குட்டீஸ் குறும்புகள் - Kutties Kurumbukal

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
வீட்டில் இந்த சுட்டிகள் செய்யும் அட்டகாசங்கள் இருக்கே அப்பப்பா... பல சமயங்களில் அவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி தான் இருக்கும்.... என்ன நம்மலால தான் சமாளிக்க முடியாது... இப்ப எல்லாம் பய புள்ளைங்க நம்மள விட ரொம்ப புத்திசாலித்தனமா தான் யோசிக்கறாங்க... அவங்க கேக்கற கேள்விகளும், பேசுற பேச்சும் இருக்கே... திருப்பி நாம எதுவும் சொல்ல முடியாது...

உங்க வீட்டில் இருக்குற குட்டீஸ் என்னென்ன சேட்டை பண்றாங்கன்னு இங்கே சொல்லுங்க தோழிகளே....
 
tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#2
என் பையன் l.k.g போகும் போதுகண்ணா உனக்கு நான் புளி,சாதம் செயிது தர்றேன் அப்படின்னு சொன்னேன் அதற்க்கு அவன் அம்மா இன்னைக்கு புலி சதம் நாளைக்கு சிங்கம் சாதம் அப்புறம் கரடி சாதம் யானை சாதம் செயிதுதங்க என்று சொன்னான் பாருங்க நாங்க விழுந்து விழுந்து சிரித்தோம் இப்போ அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#3

திலகா அக்கா உங்க பையன் எல்லாம் அப்பவே அப்படி... சூப்பர் நல்ல கேள்வி தான கேட்டான் நீங்க என்ன பதில் சொன்னீங்க
 
tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#4
எனக்கு என்ன சொல்லருதுனே தெரியலே சக்தி சரிடா கண்ணு அப்படின்னு சொல்லிட்டு எலுமிச்சை சாதம்னா சிங்கம் சாதமுனு சொல்லிட்டு காலப்போக்கில மறந்தாசுப்பா
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#5
எனக்கு என்ன சொல்லருதுனே தெரியலே சக்தி சரிடா கண்ணு அப்படின்னு சொல்லிட்டு எலுமிச்சை சாதம்னா சிங்கம் சாதமுனு சொல்லிட்டு காலப்போக்கில மறந்தாசுப்பா
அக்கா நீங்க உங்க பையன நல்ல ஏமாத்திட்டீங்க இருங்க சொல்லி வைகறேன்...
 
suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#6
ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா என்று FM ஓடு சேர்ந்து hum செய்து கொண்டு இருந்தேன்.
திடீரென்று என் மகன் ஹரி "போதும்..போதும்..பின்ன நாலு நாள் லீவ் லெட்டர் குடுத்துட்டா சொல்லிக்கிட்டு இருப்பாங்க " என்றான். எல்லோருக்கும் ஒரே சிரிப்புதான். பசங்க வீட்ல இருக்கறப்ப கொஞ்சம் பாத்துதான் பாடணும் போலிருக்கு.
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#7
ஹா ஹா ... சுகந்தி உங்க பையன் சூப்பரா சொல்லி இருக்கான் போங்க.... இவங்க கிட்ட நம்ம தான் பா ரொம்ப ரொம்ப கேர்புல்லா இருக்கனும்./..
 
umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#8
போன மாசம் ரவி திருப்தி போய் மொட்டை போட்டுட்டு வந்தாங்க

ரெண்டு நாள் முன்னாடி ராத்திரி ரவி தூங்கும் போது ரெம்பவே disturb ஆக பீல் பண்ணி முழிச்சு பார்த்தா
என்னோட குட்டி கீர்த்தி ரவி பெட்ல ஏறி அவரோட தலைய தடவீட்டு இருந்திருக்கிரா ஏம்மா என்ன பண்ணறேன்னு ரவி கேட்டதுக்கு உன் தலை முள்ளு நல்லா சூப்பரா இருக்குப்பா அப்புடின்னு சொல்லீட்டு தடவீட்டே இருந்திருக்கரா
ரவி என்னை எழுப்பி உன் பொண்ணோட அழகை பாருன்னு சொல்லி ஒரே சிரிப்பு

அப்ப மணி என்ன தெரியுமா விடிகாலை 3 மணி

என்னக்கு கோவமும் சிரிப்பும் தாங்க முடியலை
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#9
போன மாசம் ரவி திருப்தி போய் மொட்டை போட்டுட்டு வந்தாங்க

ரெண்டு நாள் முன்னாடி ராத்திரி ரவி தூங்கும் போது ரெம்பவே disturb ஆக பீல் பண்ணி முழிச்சு பார்த்தா
என்னோட குட்டி கீர்த்தி ரவி பெட்ல ஏறி அவரோட தலைய தடவீட்டு இருந்திருக்கிரா ஏம்மா என்ன பண்ணறேன்னு ரவி கேட்டதுக்கு உன் தலை முள்ளு நல்லா சூப்பரா இருக்குப்பா அப்புடின்னு சொல்லீட்டு தடவீட்டே இருந்திருக்கரா
ரவி என்னை எழுப்பி உன் பொண்ணோட அழகை பாருன்னு சொல்லி ஒரே சிரிப்பு

அப்ப மணி என்ன தெரியுமா விடிகாலை 3 மணி

என்னக்கு கோவமும் சிரிப்பும் தாங்க முடியலை

அட... உங்க பொண்ணு இப்பவே அப்பா தலையை தடவ ஆரம்பிச்சுட்டாளா? பேஷ்... பேஷ்... தலையை தடவறதுன்னா அகராதில என்ன அர்த்தம் தெரியுமா? நைச்சியமா பேசி காரியத்தை சாதிச்சுக்கறது அல்லது கஜானாவை காலி பண்றதுன்னு அர்த்தம்... உங்க பொண்ணு நல்லாவே பொழைச்சுப்பா போங்க.... ஹா... ஹா... ஹா... (ஆமா... இந்த விஷயத்தில பொண்ணு, அம்மாவை போலவோ!!!) :rolleyes:
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.