குடு*ம்ப*க் க*ட்டு*ப்பாடு செ*ய்து கொ*ண்டவ*ர&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனிக்க !

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது உடல் எடை உயர்வு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் வந்ததும், உணவுப் பழக்கமும் காரணங்களாக இருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் முக்கியக் காரணம் என்கிறது மருத்துவம்.

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.


குடும்பப் பெண்கள் பலரும், குழந்தையும், கணவரும் மீதம் வைத்த உணவையும், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் இருப்பதும், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங்கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.

எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம்.

தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும்.
 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
Re: குடு*ம்ப*க் க*ட்டு*ப்பாடு செ*ய்து கொ*ண்டவ*&#299

nalla thagaval..
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#3
Re: குடு*ம்ப*க் க*ட்டு*ப்பாடு செ*ய்து கொ*ண்டவ*&#299

பகிர்வுக்கு நன்றி...
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#4
Re: குடு*ம்ப*க் க*ட்டு*ப்பாடு செ*ய்து கொ*ண்டவ*&#299

பகிர்வுக்கு நன்றி தோழி............
 

kavithasankar

Citizen's of Penmai
Joined
Feb 2, 2012
Messages
508
Likes
350
Location
kanchipuram
#7
Re: குடு*ம்ப*க் க*ட்டு*ப்பாடு செ*ய்து கொ*ண்டவ*&#299

Important message for the women's health. Definitely we should take care about our health. Thank you for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.