குழந்தைகளின் வளர்ச்சியில் தாய்மார்க்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

Strawberry

Commander's of Penmai
Joined
May 27, 2016
Messages
1,500
Likes
1,756
Location
srilanka
#1
குழந்தைகளின் வளர்ச்சியில் தாய்மார்க்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை....!
குழந்தைகளுக்கு பிறந்த பின் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் அளிக்க வேண்டியது தாய்மாரின் கடமை. குழந்தைகள் திட உணவை உண்ண தொடங்கும் நிலையில் கூட அவர்களுக்கு சத்துள்ள, உடலின் உறுப்புகள், உள்ளுறுப்புகள் மற்றும் அவர்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிலைப்படுத்த உதவும் உணவுகளை அளிப்பது அவசியம்.

குழந்தைகள் அவர்தம் வளர்ச்சிக்கு போதுமான அளவு உறக்கம் அவசியம். குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் அதிக நேரம் உறங்கியே இருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். குழந்தைகளுக்கு தகுந்த நேரத்தில் இடைவெளி விட்டு பால் அளிக்க வேண்டியது தாய்மார்களின் கடமையாகும்.

குழந்தை இருக்கும் இடம், குழந்தையை தொடும் நபர்கள், குழந்தாய் எடுத்து விளையாடும் பொருட்கள் மற்றும் தவழ்ந்து விளையாடும் இடங்கள், படுத்து உறங்கும் இடம் என அனைத்து பகுதிகளும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அவர்கள் உண்ணும் உணவு மிக சுத்தமான பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்ப்பது அவசியம்.குழந்தைகள் வளர்ச்சியில் அந்தந்த கால கட்டத்தில் தேவைப்படும் சத்துக்களை தவறாமல் தருவது போல், அந்த அந்த வயதில் போடா வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் பிற ஊசிகளை குழந்தைகளுக்கு தறவாமல் போட்டு விட வேண்டும்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,504
Likes
35,501
Location
mysore
#2
Thank you @Strawberry for sharing very useful information on குழந்தைகளின் வளர்ச்சியில் young mothers கவனத்தில் கொள்ள வேண்டியவை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.