குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்..1

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும். சில பெற்றோர்கள் தாம் சொல்வதைக் கேட்டு தமது இலட்சியத்தை கடைப்பிடிப்பார்கள் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.
இலட்சியங்களாவன:
* கட்டுப்பாடு
* வார்த்தையைக் காப்பாற்றுதல்
* பணிந்து நடத்தல்
* பண்பட்டவராக இருத்தல்
* உண்மையாயிருத்தல்
* குடும்பத்தாரிடையே நல்ல பழக்கம்
பெற்றோர்களும் குழந்தைகளும் பள்ளியிலும் பள்ளி விடுமுறையிலும் சில குறிப்பிட்ட திட்டப்படி நடக்க வேண்டும். இப்பழக்கம் குழந்தைகளை எப்போதும் கட்டுப்பாடுடன் இருக்கச் செய்யும்.
குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும்போது அவர்களை தயாராக்கி சில பணிகளைச் செய்ய வைக்க வேண்டும். புதிய புத்தகங்களுக்கு அட்டை போடுதல், பையை நிரப்புதல், தங்கள் சீருடைகளைத் தயாரித்தல், மதிய உணவு பொட்டலம் கட்டுதல் முதலிய தன் ஊக்குவிப்பு முயற்சிதான். இது நன்றாக வேலை செய்யும்.
புதிய சந்தர்ப்பம், சூழலில் குழந்தைகள் செயல்பட உதவி செய்யும். புதிய கல்வி ஆண்டுத் துவக்கம், புதிய இடம் முதலியவை. பெற்றோர் மனது எளிதாகி குழந்தைகளின் கல்வியில் கவனம் ஏற்பட அவர்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும். குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியும். குழந்தைகளுக்கு, பெரியோருக்கு கீழ்ப்படிதல் மற்றும் மரியாதை கொடுத்தல் பற்றி சொல்லித் தரவும்.
தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் விருந்தினர் ஆகியோரைக் கடவுளாகக் கருத வேண்டும். குழந்தைகள் தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் விருந்தினர் ஆகியோருக்கு கீழ்ப்படிந்து மரியாதையுடன் நடக்க வேண்டும். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மிகவும் இளையவர்கள். அவர்களை சீர் செய்ய முடியாது என்றும் எண்ணுவார்கள். அவர்கள் முதலில் வளரட்டும் என்றும் கூறுவார்கள். இரும்பைச் சூடாக இருக்கும்போது அடித்தால் நாம் விரும்பிய வடிவைப் பெற முடியும். இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு செடியை நீங்கள் வளைக்க முடியாதபோது ஓங்கி வளர்ந்த மரத்தை எப்படி வளைப்பீர்கள்? இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கலாம். இளம் பருவத்தில் கோபப்படாதீர்கள். அவர்களைப் பயப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். வேகமாகச் செய்திகளை மேலும் மேலும் சொல்லிக்கொண்டேயிருக்காதீர்கள்.
கீழ்ப்படிதல் என்பது ஓர் அடிப்படைப் பண்பு. இது அவர்களிடையே ஒரு வழக்கமாக மாற வேண்டும். இதற்கு மாறாக உங்கள் குழந்தையை பெரியோரைக் கண்டால் வணக்கம் செய் என்று உத்தரவு போடவும் கூடாது. குழந்தையே இப் பண்பினை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தை எப்போதும் இல்லையென்று சொல்லாது. அவர்கள் மீது ஆற்றலைப் பிரயோகிப்பது நமது நோக்கை அடையப் பயன்படாது.
குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவற்றை சொல்லிக் கொண்டேயிருங்கள்:
* பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்லவும்.
* பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து செல்லவும்.
* பள்ளியின் வீட்டுப் பாடத்தை திட்டப்படி நேரப்படி முடிக்கவும்.
இவைகள் எல்லாம் கட்டுப்பாட்டுடன் செய்யப்பட வேண்டும்.
குழந்தை உண்மையை மட்டும் பேச வேண்டும். உண்மை எப்போதும் வெற்றிபெறும். குழந்தைகளை இந்த விஷயத்தில் நல்ல தெளிவான அறிவு வரும்படி செய்ய வேண்டும். உண்மைதான் எப்போதும் வெற்றியைத் தரும். "சத்திய மேவ ஜெயதே" - உண்மை மட்டும் வெற்றியைக் கொடுக்கும். இது உபநிஷத்தின் சாரம். எந்த இடத்திலும் பொய் பேசக்கூடாது.
குழந்தைகளை பூரண திருப்தி செய்ய ஹரிச்சந்திரன் மற்றும் மகாத்மா காந்தி பற்றிய கதைகளைச் சொல்லவும். ஹரிச்சந்திரா நாடகத்தை காந்திஜி குழந்தைப் பருவத்தில் பார்த்து அதன்பின் சத்திய வழி மற்றும் உண்மை வழியை பின்பற்றினார். பின்னர் தம் வாழ்நாளில் முழுக்க முழுக்க உண்மையை மட்டும் பேசினார். தன் சுயசரிதை நூலின் தலைப்பையே 'எனது சோதனைகள்' என்று எழுதினார்.
குழந்தைகளுக்கு படுக்கும் முன் சொல்லப்படும் கதைகளில் வீரம் மிக்க தைரியமிக்க கதாநாயகர்கள் பற்றிச் சொல்லவும். இதனால் குழந்தைகள் வீரமும் தைரியமும் ஜெயிக்கும் என்றும், ஆனால் கோழைத்தனம் தோற்றுவிடும் என்றும் புரிந்துகொள்வார்கள்.
நீங்கள் ஒரு பொய் சொன்னால், குழந்தைகளும் பொய் சொல்லத் தொடங்கும். எனவே அவர்களுக்கு முன் கவனமாக இருங்கள். சில பெற்றோர்கள் பொய் சொல்வதால் தங்கள் குழந்தைகள் நன்மையடைவார்கள் என நம்புகிறார்கள். ஆனால் இந்த உண்மையை குழந்தைகள் அறிந்த பின் தங்கள் பெற்றோர் பொய் பேசுவதால் நாமும் பேசலாம் என்று எண்ணத் தொடங்குவார்கள். முடிந்த அளவு பொய் பேசாமல் இருப்பதுதான் நல்லது. இல்லாவிடில் குழந்தைகள் மற்றொரு பொய் சொல்லுமளவிற்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தாதீர்கள்.
குழந்தைகளுக்கு விருந்தினரை வரவேற்கவும் அவர்களோடு நன்கு பழகவும் கற்றுக் கொடுக்கவும். விருந்தினரைப் பார்த்ததும், வணக்கம் சொல்லும் பழக்கம் வர வேண்டும்.
மாமா உள்ளே வாருங்கள், மாமா இங்கு அமருங்கள் என்ற வார்த்தைகள் விருந்தினரை மகிழ்விக்கும். இவர்களது நல்லொழுக்கத்தை விருந்தினர்கள் கண்டு வியப்படைவார்கள்.
உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதே மாதிரி நீங்கள் பிறரை நடத்துங்கள். இத்தகைய கருத்தை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பிறர் விரும்பத்தக்க வகையிலும், பண்பாடு உள்ள வகையிலும் பிறரிடம் நடந்துகொள்ள கற்றுத்தர வேண்டும். அதேசமயம் நாம் நம் குழந்தைகளோடு பழகும் போது இதேபோல் பழக வேண்டும். நமக்குப் பல பிரச்சினைகள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. குடும்பத் தலைவர் நல்ல நடத்தையுடன் நடந்தால், குழந்தைகள் அதைப் பின்பற்ற துவங்கிவிடும். நாம் அவர்களுக்கு முன் உதாரணமாக நடக்க பழகிக்கொள்ள வேண்டும். குடும்பம் என்றால், நாம் பல விழாக்களை ஏற்பாடு செய்வோம். பிறந்த நாள் விழா, பெயர் சூட்டும் விழா, புதுமனை புகுவிழா முதலியவை. நம் விருந்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்வரவு கொடுக்க சொல்லித் தர வேண்டும். நன்னடத்தை என்பது முதியோராலும், இளையோராலும் விரும்பப்படுவதாகும். விருந்தினரை வரவேற்பது என்பது ஓர் இயல்பான திறமையாகும். அவர்களைக் கவனமாக பார்த்துக்கொள்வது என்பது ஒரு நல்ல நாகரிகம். நாகரிகமான நடத்தை, பெருமையும் புகழும் தரும். நன்னடத்தை இல்லாவிடில் வேண்டா விளைவுகள் வரும். பெருமை குறையும்.
ஒவ்வொரு குழந்தையும் தான் வளரும்போது சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல ஆடை அணியும் பழக்கத்தை சொல்லித் தர வேண்டும். ஆடை மனிதனை முழு மனிதன் ஆக்குகிறது.
-continue

-ஏ.ஆர்.ராமராஜு@koodal
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.