குறுங்காடு வெள்ளையப்பனும் லட்சம் வவ்வால்களும்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1

நெ
டுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் புதர்ச்செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்து பரந்து நிற்கிறது ஒற்றை ஆலமரம். கிளைத்த கிளைகளில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான விழுதுகள் மண்ணில் வேரூன்றி நிற்பதால், நூறு கால் மண்ட பம் போல காட்சி அளிக்கிறது ஆலமரத்தின் அடிப்பகுதி.

நமக்கு இது மரம். ஆனால் லட்சக்கணக்கான பழம் திண்ணும் வவ்வால்களுக்கு இது குடியிருப்பு. மரத்தின் அடி யில் வெள்ளையப்பன் எனும் அய்யனார் கோயில் உள்ளது. மரத்தில் இருந்து ஒடிந்து விழும் சிறு குச்சியைக்கூட யாரும் தொடுவதில்லை. வவ்வால்களை வேட்டையாடுவதும் இல்லை.
இதுபற்றி பகுதி மக்கள் நம்மிடம் பகிர்ந்தது: ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளையப்பன் சுவாமி கோயிலுக்கு மண் சிற்பங்களைக் கொண்டு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து பூஜை நடத்தி வருகிறோம். மற்ற நேரங்களில் யாரும் இந்தக் காட்டுக்குள் செல் வதில்லை.
வீட்டுக்கொரு கழிப்பறை இல்லாத கிராமமாக இருந்தாலும்கூட இயற்கை உபாதைக்காக இந்தக் காட்டுக்குள் யாரும் செல்வதில்லை. இதேபோன்று, பழங்களை உண்ணும் லட்சம் வவ்வால் கள் இக்காட்டில் உள்ளன. இரைதேடி இரவில் நெடுந்தூரம் செல்லும் இந்த வவ்வால்கள் அதிகாலையில் ஆலமரத்துக்கு திரும்பும்.
காட்டை வந்தடையும் வேளையில் வவ்வால்கள் எழுப்பும் சத்தத்தில்தான் ஊரே விழித்தெழுகிறது. இந்தக் காடும், காட்டில் உள்ள வவ்வால்களும் இந்தக் கிராமத்தினரைப் பொறுத்தவரை பிறந்த மண்ணும் உற்ற உறவும்போல. வவ்வால்களுக்காகவே விழாக் காலங்களில் கூட ஊருக்குள் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை, வேட்டையாடுவதும் இல்லை. அடுப்பெரிக்க விறகை நம்பி இருக்கும் ஊர்தான் என்றாலும் இந்த காட்டுக்குள் சிறு சுள்ளியைக் கூட எடுப்பதில்லை என்கின்றனர் பயபக்தியுடன்.
எது எப்படியோ, வெள்ளையப்பன் சுவாமியால் குறுங்காடும், அருகி வரும் ஒரு உயிரினமும் தப்பி பிழைத்திருக்கிறது. இயற்கை பல வழிகளில் சுரண்டப்பட்டு வரும் நிலையில், சாமியின் பெயரால் ஒரு வனமே சிறு கீறல் கூட இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதுதான் இதன் விஷேசமே. சுற்றுச் சூழலைக் காக்க நமக்கு நிறைய வெள்ளையப்பன்கள் தேவைப்படுகிறார்கள்.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,809
Likes
12,319
Location
Chennai
#3
தீபாவளி கூட பட்டாசு வெடிக்க மாட்டாங்கனு ஒரு வௌவால் கிராமம் நியூஸ்ல கேட்ட ஞாபகம் ஆன்ட்டி..ஒரு வேளை அதே ஊர் தான் இதுவோ:unsure::):)
சாமி கோவில்ன்னு அங்க அங்க இருக்றதால தான் ஏதோ இந்த மட்டும் மரமும் காடும் சிலது பிழைச்சி கிடைக்குதுல ஆன்ட்டி நம்மூர்ல:p:p
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.