குளிர்கால சளித் தொல்லைகள் தீர! எளிய மருத&#3021

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=1]குளிர்கால சளித் தொல்லைகள் தீர! எளிய மருத்துவம்!![/h]மழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.

Cold Treatment

இந்தச் சளித் தொல்லை வந்தால் தலையெல்லாம் பாரமாக இருக்கும். மூச்சு எடுக்கவே இயலாது. போதாத குறைக்கு மூக்கால் சளி (mucus) வழிந்தோடும்.
முறை – 1

நன்மை – இதைச் செய்வதால் நிச்சயம் உடனேயே மூக்கடைப்பு எடுபட்டுவிடும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. (ஆனால் கண்ணை மூடிக் கொள்வது சிறந்தது)http://www.kalvikalanjiam.com
ஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஊதி சாம்பல் அற்ற நல்ல தணலாக்கிக் கொண்டு.
கொஞ்சச் சீனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே தணல் மேல் போட்டவுடன் ஒரு கருகிய புகை வரும். அதை அப்படியே மூக்கால் இழுத்து எடுங்கள்.
ஒன்றுமே நடக்காது மாற்றத்தை உடனேயே உணர்வீர்கள்.
முறை -2

நன்மை – எத்தனை மாத்திரை போட்டாலும் என்ன வைத்தியம் செய்தாலும் இந்தத் தலைப்பாரம் குறைவதில்லை அதை இந்த சின்ன வைத்தியம் தீர்த்து விடும்.

ஒரு சட்டை ஊசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மிளகை குத்தி எடுத்து விட்டு அதை எரியும் நெருப்பில் பிடியுங்கள்.
சிறிது நேரத்தில் அம் மிளகு எரிந்து ஒரு மணத்துடன் புகை வரும் அதை அப்படியே மூக்கால் இழுங்கள். சாதுவான எரிச்சல் இருக்கும் ஆனால் மண்டைப் பாரம் சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.
இதில் எந்தப் பெரும் செலவும் இல்லைதானே பயன்பெறுங்கள்.
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#2
Re: குளிர்கால சளித் தொல்லைகள் தீர! எளிய மருத&a

Your effort to share this information here is appreciated
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.