குளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எப&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எப்படி?அதீத குளிர், குளிர் காற்று, பனிஇவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்றினாலும்பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன.

அதில் முக்கியமானது காதுவலி. இப்போது குளிர் காலத்தில் காதுகளை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

* குளிர் காலத்தில் வெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்படவழியில்லை.

* பல சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். பால், மற்றும் பால் சம்பந்தப்பட்டஉணவுகள், முட்டை, கோதுமை, சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட், சர்க்கரை, பீர் முதலியவைசேர்த்தப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது நாட்பட்ட காது தோற்று நோய்க்குக் காரணம். பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சளி மற்றும் கோழை உண்டாகக் காரணமாகின்றன. இப்பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் இந்த தொற்று ஏற்படாமல் காதுகளைப்பாதுகாக்கலாம்.

* குளிர் பிரதேசங்களில் வேலை செய்யும்போது, நம் உடம்பில் இரத்தம் உடலின் முக்கிய பகுதிகளுக்கு அதிகம் பாய்வதால் காதுகள், கைகள் முதலிய பாகங்கள் சில்லிடுகின்றன. அந்த சமயங்களில் காதுகளை மப்ளர் கொண்டு மூடி வெதுவெதுப்பாக வைத்திருக்கவும். கைகளை கிளவ்ஸ் போட்டு பாதுகாக்கலாம்.

* குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

* காதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், நீங்களாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்யமுயற்சிக்க வேண்டாம்.

* மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

* காதுகளின் கேட்கும் திறன் போய்விட்டால், மறுபடி சரி செய்ய முடியாது. நினைவிருக்கட்டும்.

காதுகளில் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம்:

* சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்தபொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும்.

* காதுகளுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான ஜாதிக்காய் எண்ணெயை காதுகளைச் சுற்றி தடவவும்.

* காதுகளில் வலியோ, குடைச்சலோ அல்லது அரிப்போ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.அவருடன் பேசுவதால் அனாவசியமான பயங்கள் விலகும். தக்க சிகிச்சையும் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. இந்த மூன்றில் ஒன்றுபாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். அதனால் இதற்கு என்றே இருக்கும் ENT (Ear, nose, throat) மருத்துவர்களை நாடவும்.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,239
Likes
12,714
Location
chennai
#2
Re: குளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எ&#29

useful sharing.thank u sis
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.