குட்டீஸ் படு சுட்டீஸ் - Kutties Kurumbukal

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
பெண்மை தோழிகளுக்கு எனது அன்பு வணக்கங்கள்...

இந்த தலைப்பு பார்த்ததுமே நீங்க எல்லாரும் இப்ப நான் என்ன சொல்ல போறேன்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே;ஆமாம் தோழிகளே, அதே தான்.

உங்க வீட்டில் இருக்கற குட்டீஸ் பண்ற சேட்டைகள், சுட்டி தனமான வேலைகள், கேட்கிற கேள்விகள், அவங்களோட புதுமையான பதில்கள், நம்ம வாய் வைத்து நம்மையே மடக்கற அந்த வால்தனம் இத பத்தி எல்லாம் தான் இங்க பகிர்ந்து கொள்ள போறோம்.

அப்புறம் இன்னொரு விஷயம் என்னன்னா
நீங்க இங்க பகிர்ந்து கொள்கிற குட்டீஸ் குறும்புகள் பெண்மை மின் இதழில் வெளியிடப்படும். விருப்பம் இருக்கற எல்லோரும், உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ் அல்லது உங்கள் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் குட்டீஸ் குறும்புகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்..

ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்.. உங்கள் பதிவு முழுதும் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்... தங்கிலிஷ் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்....
 
Last edited:
Joined
Oct 18, 2011
Messages
36
Likes
116
Location
Trichy
#2
Hi friends, என் முதல் பதிவை என் மகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றேன்.நான்கு வயது நிரம்ப இரண்டரை மாதங்களே உள்ள என் மகள் மிகவும் சமர்த்து.நல்ல பிள்ளையாய் தன் விருப்பங்களை தன் மழலையால் நிறைவேற்றிக்கொள்வாள். சில சமயங்களில் அவளின் வார்த்தைகள் என்னை ரசிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில உங்கள் ரசனைக்காக....
1) திடீரென்று ஒரு நாள் என் மகள் என்னிடம் ,"அம்மா சீஸ் சாப்பிட்டால் குண்டாக ஆவார்களா ?" எனக் கேட்டாள்.
நான் மிக சீரியசாக,ஆமாம் பாப்பா அதிகம் சாப்பிட்டால் குண்டாகத் தான் ஆவார்கள்.அதிகம் குண்டானால் உடலுக்கு கெடுதல் என்றேன் .
உடனே என் மகள்,அப்பாம்மா(பாட்டி) சிறு வயதில் அதிகமாக சீஸ் சாப்பிட்டு விட்டாரா? அதனால் தான் குண்டாக இருக்கிறாரா ? என்றாலே பார்க்கலாம்.
நான் என்ன சொல்வது என்று விழிக்க, என் கணவரே அவளின் பதிலால் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.
2) சில நேரங்களில் ஒரே சமயத்தில் கணினியில் டாம் அண்ட் ஜெர்ரியும், தொலைக்காட்சியில் கார்ட்டூனும் வேண்டும் என அடம்பிடிப்பாள். அந்த நேரத்தில் அம்மாவுக்கு ஒன்று,பாப்பாவுக்கு ஒன்று என்று சொல்லி மாற்றிக்கொள்வேன்.
ஒருமுறை அதுபோல் நான் பார்த்துக்கொண்டிருக்க,அங்கு வந்த என் மகள், ஒரு நேரத்தில் ஒன்றை தான் பார்க்கவேண்டும்.தொலைக்காட்சி வேண்டுமா? கணினி வேண்டுமா? Deal ஆ No deal ஆ என்றதும் ,.
உடனே நான் சிரித்துவிட்டேன்.ம்ம்..பிறகு ஒன்றை அவளுக்கு விட்டுத்தந்தது வேறு விஷயம்.
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,623
Location
Chennai
#3
குழந்தைகளின் குறும்பு எப்போதும் ரசிக்க கூடியவைதான் ..நம் வீட்டுக் குட்டீஸ் என்றாலும் சரி, மற்றவர்களின் மழலை என்றாலும் சரி..எப்பவும் ரசிக்கலாம். நல்ல த்ரெட் சக்தி........
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#4

ஷியாமளா உங்க குட்டி சூப்பர் அண்ட் நல்லா யோசிக்கிறா... உங்க குட்டி பேர் என்ன?
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#5
குழந்தைகளின் குறும்பு எப்போதும் ரசிக்க கூடியவைதான் ..நம் வீட்டுக் குட்டீஸ் என்றாலும் சரி, மற்றவர்களின் மழலை என்றாலும் சரி..எப்பவும் ரசிக்கலாம். நல்ல த்ரெட் சக்தி........
ஆமாம் செல்வி... நீங்க சொல்வது சரியே.... மழலைகள் என்றாலே மகிழ்ச்சி தானே...
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
Hi friends, என் முதல் பதிவை என் மகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றேன்.நான்கு வயது நிரம்ப இரண்டரை மாதங்களே உள்ள என் மகள் மிகவும் சமர்த்து.நல்ல பிள்ளையாய் தன் விருப்பங்களை தன் மழலையால் நிறைவேற்றிக்கொள்வாள். சில சமயங்களில் அவளின் வார்த்தைகள் என்னை ரசிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில உங்கள் ரசனைக்காக....
1) திடீரென்று ஒரு நாள் என் மகள் என்னிடம் ,"அம்மா சீஸ் சாப்பிட்டால் குண்டாக ஆவார்களா ?" எனக் கேட்டாள்.
நான் மிக சீரியசாக,ஆமாம் பாப்பா அதிகம் சாப்பிட்டால் குண்டாகத் தான் ஆவார்கள்.அதிகம் குண்டானால் உடலுக்கு கெடுதல் என்றேன் .
உடனே என் மகள்,அப்பாம்மா(பாட்டி) சிறு வயதில் அதிகமாக சீஸ் சாப்பிட்டு விட்டாரா? அதனால் தான் குண்டாக இருக்கிறாரா ? என்றாலே பார்க்கலாம்.
நான் என்ன சொல்வது என்று விழிக்க, என் கணவரே அவளின் பதிலால் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.
2) சில நேரங்களில் ஒரே சமயத்தில் கணினியில் டாம் அண்ட் ஜெர்ரியும், தொலைக்காட்சியில் கார்ட்டூனும் வேண்டும் என அடம்பிடிப்பாள். அந்த நேரத்தில் அம்மாவுக்கு ஒன்று,பாப்பாவுக்கு ஒன்று என்று சொல்லி மாற்றிக்கொள்வேன்.
ஒருமுறை அதுபோல் நான் பார்த்துக்கொண்டிருக்க,அங்கு வந்த என் மகள், ஒரு நேரத்தில் ஒன்றை தான் பார்க்கவேண்டும்.தொலைக்காட்சி வேண்டுமா? கணினி வேண்டுமா? Deal ஆ No deal ஆ என்றதும் ,.
உடனே நான் சிரித்துவிட்டேன்.ம்ம்..பிறகு ஒன்றை அவளுக்கு விட்டுத்தந்தது வேறு விஷயம்.

ஷ்யாமளா ....குழந்தைகளின் குறும்புகள் சொல்லில் அடங்காது .....அதை ரசிக்க நாமும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .....உங்கள் பெண்ணின் சுட்டித்தனம் நன்றாக இருக்கிறது
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
நான் இப்போது என் மகனின் குறும்புகளை சொல்கிறேன்.

அவனுக்கு மூன்று வயது இருக்கும்போது நடந்தது இது.

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து , ஒரு இரண்டு சந்து தள்ளி , பஸ் கிளம்பும். அதில் ஏறி நாங்கள் (நானும் என் மகனும் ) போவதாக இருந்தோம் . அதற்குக் குறிப்பிட்ட டைமிங்க்ஸ் இருந்தது.

மதியம் 3 மணி பஸ்சில் போவதாக இருந்தோம். நான் என் மகனிடம் " நீ கொஞ்சம் முன்னாடி போய், பஸ்ஸை நிறுத்தி வை , நான் உன் பின்னாடியே வந்துடறேன் " அப்படின்னு சொல்லி இருந்தேன். (அந்த ஏரியாவில் வண்டி நடமாட்டம் ரொம்ப இருக்காது ).

அவனும் சரி என்று ஓடிப் போய் பஸ்ஸில் ஏறி இருக்கிறான் . திடீரென்று பஸ்ஸை கிளப்பி விட்டார் டிரைவர் . உடனே இவன் , "பஸ்ஸை நிறுத்துங்க " அப்படின்னு பெரிசா கத்தி இருக்கான்.

பயந்து போன டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி விட்டார். "என்ன ஆச்சுப்பா " அப்படின்னு கேட்க,இவனும் ," எங்கம்மா வந்தாதான் பஸ்ஸை எடுக்கலாம் " அப்படின்னு சொல்ல , பஸ்ஸில் உள்ள மொத்த பேரும் சிரிக்க, ஒரு 2 நிமிடம் கழித்து நான் பஸ்ஸில் ஏற, உடனே இவன் "டிரைவர் , இப்போ நீங்க பஸ்ஸைக் கிளப்பலாம் " அப்படின்னு சொல்ல , எல்லாரும் திரும்பவும் சிரிக்க, எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த கண்டக்டர் , என்னிடம் "நீங்கதான் அந்த அம்மாவா" அப்படின்னு கேட்க , எனக்கு ஒண்ணும் புரியாமல் , "ஏன் அப்படி கேட்குறீங்க " னு கேட்க, அவரும் நடந்தது எல்லாத்தையும் சொல்ல, திரும்ப நான் உட்பட பஸ்ஸில் உள்ள எல்லாரும் சிரிக்க, என் மகனும் சேர்ந்து சிரித்தான் (ஒன்றும் புரியாமல் ).

அதிலிருந்து , எப்போது அந்த பஸ்ஸில் ஏறினாலும், அந்த டிரைவர் , என் மகனிடம், "தம்பி , இப்போ பஸ்ஸை எடுக்கலாமா " அப்டின்னு கிண்டலா கேட்டுட்டுதான் பஸ்ஸை எடுப்பார். இவனும் அவர் கிண்டல் புரியாமல் "எடுக்கலாம் அங்கிள் , அம்மா வந்துட்டாங்க " அப்படின்னு சொல்வான்.
 
Joined
Oct 18, 2011
Messages
36
Likes
116
Location
Trichy
#10
ஹா ..ஹா..ஹா...superb. எப்போதும் நினைத்து ரசிக்கத் தோன்றும் அல்லவா உங்களுக்கு..இதை எப்போதாவது தங்கள் மகனிடம் சொல்லும் சந்தர்ப்பம் அமைந்ததா ? Reaction என்ன?
குழந்தைகள் நாம் சொல்வதை செய்வது பெற்றோர் சரியாகத்தான் சொல்வார்கள் என்ற நம்பிக்கைதான்.அதன்படியே அவர்கள் பண்புகளும் வளர்கின்றன.செய்ய முடிந்ததை சொல்வதே பெற்றோராகிய நம் கடமை.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.