குண்டாக தயிர் - Curd for body fat

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]குண்டாக தயிர்[/h]



தயிரை சுட வைக்கக் கூடாது, சூடான சாதத்தில் தயிர் சேர்த்துச் சாப்பிடுக கூடாது இது தயிரில் உள்ள தேவையான நல்ல கிருமிகளை அளித்து விடும்.

குண்டாக விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது தான் ஊனீர். இந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு ஆகியவற்றை விரட்டும்.

தயிரை துணியில் வடிகட்டி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகந்த். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

பசியில்லாதவர்கள் இளம் புளிப்பான தயிரைச் சாப்பிட்டால் பசியைத்து£ண்டும்.

புளித்த தயிர் வயிற்றுக் கோளாறு, ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

புளித்த தயிர் இரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

இரவு இரண்டு மணியளவில் எழுந்து இளந்தயிர் சாப்பிட்டால் வயிற்றுப்புண், அல்சர், நெஞ்செரிச்சல் போன்றவை மறையும்.

அவசியம் இரவில் தயிர் சாப்பிட வேண்டி வந்தால் சிறிது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.