குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்பெரும்பாலும் குண்டாக இருக்கும் போது கருத்தரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை அப்படி கருத்தரித்துவிட்டால், சிலருக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை ஏற்படும்.

ஆகவே தான் மருத்துவர்கள் கர்ப்பமாவதற்கு முன்பு எடை அதிகம் இருந்தால், முதலில் உடல் எடையை குறைத்துவிட்டு, பின் கருத்தரிக்க முயற்சிக்க சொல்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் ஒருசிலவற்றை பின்பற்றினால் தான், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடல் எடை மேலும் அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம் ஆரோக்கியமான பிரசவத்தைக் காணலாம். அதற்கு ஒருசில செயல்கள் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்ற வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக கால்சியம், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்களை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரித்து, நல்ல மனநிலையைக் கொடுக்கும்.

முக்கியமாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை மறந்துவிட வேண்டும். இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் குண்டாக இருக்கும் பெண்கள் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைத்தால், ஒரு பௌல் ஸ்நாக்ஸ் உடன் தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம்.

பசியை கட்டுப்படுத்த தண்ணீர் மிகவும் சிறந்தது. கர்ப்ப காலத்தில் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். மேலும் அவை அனைத்தையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இருப்பினும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், மனதில் அத்தகைய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள்.

குண்டான கர்ப்பிணிகள் தங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க, தினமும் உடற்பயிற்சி, யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். முக்கியமாக யோகாவை கர்ப்பிணிகள் மேற்கொள்வது நல்லது. குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க டயட்டை மேற்கொள்ளக் கூடாது. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#2
Re: குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற&#302

useful Information lakshmi... Thanks for sharing this...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.