குப்பைமேனி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குப்பைமேனி


செ
ன்னையின் ஒட்டுமொத்த மேனியும் குப்பையாக இருக்கும் காலம் இது. திரண்டிருக்கும் 1.50 லட்சம் டன் குப்பையை எப்படி மேலாண்மை செய்வது எனத் திணறி, திண்டாடி நிற்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

கழிவுநீரும் குப்பையும் கலந்த மாசான நீரில் புழங்கிய மக்களில் பலர் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது கால் இடுக்குகளில் ஏற்பட்ட பூஞ்சைத்தொற்றும், அதைத் தொடர்ந்து அதன் மேல் இரண்டாம் கட்டமாக ஏற்பட்ட பாக்டீரியா தொற்றுக்கும்தான்.

கால் விரல்களுக்கு இடையே அரிப்போடும், சீழ் கோத்தும் சிலருக்கு காய்ச்சலோடும் வரும் சேற்றுப்புண்ணுக்கு, குப்பையின் பேரிலேயே மருந்து என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா! நாட்டு மருந்தில் பழங்காலந்தொட்டு பயனளிக்கும் சித்த மருந்து, குப்பைமேனிக் கீரை. இந்த வாரம் அந்தக் குப்பையில் கிடைக்கும் மாணிக்கம் தரும் வெளிச்சத்தைப் பார்ப்போம்.

‘சித்திரமும் கைப்பழக்கம், தயையும் கொடையும் பிறவிக் குணம்’ என்பது தமிழ் அறிஞர் சொன்ன சூத்திரம். மனிதர்களுக்கு மட்டும் அல்லாது இது மூலிகைக்கும் பொருந்தும். குப்பைமேனி எனும் இந்த மூலிகையின் தாவரப் பெயர் அக்லிபா இண்டிகா (Aclypha indica).

இதன் குடும்பமான யூபோர்பியேசியா (Euphorbiacea) வகைத் தாவரங்களில் பெரும்பாலானவை மூலிகைகள். நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில் `அரிமஞ்சரி’ என்றும், நாட்டார் வழக்காற்றியலில் `பூனைவணங்கி’ என்றும் பேசப்படும் இந்த மூலிகை, வரப்பு ஓர வரப்பிரசாதம்.

கால் அரையிடுக்குகளில் கடும் அரிப்பைக் கொடுத்து, சில நாட்களில் அந்த இடத்தைக் கருமையாக்கி, பின் அந்தத் தோல் தடிப்புற்று, அடுத்த சில மாதங்களில் தடித்த இடம், அரிப்போடு நீர்ச்சுரப்பாக மாறும்
பூஞ்சைத்தொற்றுக்கு, குப்பைமேனியும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசலாம். சின்னச்சின்ன அடிபட்ட காயங்களுக்கு, கிராமப்புறத்தில் கைவைத்தியமாக குப்பைமேனியையும் உப்பையும் கூட்டி அரைத்துப் பூசுவர்.


`காணாக் கடி’ எனும் அர்ட்டிகேரியா நோயில் வரும் தடிப்புக்கும், கொசுக்கடி அல்லது அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் தடிப்புக்கும், குப்பைமேனியின் இலைச் சாற்றை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்கவைத்துத் தடவலாம். குப்பைமேனி இலைச்சாறு அரை லிட்டர் எடுத்தால், தேங்காய் எண்ணெய் 250 மி.லி எடுத்து, மெல்லிய தீயில் இலைச்சாற்றின் நீர் முழுவதும் சுண்டும் வரை காய்ச்சி, தைலமாக்கி எடுக்க வேண்டும். தோலின் நிறத்தைவிட சற்று அடர்ந்த நிறத்துடன் இருக்கும் (Hyperpigmented spots) பகுதியில், மேற்சொன்ன தைலத்தைப் பூசிவரலாம்.

குப்பைமேனி ஒரு கீரை. வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது. நெஞ்சுச் சளியுடன் வீசிங் எனும் இரைப்பும் தரும் நிலையில், குப்பைமேனி ஒரு சிறந்த கோழை அகற்றியாகச் செயல்படும். இலைச் சாற்றைக் கொடுக்கும்போது, சில நேரத்தில் உடனடியாக வாந்தி எடுக்கவைத்து, அதனுடன் கோழையையும் வெளியேற்றும் இயல்பு குப்பைமேனிக்கு உண்டு.

குப்பைமேனியின் உலர்ந்த பொடியை ஒரு கிராம் வெந்நீரில் அல்லது தேனில் கலந்து கொடுக்க, கோழை வருவது மட்டும் அல்லாமல், இருமலும் உடனடியாகக் கட்டுப்படும். மூக்குத்தண்டில், நெற்றியில் கபம் சேர்ந்து வரும் தலைபாரத்துக்கு குப்பைமேனி இலையை அரைத்து, நெற்றியில் பற்றுபோடலாம். உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். வயதான தாத்தா, பாட்டிகளுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன்கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

உடலைச் சுத்தப்படுத்தும் குப்பை இது!

குழந்தைகளின் உடல் நலத்துக்கு முக்கிய சவாலாக இருப்பது வயிற்றுப்புழுக்கள். புழுக்கொல்லி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் புழுக்களும் அதன் முட்டையும் முழுமையாக வெளியேறாது. இரவு எல்லாம் ஆசனவாயில் அரிப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு, ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க, புழுத்தொல்லை தீரும். மலக்கட்டை நீக்கி, மாந்தம் நீக்கி, சீரணத்தை சரியாக்கி, அதன் மூலம் புழு மீண்டும் வராது இருக்க கழிச்சலை உண்டாக்கி, இதனைக் குணப்படுத்தும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குப்பைமேனி இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து, இரவில் ஒன்றிரண்டு டீஸ்பூன் கொடுக்கலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.