.

தேவையான ஆவணங்கள் :

குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் அனத்தையும் இணைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை.

மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி.

தொலைபேசிக் கட்டணம் (தொலைபேசி இருந்தால்) செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று.

வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்.

மின்சாரக் கட்டணம்.

பாஸ்போர்ட் நகல்.

வேறு ஏதேனும் முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று. அந்த முகவரியின் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியான வுளுழு விடம் பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

பதிவுத் தபாலில் அனுப்புபவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine May 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.