குழந்தைகளின் அறை என்பது - Kids Bedroom Ideas

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளின் அறை என்பது...


குழந்தைகளின் அறை என்பது அவர்கள் குதூகலமாக இருக்கும்படி அமைய வேண்டும். சுவரில் கலர் கலரான பெயிண்டிங்... படங்கள்... ஓவியங்கள்... டிசைன்கள் என்றிருந்தால் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்.

குழந்தைகளின் எண்ணங்கள், கற்பனைகள், விருப்பங்கள் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் அறை அமைய வேண்டும். அவர்களுக்கு பிடித்த நிறங்களில் பெயின்டிங், கார்ட்டூன் உருவங்கள் ஆகியவற்றையும் அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான அறையை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை,

o எந்த குழந்தைக்காக அறை உருவாக்கப்படுகிறதோ... அந்தக் குழந்தையுடன், அறையை உருவாக்கும் கட்டிடக் கலை நிபுணரும் கலந்து பேசி அறையை உருவாக்க வேண்டும்.

o குழந்தைக்கு எத்தனை வயதோ... அதுக்கு தக்கபடி அவர்களுடைய விருப்பங்களும், கற்பனைகளும் மாறுபடும். அதற்கு தகுந்தாற்போல் அறையை மாற்றுவதும் நல்லது.

o ஈஸியாக மாற்றி அமைக்குமாறு இணைப்புகளை பொருத்துவது நல்லது.

o குழந்தைகள் படுக்கும் படுக்கைக்கு அடியில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வைக்க வசதி செய்து தரவேண்டும். மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களே பராமரிக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

o குழந்தைகளுக்கு வயது அதிகமாகும்போது, விளையாட்டுப் பொருட்களை அகற்றிவிட்டு, அவர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான கருவிகளை வைத்துக் கொள்வார்கள்.

o குழந்தைகளின் அறைகளில் வைக்கப்படும் பர்னிச்சர் ஐட்டங்களில் முனைகள் கூர்மையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வளவளப்பாக... பாலீஷ் செய்து விடுவது நல்லது. ஏனென்றால் விளையாட்டு ஆர்வத்தில் இருக்கும்போது கூரான முனைகள் குழந்தைகளை காயப்படுத்திவிடும்.

o குழந்தைகள் வளர்ந்து சிறுவர், சிறுமியாக ஆன பின்னர், அதிகமாக கிறுக்குவதற்கும், வரைவதற்கும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக போர்டு வைத்துவிட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது வரைந்து கொண்டிருப்பார்கள். சுவர்களில், கண்டகண்ட இடங்களில் வரைவதை விட்டுவிட்டு போர்டுகளில் வரைவதால் அவர்களின் திறமையும் பளிச்சிடும்.

o வயது அதிகமாகும் போது அவர்களின் ஆசையும் வேறு மாதிரியாக இருக்கும். வயதுக்குத் தக்கபடி வேறு வேறு படங்களை ஒட்டுவார்கள். அதை சுட்டிக் காட்டினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

o சிறுவர், சிறுமியர் எளிதாக ஏறி பயன்படுத்தும் வகையாக பர்னிச்சர்களின் உயரத்தை குறைத்து சின்னதாக வைப்பது நல்லது. மேலே உயரத்தில் பெட் இருந்தால் பக்கவாட்டில் தடுப்புகளை கண்டிப்பாக வைக்கவும்.

o இவற்றை எல்லாம் பிளைவுட்டில் செய்தால் வளர்ச்சிக்கு தக்கபடி மாற்றுவதற்கு வசதியாக இருக்கும்.

o எப்போதுமே குழந்தைகளின் அறை, பெற்றோரின் அறையை ஒட்டி அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தூங்கும்போது இரவில் கனவு கண்டு பயந்து அழுதாலோ அல்லது ஏதாவது அவசரத் தேவை என்றாலோ பெற்றோர்கள் உடனே போய் பார்க்குமாறு அருகில் அறை இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பெற்றோரின் அறையிலிருந்து, பிள்ளைகளின் அறைக்கு செல்வதற்கு வழி இருக்குமாறு வைத்துக் கொள்வது நல்லது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.